28.8 C
Chennai
Sunday, Jul 27, 2025
25 sundaikai vathal kuzhambu
ஆரோக்கிய உணவு

சூப்பரான சுண்டைக்காய் வத்தக்குழம்பு

அனைவருக்குமே வத்தக்குழம்பு என்றால் ரொம்பவே பிடிக்கும். அதிலும் சுண்டைக்காய் வத்தக்குழம்பு மிகவும் சுவையாக இருக்கும். அதுமட்டுமின்றி, சுண்டைக்காய் உடலுக்கு ஆரோக்கியமானதும் கூட. இதனை சாப்பிட்டால், உடலில் உள்ள கிருமிகள் அழிந்துவிடும். சுண்டைக்காய் வத்தக்குழம்பை சூடாக இருக்கும் சாதத்துடன் சேர்த்து நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி சாப்பிட்டால், அருமையாக இருக்கும்.

சரி, இப்போது அந்த சுண்டைக்காய் வத்தக்குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போம். குறிப்பாக இந்த சுண்டைக்காய் வத்தக்குழம்பை பேச்சுலர்கள் கூட முயற்சிக்கலாம்.

Sundakkai Vathal Kuzhambu
தேவையான பொருட்கள்:

சுண்டைக்காய் வத்தல் – 1/4 கப்
புளி – 1/2 எலுமிச்சை அளவு
சின்ன வெங்காயம் – 15 (தோலுரித்தது)
பூண்டு – 10 பற்கள் (தோலுரித்தது)
சாம்பார் பொடி – 3 டீஸ்பூன்
தண்ணீர் – 1 கப்
நாட்டுச்சர்க்கரை – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

தாளிப்பதற்கு…

நல்லெண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
கடலைப்பருப்பு – 3/4 டீஸ்பூன்
வெந்தயம் – 1/4 டீஸ்பூன்
வரமிளகாய் – 2
கறிவேப்பிலை – சிறிது

செய்முறை:

முதலில் புளியை சுடுநீரில் ஊற வைத்து, சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சுண்டைக்காய் வத்தலை சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும்.

பிறகு அதில் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து 2 நிமிடம் வதக்கி, பின் சாம்பார் பொடி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

பின் அதில் புளிச்சாறு மற்றும் உப்பு சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட வேண்டும். குழம்பில் இருந்து எண்ணெய் பிரிய ஆரம்பிக்கும் போது, அதில் சுண்டைக்காய் சேர்த்து 5 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க விட வேண்டும்.

அடுத்து அதில் நாட்டுச்சர்க்கரை சேர்த்து கிளறி இறக்கினால், சுண்டைக்காய் வத்தக்குழம்பு ரெடி!!!

Related posts

வயது வந்த பெண்களுக்கு ஊட்டம் தரும் உளுந்து -தெரிஞ்சிக்கங்க…

nathan

கொழுப்பை கரைக்கும் வாழை தண்டு தயிர் பச்சடி

nathan

நீங்கள் அதிகமாக கடைகளில் சாப்பிடும் நபரா ? அவசியம் படியுங்கள் !

nathan

உடல் ஆரோக்கியத்திற்கு புதினாக்கீரை!…

sangika

அறுகம்புல் சாறு தயாரிப்பது எப்படி? அதன் பலன்கள் என்ன?

nathan

ஏன் காலையில் கேரட் சாற்றுடன் இஞ்சி சாறு கலந்து குடிக்க வேண்டும் என்று தெரியுமா?

nathan

விக்கலால் அவதிப்படுகிறீர்களா?சூப்பரா பலன் தரும்!!

nathan

அவதானம்! தாய்ப்பால் கொடுக்கும் போது இதை சாப்பிடாதீர்கள்.! குழந்தைக்கு ஏற்பட வாய்ப்பு .!

nathan

ஆண் மீனைவிட பெண் மீனைத்தான் சாப்பிடவேண்டும். ஏன்.. எப்படி?

nathan