பானிபூரியில் புழு மிதந்ததையடுத்து விற்பனையாளரை பொதுமக்கள் கம்பியில் கட்டி வைத்து தர்மஅடி கொடுத்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் பானி பூரி குறித்து பல சர்ச்சை செய்திகள் வெளியாகி வருகின்றது. பானி பூரி தண்ணீரில் சிறுநீர் கலப்பது, தவளை மிதப்பது போன்ற பல சம்பவங்கள் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இது போன்ற ஒரு சம்பவம் சென்னையில் நடந்துள்ளது. சென்னை பட்டரவாக்கம் பகுதியில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் மற்றும் தொண்டர்கள் சாலையோரம் இருந்த பானிபூரி கடையில் பானிபூரி வாங்கி சாப்பிட்டுள்ளனர்.
அப்போது உருளைக்கிழங்கில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அதனை சோதனை செய்த போது அதில் புழு இருந்தது தெரிய வந்தது. மேலும் கெட்டுப்போன உருளைக்கிழங்கை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து பொதுமக்கள் ஒன்றுதிரண்டு பானிபூரி விற்றுவந்த வடமாநில இளைஞரை கம்பியில் கட்டி வைத்து விசாரித்த போது இது போன்ற 15 கடைகள் உள்ளதாகவும் இதற்கு நான் முதலாளி இல்லை எனவும் கூறினார்.
வடமாநிலத்தவர்கள் இருபது நபர்கள் ஒரே வீட்டில் தங்கி பானிபூரி செய்து வந்தது தெரியவந்தது. பின்னர் வடமாநிலத்தவரை வெளுத்து வாங்கிய ஊர் பொதுமக்கள் உருளைக்கிழங்கு, பானிபூரியை கீழே கொட்டினர். மேலும், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.