36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
அழகு குறிப்புகள்

சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட படக்குழு ! சன்னி லியோன் பட டீசரை வெளியிடும் ஆர்யா..

சன்னி லியோன் படத்தின் டீசரை நடிகர் ஆர்யா வெளியிடுவதாக படக்குழு அறிவித்துள்ளது.

பிரபல பாலிவுட் நடிகையான சன்னி லியோன் முதல்முறையாக தமிழில் நடிக்கும் திரைப்படம் ‘ஓ மை கோஸ்ட்’.

அந்த படத்தை அறிமுக இயக்குனர் யுவன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் சன்னி லியோனுடன் காமெடி நடிகர்கள் சதிஷ், யோகிபாபு ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இவர்களுடன் நடிகை தர்ஷா குப்தா, மொட்டை ராஜேந்திரன், ரமேஷ் திலக், டிக்டாக் புகழ் ஜி.பி.முத்து உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அஜீஷ் அசோக் இசையமைக்கும் இப்படத்திற்கு பிரவீன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஹாரர் காமெடி படமாக உருவாகி வரும் இப்படத்தை வீரசக்தி மற்றும் சசிகுமார் ஆகியோர் இணைந்து தயாரித்து வருகின்றனர்.

தற்போது இப்படத்தின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இப்படத்தின் கேரக்டர் போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் டீசரை நாளை காலை 11 மணிக்கு நடிகர் ஆர்யா வெளியிடுகிறார். இந்த படத்தில் சன்னி லியோன் எப்படி நடித்திருக்கிறார் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.

Related posts

சரணடையும் இராணுவ வீரர்கள்… பலர் தப்பி ஓட்டம்: திகைக்க வைக்கும் உக்ரைன்

nathan

சருமம், பாதம் மற்றும் முகத்தில் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பாதுகாத்துக்கொள்ள

nathan

உடலை அழகாக வைத்துக் கொள்ள கடலை மாவு

nathan

சனியின் மாற்றம்: இந்த ராசிகளின் காட்டில் பண மழை

nathan

நடிகை அம்பிகா காட்டம்! சிறாராக இருந்தாலும் 100 வயதாக இருந்தாலும் குற்றம் குற்றமே

nathan

வீட்டில் கிடைக்கும் பொருட்களை கொண்டே பாத வெடிப்பை போக்கலாம்

nathan

இந்த 5 ராசிக்காரங்க காதலில் ஏமாற அதிக வாய்ப்பிருக்காம்…

nathan

உங்கள் குழந்தையை புத்திசாலியாக மாற்றுவதற்கு என்ன வகையான உணவை உண்ண வேண்டும் என்று தெரியுமா?

nathan

முயன்று பாருங்கள்.. தயிரை வைத்து நம் அழகை அதிகரிப்பது எப்படி?

nathan