pregnancy 550
கர்ப்பிணி பெண்களுக்கு

குழந்தையின் முதல் வளர்ச்சி தாயின் வயிற்றில்

குழந்தையின் வளர்ச்சி என்பது பிறந்த பிறகு குறிப்பிடப்படும் வளர்ச்சி அல்ல; தாய் கருவுற்றிருக்கும் போதிலிருந்தே தொடங்குவது. குழந்தையின் மூளை மற்றும் உடல் வளர்ச்சி நிர்ணயிக்கப்படுவதும் தாயின் வயிற்றில் இருந்துதான். கர்ப்ப காலத்தில் தாயின் உடல் மற்றும் மனநிலையை பொறுத்தே குழந்தையின் வளர்ச்சியும் முடிவு செய்யப்படுகிறது.

தாயின் மகிழ்ச்சியான மனநிலை மற்றும் ரத்தத்திலிருந்து வரும் சத்துணவே குழந்தைக்கு ஊட்டமாக கருவில் சேர்கிறது. இரண்டு செல்லாக இருக்கும் ஓர் உயிர், தாயின் வயிற்றிலிருந்து மூன்று கிலோ குழந்தையாக வெளிவருகிறது. ஆக தாயின் ஆரோக்கியமே, குழந்தையின் ஆரோக்கியம்.

முதல் மூன்று மாதங்கள் (1-3) – உடல் உறுப்புகள் உருவாகின்ற காலம்
பெரும்பாலான பெண்களுக்கு தான் கருவுற்றிருப்பதாக முதல் மாதத்திலேயே தெரியாது. இதயம், கல்லீரல், மூளை போன்ற முக்கிய உறுப்புகள் வளர்ச்சியடைவது முதல் மூன்றுமாத காலத்தில்தான். தாய் ஊட்டச்சத்து உணவுகளை சாப்பிடுவதால் மட்டுமே ஆரோக்கியமான குழந்தையை உருவாக்க முடியும்.

இரண்டாவது மூன்று மாதங்கள் (4-6) – குழந்தையின் உடல்வளர்ச்சி
இந்த காலகட்டத்தை தாய் மகிழ்ச்சியான காலகட்டமாக அமைத்துக் கொள்வது நல்லது

மூன்றாவது மூன்று மாதங்கள் (7-9) – குழந்தையின் எடை அதிகரித்தல்
குழந்தை முழுமையாக வளர்ந்து இருக்கும். சரிபாதி ஊட்டச்சத்து தாயிடமிருந்து குழந்தைக்கு செல்லும். இந்த காலத்தில் கருவுற்றோர், எளிமையான வீட்டு வேலைகளை செய்யலாம். ஆனால் கடினமான உடலுழைப்புகளை செய்யக் கூடாது. கீழே விழுவது, வழுக்கி விழுவது போன்ற விபத்துகள் நடைபெறாமல் பார்த்து கொள்வது நல்லது. கர்ப்பிணிகள் ஒய்வு மற்றும் ஊட்டச்சத்து உணவுகளை கட்டாயமாக்குவது குழந்தைக்கும் தாய்க்குமான ஆரோக்கியத்தை வலுப்படுத்தும்.
தம்பதியர் கருத்தரிக்க திட்டமிடும்போதே, போலிக் ஆசிட் மாத்திரைகளை மகப்பேறு மருத்துவரின் ஆலோசனையுடன் சாப்பிடலாம். போலிக் ஆசிட், இரும்பு சத்து, கால்சியம் போன்றவை மூளை மற்றும் முதுகெலும்பு வளர்ச்சிக்கு உதவும். தண்டுவடம், கபாலம் சரியாக வளராமல் இருந்தால், இதை சரி செய்ய போலிக் ஆசிட் மாத்திரை முக்கியமாகிறது.

⭕ஊட்டச்சத்து குறைபாடு.. கவனிக்க.

⭕ உணவு, ஊட்டச்சத்து குறைந்தால் உடல் மற்றும் மூளை வளர்ச்சி தாமதமாகும், பாதிப்புகளும் ஏற்படலாம்.

⭕ நாளாமில்லா சுரப்பிகள் பிரச்னை இருந்தாலும் வளர்ச்சி சீராக இருக்காது.

⭕ தைராய்டு சுரப்பி குறைந்திருந்தால், குழந்தையின் மூளை வளர்ச்சி பாதிக்கப்படும். தைராய்டு மாத்திரைகளை சாப்பிட்டு குழந்தையை நார்மலாக வளர்க்க முடியும்.

⭕ குழந்தை பிறந்த பின், 3-4 நாட்களுக்குள் தைராய்டு டெஸ்ட் செய்து கொள்வது நல்லது.
pregnancy%20550

Related posts

தாய்ப்பாலா, புட்டிப்பாலா… குழந்தை எப்போது கண்டுபிடிக்கும் தெரியுமா?

nathan

கர்ப்ப கால நீரிழிவு

nathan

வயிற்றில் வளரும் குழந்தை ஆரோக்கியமான எடையுடன் இருக்க வேண்டுமா? இதோ சில டிப்ஸ்!

nathan

தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபடுபவர்கள் கட்டாயம் இத படிங்க!…

sangika

வலி நீக்கும் ஹிப்னோபெர்த்திங் பிரசவம்!

nathan

தாய்மார் தமது பாற்சுரப்புக் குறைவாக உள்ளது என்றெண்ணிக் கவலைப்படுகின்றீர்களா உங்களுக்கான தீர்வு இதோ

sangika

குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளைப் பற்றிய சில வியப்பூட்டும் உண்மைகள்!

nathan

குழந்தை சிவப்பாக பிறக்க.

nathan

கர்ப்பிணி தாய்மார்களுக்கு தேவையான சத்துள்ள உணவுவகைகள்

nathan