மதியம் சாப்பிட்ட பின்னர் சில விடயங்களை செய்யகூடாது. கீழே கொடுக்கப்பட்ட செயல்களை உணவுக்கு பின்னர் தவிர்த்தால் உண்ட உணவின் முழு நன்மையையும் பெறலாம்.
புகைப்பிடித்தல்
புகைப்பிடிப்பது என்பது பொதுவாகவே உடலுக்கு தீங்கு செய்யக்கூடியது தான். ஒரு சிகரெட் புற்றுநோயை உண்டாக்கும் 60 கார்சினோஜென்களைக் கொண்டிருக்கும். மேலும் இதில் நிக்கோட்டின், டார் போன்றவையும் உள்ளது. இத்தகைய சிகரெட்டை உணவு உட்கொண்டதும் பிடித்தால், அது 10 சிகரெட்டைப் பிடித்ததற்கு சமமாம்.
நடனம் வேண்டாம்
வயிறு நிறைய உணவு உட்கொண்டதும் நடனம் ஆடினால், குடலால் உணவில் உள்ள சத்துக்களை உறிஞ்சுவது தடுக்கப்படும்.
குளியல்
மதிய உணவு என்றல்ல, பொதுவாகவே உணவுகளை உண்டதும் குளித்தால், வயிறு மற்றும் செரிமான மண்டலத்தில் இரத்த ஓட்டம் குறைந்து, அவற்றில் செயல்பாட்டில் இடையூறு ஏற்படும்.
சூடான டீ
டீயில் உணவில் உள்ள எசன்ஸை உறிஞ்சும் பொருள் உள்ளது. அதுவும் டீயில் உள்ள டானின் என்னும் பொருள், உண்ட உணவில் உள்ள புரோட்டீனை உடல் உறிஞ்சுவதில் இடையூறை ஏற்படுத்தும்.
தூக்கம்
மதிய உணவு உண்டதும் குட்டி தூக்கம் போடும் பழக்கம் பலருக்கும் உண்டு. இப்படி தூங்கினால், இரைப்பையில் உற்பத்தியாகும் செரிமான நீர் அப்படியே உணவுக்குழாய் வழியே மேலே எழும்பி, நெஞ்செரிச்சலால் அவஸ்தைப்படக்கூடும்.