27.8 C
Chennai
Tuesday, Jan 27, 2026
07 sambar 600
சமையல் குறிப்புகள்

வறுத்து அரைச்ச சாம்பார்

 

இங்கு கேரளா பாரம்பரிய ரெசிபியான வறுத்து அரைச்ச சாம்பார் ரெசிபியின் செய்முறையானது கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை செய்து சுவைத்துப் பாருங்கள்.

Varutharacha Sambar: Onam Special Recipe
தேவையான பொருட்கள்:

துவரம் பருப்பு – 1 கப் (நீரில் ஊற வைத்து கழுவியது)
முருங்கைக்காய் – 2 (நறுக்கியது)
கேரட் – 2 (நறுக்கியது)
பீன்ஸ் – 10 (நறுக்கியது)
உருளைக்கிழங்கு – 1 (நறுக்கியது)
கத்திரிக்காய் – 1 (நறுக்கியது)
தக்காளி – 1 (நறுக்கியது)
வெந்தயம் – 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் – 8
துருவிய தேங்காய் – 4 டேபிள் ஸ்பூன்
மல்லி – 2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் – 1 டீஸ்பூன்
புளி – சிறு நெல்லிக்காய் அளவு
கறிவேப்பிலை – சிறிது
கடுகு – 1 டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

முதலில் புளியை நீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்து, ஒரு பெரிய பௌல் அளவில் சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தேங்காய், வெந்தயம், மல்லி, வரமிளகாய் மற்றும் கடலைப்பருப்பு சேர்த்து 5 நிமிடம் வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.

பின்பு அதனை மிக்ஸியில் போட்டு அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு பாத்திரத்தில் புளிச்சாற்றினை ஊற்றி, அதில் துவரம் பருப்பை நீரில் கழுவி சேர்த்து, அத்துடன் காய்கறிகள் அனைத்தையும் சேர்த்து, 10 நிமிடம் மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.

பின் அதில் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து, 6-7 நிமிடம் கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.

இறுதியில் மற்றொரு அடுப்பில் வாணலியை வைத்து, அதில் மீதமுள்ள எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, பின் அதில் கொதித்து கொண்டிருக்கும் சாம்பாரை ஊற்றினால், வறுத்து அரைச்ச சாம்பார் ரெடி!!!

Related posts

சுவையான சேப்பங்கிழங்கு டிக்கி வீட்டிலேயே செய்யலாம்…..

sangika

வேகவைத்த முட்டையை தினமும் சாப்பிட்டால் என்ன ஆகும்?

nathan

உடுப்பி சாம்பார்

nathan

சீசுவான் சில்லி பன்னீர்

nathan

paneer recipe – பன்னீர் கிரேவி

nathan

சுவையான பன்னீர் கோலாபுரி

nathan

சாப்பாட்டை வெறுக்கும் குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுங்கள்….

sangika

தக்காளி பேச்சுலர் ரசம்

nathan

ஆந்திரா ஸ்டைல் புளிச்சக்கீரை மட்டன் குழம்பு

nathan