கருத்தரிக்க நினைக்கும் பெண்கள் உடலை கவனித்துக் கொள்வதில் முகவும் அக்கறையுடன் இருக்க வேண்டும். அதிலும், குறிப்பாக எதையெல்லாம் சாப்பிடலாம் , சாப்பிடக்கூடாது என்ற விஷயத்தைக் கட்டாயம் தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது.
முதலில், கருத்தரிக்க நினைக்கும் பெண்கள் நிறைய பழங்கள், காய்கறிகளை சாப்பிட வேண்டும். பச்சைக் காய்கறிகள், கீரை வகைகளை நிறைய சாப்பிடுவதால் ஆண்டி ஆக்ஸிடண்டுகள் அதிகரித்து செல்களின் வளர்ச்சியை பாதுகாக்கும்.
மேலும், நட்ஸ் வகைகள், அவகடோ, ஆலிவ் எண்ணெய் ஆகியவை நோய் அழற்சியை தடுக்கும் ஆற்றல் கொண்டவை எனவே அவற்றை சாப்பிடுவதால் கரு நிற்பதற்கு ஏதுவாக இருக்கும். கொழுப்பு நிறைந்த எண்ணெய் பொருட்களை தவிருங்கள். சிப்ஸ், ஃபிரெஞ்சு ஃபிரைஸ் போன்றவற்றை சாப்பிடுவதால் இன்சுலின் சுரப்பதை அதிகரிக்கச் செய்யும்.
இதனால் வளர்ச்சிதை மாற்றத்திற்கு தடையாக இருக்கும். கரு வளரவும் சிரமப்படும். அடுத்தும் பதப்படுத்தப்பட்ட, சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் உணவுகளை முற்றிலுமாக தவிருங்கள். கேக், குக்கீஸ், வெள்ளை பிரெட் , பாலிஷ் செய்த அரிசி இவற்றையெல்லம் தவிர்த்தல் நல்லது. இவை இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்யும்.
இதனால் இன்சுலின் சுரப்பதும் அதிகரிக்கும். நார்ச்சத்து நிறைந்த பழங்கள், காய்கறிகள், பீன்ஸ் வகைகள், முழு தானிய உணவுகள், திணை உணவுகள் போன்றவற்றை சாப்பிடலாம். மீன் மற்றும் இறைச்சி உணவுகள் புரோட்டின் சத்துக்கு ஏற்றவை. அத்துடன் ஸிங்க், இரும்புச்சத்தும் கிடைக்கும். தாவர உணவுகளில் கிடைக்கக்கூடிய புரதச்சத்துக்களை அதிகமாக சாப்பிடுங்கள்.
பீன்ஸ், நட்ஸ், விதைகள். பச்சைபட்டாணி, பனீர் ஆகியவற்றில் புரதச்சத்து நிறைவாக உள்ளன. சர்க்கரை சாப்பிடும் அளவை குறைத்துக்கொள்ளுங்கள். சர்க்கரை அதிகம் கலக்கப்பட்ட குளிர்பானங்கள், ஜூஸ் வகைகளையும் தவிருங்கள். சர்க்கரைக்கு மாற்றாக தேன், டேட்ஸ் சிரப், பனைவெல்லம் , நாட்டுச்சர்க்கரை போன்றவற்றை அளவாக சாப்பிடலாம்.
சூரியகாந்தி விதைகள், பிரேசில் கொட்டைகள் மற்றும் சிப்பிகள் ஆகியவை ஆண் விந்தணுக்களின் ஆற்றலை ஆரோக்கியமாக்கும். இவற்றில் செலினியம், ஸிங்க், வைட்டமின் பி 12 மற்றும் புரதம் அதிகம் உள்ளன. இலவங்கப்பட்டை கருவுறுதலுக்கு சூப்பர்ஃபுட் என்று அழைக்கப்படுகிறது.
மேலும் இது கருப்பை செயல்பாட்டை மேம்படுத்துவதற்கும் இன்சுலினை எதிர்க்கவும் உதவுகிறது. சரியான முட்டை உற்பத்தியை ஊக்குவிப்பதற்கும் உதவுகிறது. பி.சி.ஓ.எஸ் நோயால் கண்டறியப்பட்ட பெண்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.