1500033134 insect in ear1
மருத்துவ குறிப்பு

நாம் இறக்கும் வரையில் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கும் 2 உறுப்புகள்…

நமது உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுமே ஒரு சமயத்தில் தங்களது வளர்ச்சியை நிறுத்திக் கொள்ள கூடியவை என்று தான் நாம் நினைத்துக் கொண்டிருப்போம்…! ஆனால் அப்படி இல்லை.. நமது உடலில் உள்ள குறிப்பிட்ட இரண்டு பாகங்கள் மட்டும் தொடந்து வளர்ந்து கொண்டே இருக்க கூடியவை ஆகும்.

Which Body Part Will not Stop Growing In our Body
Image Courtesy

என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? ஆம் நமது உயரம், உடல் அளவு, கைகள், கால்கள் என அனைத்துமே ஒரு காலகட்டத்தில் தங்களது வளர்ச்சியை நிறுத்திக் கொள்ள கூடியவை தான். சொல்லப்போனால் நம்மால் நமது 25 வயதிற்கு மேல் அல்லது 20 வயதிற்கு மேல் கூட நமது உயரத்தை அதிகரிக்க முடியாது. அதே போல நாம் வளர வளர நமது காலணியின் அளவும் மாறிக் கொண்டே போகும். ஒரு சமயத்தில் நமது காலணியின் அளவு நிலையான ஒன்றாக மாறிவிடும் என்பதை நாம் அறிவோம்..

அப்படி நமது உடலில் தொடந்து வளந்து கொண்டே போகும் உறுப்புகள் என்னென்ன என்பது பற்றியும் அந்த உறுப்புகளை எப்படி பாதுகாக்கலாம் என்பது பற்றியும் இந்த பகுதியில் விரிவாக காணலாம்.

வளரும் உறுப்புகள்!

நமது உடலில் தொடந்து வளர்ந்து கொண்டே இருக்கும் இரண்டு உறுப்புகள் என்னவென்றால், ஒன்று காது மற்றொன்று மூக்கு ஆகும். எந்த உறுப்புகள் தங்களது வளர்ச்சியை நிறுத்திக் கொண்டாலும் கூட இந்த உறுப்புகளுக்கு கடைசி வரையில் ஓய்வே இல்லை என்றே கூறலாம்.

எப்படி சாத்தியம்

நமது உடலில் உள்ள இந்த இரண்டு உறுப்புகளின் செல்கள் மட்டும் தொடர்ந்து வளர்ந்து கொண்டே தான் இருக்கின்றன. ஆனால் மற்ற உறுப்புகளின் செல்கள் தங்களது செல்களின் பெருக்கத்தை ஒரு சமயத்தில் நிறுத்திவிடுகின்றன. இதற்கு என்ன காரணம் என்றால், மூக்கு மற்றும் காதுகளில் உள்ளது மெல்லிய செல்கள்.. இதனால் தான் இவை தொடந்து வளர்ந்து கொண்டே இருக்கிறது.

மெல்லிய திசுக்கள்

நமது உடலில் உள்ள பாகங்களில் நமது மூக்கும், காதும் தனித்தன்மை வாயந்தவையாகும். இவைகள் மெல்லிய திசுக்களாலும், குறுத்தெலும்புகளாலும் ஆனவை எனவே இவைகள் இரண்டும் நாம் வாழும் வரையில் வளர்ந்து கொண்டே இருக்கும்.

வித்தியாசம்?

நீங்கள் இருபது வயதில் ஒருவரது மூக்கு மற்றும் காதுகளை பார்ப்பதற்கும், 80 வயதில் ஒருவரது காதுகளையும், மூக்கையும் பார்க்கும் போதும் வித்தியாசம் தெளிவாக தெரியும். வயதனாவர்களுக்கு மூக்கும், காதுகளும் பெரியதாக இருப்பதற்கும் இதுவே காரணமாகும்.

இது கிடையாதா?

நீங்கள் கூந்தலும், நகமும் கூட தொடர்ந்து வளர்ந்து கொண்டே தானே இருக்கிறது என்று நினைக்கலாம். ஆனால் கூந்தலும், நகமும் அனைவருக்கும் ஒரே மாதிரியானவை கிடையாது.. சிலருக்கு மரபணு ரீதியாக பாதியில் கூந்தல் வளர்வது நின்று சொட்டை விழுந்து விடுகிறது. சிலருக்கு நகங்கள் வளர்வது கிடையாது.. ஆனால் அனைவருக்குமே பொதுவாக கடைசி வரை வளர்ந்து கொண்டே இருப்பது என்னவென்றால் அது காதுகளும், மூக்கும் தான்..!

காது பராமரிப்பு

குழந்தைகளுக்கு காது குத்தும்போதே, சரியான ஸ்பாட்டை குறித்துக் கொள்வது அவசியம். பலருக்கு வயதானால் தோடுகளை பட்டன் இன்றி போட இயலாது. அதிக கனமுள்ள தோடுகளைப் போடுவதால் துளைகள் பெரிதாகிவிடும். இதனை எளிதாக சரி செய்து கொள்ள முடியும். மருத்துவரை அணுகினால் அவர், இப்படி பெரிதாக உள்ள துளைகளில் லேசாக கீறிவிட்டு தைத்துவிடுவார். லோக்கல் அனஸ்தீஷியா கொடுப்பதால் வலியெல்லாம் இருக்காது. சில நாட்களில் துளைகள் சேர்ந்துவிடும். நம்ம ஊரில் இந்த ட்ரீட்மெண்ட் பொதுவாக எல்லா பொது மருத்துவர்களும் செய்வார்கள்.

அதிக எடையுள்ள தோடுகள்

அதிக எடையுள்ள தோடு மட்டுமின்றி வளையங்களை அணிபவருக்கும் இந்த பிரச்சணை ஏற்படும். தூங்கும்போது இந்த வகை தோடுகளை கழட்டி வைத்துவிடுவது நல்லது. அதேபோல் சிலர் எப்போதும் தோடுகளை அணிந்து கொண்டே, அதனை ரெகுலராக க்ளீன் செய்யாமல் இருப்பார்கள்.

சுத்தம் செய்யவும்

இதனால் காதுகளில் மற்றும் தோடுகளில் அழுக்கு சேர்வது மட்டுமில்லாமல் காதின் நிறமும் கறுப்படையக்கூடும். இப்படி நேரமில்லை என்று சாக்கு சொல்பவர்கள் வாரம் ஒரு முறை தலைக்கு குளிக்கும்போதாவது தோடுகளை கழற்றி சோப் வாட்டரில் பிரஷ் கொண்டு கழுவி க்ளீன் செய்யலாம். எண்ணெய்ப் பிசுக்கு, அழுக்குகளினால் ஏற்படும் துர்நாற்றமும் போகும்.

தரமான பட்ஸ்

அடுத்து முக்கியமான விஷயம் காதுகளை சுத்தம் செய்வது. தரமான பட்ஸை உபயோகித்து காதுகளை சுத்தம் செய்வது மிகவும் அவசியம்.தரமற்ற பட்ஸ்களை வாங்கி பயன்படுத்துவதை தடுக்க வேண்டியது அவசியமாகும். விலை அதிகமானலும் கூட தரமான பட்ஸ்களை வாங்கி பயன்படுத்துங்கள்.

இது அவசியமில்லை

காதுகளை சுத்தம் செய்கிறேன் என்று அவற்றை குத்தி குடையாதீர்கள்.. இதனால் காது கேளாமை பிரச்சனைகள் கூட உண்டாகலாம். காதில் உள்ள மெழுகானது காதுகளை பாதுகாப்பதற்காக தான். எனவே அவற்றை குத்தி குடைந்து எல்லாம் எடுக்க வேண்டாம். மேலே வரும் அழுக்குகளை மட்டும் பட்ஸ்களை வைத்து சுத்தம் செய்தாலே போதுமானது..!

அழகுப்படுத்துதல்

காதுகளுக்கு அழகுப் படுத்துதல் என்று தனியாக எதுவும் தேவையில்லை. ஒரே ஒரு விஷயம் மட்டும் கவனத்தில் கொள்ள வேண்டும். முகத்திற்கு மேக்கப் போடும்போது காதுகளுக்கும் சேர்த்து பவுண்டெஷன், பவுடர் தடவுங்கள். இல்லாவிட்டால் காதுகள் தனி நிறத்தில் இருக்கும்.

அழகான தோடுகள்!

நிறைய தோடுகளை சைடு காதில் குத்திக் கொள்வதைக் காட்டிலும், பட்டன் டைப் அல்லது பிரஸ்ஸிங் டைப் வளையங்களை உபயோகித்தால் பேஷன் மாறும்போது நாமும் வடுக்கள் இல்லாமல் மாறிவிடலாம். சிறு வயதுக்காரர்கள் பார்ட்டி, கல்யாணம் என்று மேக்கப் செய்யும்போது, காதை மறைக்கும் பட்டையான மாட்டல் போடலாம்.

வயதானவர்களுக்கு..!

ஆனால் வயதானவர்களுக்கு இன்விசிபிள் டைப் மாட்டல்(கண்ணுக்கு தெரியாத வண்ணம்) தான் பொருந்தும். அதுவும் கூட பட்டன் போட விருப்பம் இல்லாதவர்களுக்கு ஒரு சாய்ஸ் மட்டுமே. பேஷன் தோடுகள் வாங்கும்போது ஒவ்வாமை, எடை இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு வாங்குங்கள். காது, மூக்கு பராமரிப்பு மிகவும் எளிதான விஷயம். சின்ன அக்கறை நல்ல தோற்றத்தினையும், அழகையும் கொடுக்கும்.

பிளாக் ஹேட்ஸ்

மூக்கில் ஏற்படும் முக்கிய பிரச்சனை பிளாக் ஹெட்ஸ்தான். சிலருக்கு ஒயிட் ஹெட்ஸும் காணப்படும். இது இரண்டுக்குமே முறையான கவனிப்பு அவசியம். பிளாக் ஹெட்ஸுடன் இருக்கும் மூக்கு, அருகில் வந்து பார்ப்பவருக்கு நிச்சயம் ஒரு வித அசூசையை ஏற்படுத்தும். கடைகளில் விறகும் பிளாக் ஹெட்ஸ் ரீமூவல் ஸ்ட்ரிப்ஸ் அதிக நாட்களாக இருக்கும் பிளாக் ஹெட்ஸை முழுதுமாக நீக்காது. ஏனென்றால் நாள்பட்ட பிளாக் ஹெட்ஸ் மிகவும் அழுத்தமாக இருக்கும். எளிதாக ஸ்ட்ரைப்ஸ் மூலம் நீக்க முடியாது. எனவே ஸ்ட்ரைப்ஸை (ஒரு முறை பிளாக் ஹெட்ஸை முழுதும் நீக்கிவிட்டு) ரெகுலர் பராமரிப்புக்கு மாதம் ஒரு முறை என்று உபயோகிக்கலாம்.

Related posts

வெறும் உப்பைக் கொண்டு ஒற்றைத் தலைவலியில் இருந்து உடனடியாக விடுபடுவது எப்படி? இதை படிங்க…

nathan

கர்ப்ப காலத்தில் சர்க்கரை நோய் வந்தால் குழந்தைக்கு பெரும் ஆபத்தா?அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்

nathan

பீனசத்திர்க்கான சித்த மருந்துகள்

nathan

கட்டாயம் இதை படியுங்கள் குழந்தைகளைத் தாக்கும் டைப்-1 சர்க்கரைநோய்

nathan

சர்க்கரையை வெல்லலாம் ஸ்வீட் எஸ்கேப் – 4

nathan

தும்மல் வர காரணங்கள்

nathan

பெண்களே ஏன் கருத்தரிக்க முடியவில்லை என்று தெரிந்து கொள்ள வேண்டுமா?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்ப காலத்தில் சாப்பிடும் முன் ஒன்றிற்கு இரண்டு முறை யோசிக்க வேண்டிய உணவுகள்!

nathan

உயர் ரத்த அழுத்தம் என்றால் என்ன?

nathan