அழகு குறிப்புகள்முகப்பரு

ஃபேஷியல் செய்து கொள்ளக்கூடாதவர்கள் யார் யார் தெரியுமா?

1. அதிக எண்ணெய்ப் பசை உள்ளவர்கள்.
2. முகப்பரு அதிகம் உள்ளவர்கள்.
3. மூக்கில், காதில் அறுவை சிகிச்சை செய்தவர்கள்.
4. முகத்தில் வெட்டுக்காயம் உள்ளவர்கள்.
5. தீக்காயம் முகத்தில் ஏற்பட்டவர்கள்.

இனி வீட்டிலேயே ஃபேஷியல் செய்து கொள்வது எப்படி என்று பார்க்கலாம்.
உலர்ந்த சருமத்தினர் புருவத்திற்கு விளக்கெண்ணெய் தடவவும். உதட்டின் மேல் ‘வாஸலின்’ அல்லது கிளிசரின் தடவவும். பால், ஓட்ஸ், பாதாம் எண்ணெய் சிறு துளிகள், ஆலிவ் எண்ணெய் சிறு துளிகள் கலந்து போட்டு சில நிமிடங்கள் ஊறிய பிறகு முகத்தை கழுவிக் கொள்ளலாம்

சாதாரண சருமம் உள்ளவர்கள்:
பன்னீர், ஓட்ஸ், ஆஸ்ட்டிரிஞ்சன்ட், தயிர், எலுமிச்சைச்சாறு ஆகியவற்றைக் கலந்து முகத்தில் தடவி சிறு நிமிடங்களுக்குப் பிறகு முகத்தைக் கழுவலாம்.
முகம் பளபளப்பாக இருக்க பாசிப்பயறு, சம்பங்கி விதை, கார்போக அரிசி, கஸ்தூரி மஞ்சள், ஆவாரம்பூ ஆகியவற்றை அரைத்துத் தூள் செய்து (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) அதில் சிறிதளவு எடுத்து பன்னீரில் கலந்து முகத்தில் ‘பாக்’ போல் வராம் ஒருமுறை போட்டு சில நிமிடங்கள் ஊறிய பிறகு கழுவ வேண்டும். ரசாயன வகை க்ரீம்களையும் மற்ற அழகு சாதனங்களையும் உபயோகிக்கும் போது முகம உடனடியாக பளபளப்பாகி பலன் அளிப்பது போல் தோன்றினாலும் நாளாவட்டத்தில் முகத்தின் பொலிவு மறைந்துவிடும். அதுவே மூலிகைகளை உபயோகித்து வந்தால் பலன் தெரிய சில காலம் ஆனாலும் சருமம் பாதுகாப்பாக இருக்கும
சருமம் பாதிக்கப்படாமல் பாதுகாக்க…
1. எப்போது வெளியே சென்று திரும்பினாலும் கண்டிப்பாக சோப் போட்டு முகம், கை, கால்களை நன்றாகக் கழுவ வேண்டும்.
2. இரவில் படுக்கப்போகும் முன் தரமான ‘மாய்ஸ்டு ரைஸிஸ் க்ரீம்’ ‘கோல்ட் க்ரீம்’ ஆகியவற்றை முகத்தில் தடவ வேண்டும்.
3. காலையில் வெளியே செல்லும் முன் சூரிய வெப்ப தாக்காதிருக்க சன்டேன் லோஷன் தடவிக் கொள்ள வேண்டும்.
4. வாரம் ஒருமுறை தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.
புருவங்களைச் சீர்படுத்தி மினி ஃபேஷியல் செய்து முடியை சீராக வெட்டி வைத்து கொள்ள அதிகம் செலவாகாது. மாதமொரு முறை இவற்றைச் செய்து கொள்வது முகத்தின் அழகைப் பாதுகாக்க உதவும். முகத்திற்கு ஃபேஷியல் தானாகவே செய்து கொள்ளும்போது கவனக் குறைவாக சரியாகச் செய்யாவிட்டால் தோலில் பிரச்சினைகள் உண்டாகும். அலர்ஜி, எரிச்சல் ஏற்படலாம். சரியான ‘க்ரீ’ மை அளவாக போட்டு சரியாக ஆவி பிடிக்க வைத்து கறுப்புப் புள்ளிகளை (பிளாக் ஹெட்ஸ்) நீக்க வேண்டும். அறுபது வயதிற்கு மேற்பட்டவர்கள் தவறியும்கூட தானே செய்து கொள்ளக்கூடாது.
பெண்கள் அவரவர்கள் முக அமைப்புக்கு ஏற்றவாறு கொண்டை போட்டுக் கொண்டால் அழகாக இருக்கும். பெரிய முகம் உள்ளவர்களும், சிறிய நெற்றியுடையவர்களும் வகிடு எடுக்காது தூக்கி வாரி சிறிய கொண்டையாகப் போட்டுக் கொண்டால் நன்றாக இருக்கும். சிறிய வட்ட முகம் உள்ளவர்கள் கொஞ்சம் உயர்த்திப் பெரிய கொண்டையாகப் போட்டுக் கொண்டால் மிக எடுப்பாக இருக்கும்.
அகன்ற பெரிய நெற்றியுடையவர்கள் வகிடு எடுத்து தழைய வாரி இரு காது மடல்களின் அருகிலும் சிறிதளவு முடியை எடுத்துச் சுருட்டி விட்டுக் கொண்டால் அழகாக இருக்கும்.

Related posts

பீச் பழம் எவ்வாறு சருமத்தைப் பாதுகாக்கும்?…

sangika

மனைவியை விவாகரத்து செய்துவிட்டாரா பிக் பாஸ் அபிநய்..வெளிவந்த தகவல் !

nathan

பெண்களே அழகான பளபளப்பான கூந்தலைப் பெற வேண்டுமா? அப்ப தினமும் செய்யுங்க…

nathan

முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை மறைய வைக்க பப்பாளி வைத்தியம்!…

sangika

ஆரோக்கியத்தை பிரதிபலிக்கும் பாதங்கள்

nathan

கால்களையும் கொஞ்சம் கவனியுங்கள்! Tips to Care your feet

nathan

உதடு கருப்பாக உள்ளதா

nathan

நீங்களே பாருங்க.! 16 வயதில் நயன்தாராவையே ஓவர் டேக் செய்த அனிகா

nathan

வீட்டில் உள்ள பொருள்களை வைத்தே அழகை பராமரிப்பது எப்படி?

sangika