28.9 C
Chennai
Wednesday, Jan 28, 2026
ஆரோக்கியம்உடல் பயிற்சி

4 விதமான யோகாசனம் செய்வதால் நாம் நமது மோசமான மனநிலையை வென்று காட்ட முடியும்:

a6e3bbbe-82bb-47c0-8ac1-fcbf888141ae_S_secvpfநீங்கள், ஒரு மோசமான நாளிற்கு பிறகு மனநிலையை மாற்ற கூடிய உணவுகளை சாப்பிடுவதற்கு மாறாக, நாம் நம்மை யோகாவில் ஈடுபடுத்தி உற்சாகமான மனநிலையை பெற முடியும். 

1. சக்கராசனம்:: நீங்கள் ஒரு மோசமான மனநிலையில் இருக்கும் போது பெரும்பாலும், உங்கள் உடல் போதுமான ஆக்சிஜன் சப்ளை செய்ய ஆழமான சுவாசத்தை எடுத்து கொள்ளவேண்டும். . இந்த நிலையில் நீங்கள் பின்னோக்கி வளைந்து, நீங்கள் உங்களை வலுவாக்கிக்கொல்ல முடியும். தரையில் சமமாக படுத்து உங்கள் முழங்காலை வளைக்க வேண்டும். உங்கள் தலையின் பின்னால் தரையில் உங்கள் உள்ளங்கைகளை வைக்க வேண்டும். இப்போது, உங்கள்கால்களை மற்றும் உள்ளங்கைகளின் மீது அழுத்தம் கொடுத்து, உங்கள் கீழ் மற்றும் மேல் உடல் தூக்கி, ஒரு அரை வட்ட சக்கரம் போல் அமைக்க வேண்டும்.


2. அர்த்த சிரசாசனம்: இந்த நிலையில் தலையின் இரத்த ஓட்டம் அதிகரித்து, மூளையில் உள்ள சுரப்பிகளை தூண்டிவிடும், அடுத்து உங்கள் வயிறு பகுதி தரையில் படும்படி படுத்துக் கொண்டு, உங்களது முழங்கைகள் தலைக்கு அருகில் வைத்து தரையை தொடும்படி வைத்துக் கொள்ளவேண்டும். மெதுவாக சுருண்டு தரையில் இருந்து உங்கள் முதுகு மற்றும் கால்களை தூக்க வேண்டும். நீங்கள் தரையில் செங்குத்தாக இருக்கும் வரை, உங்கள் முழங்கைகளில் உங்களது எடையை தாங்க வேண்டும். தேவைப்பட்டால் நீங்கள் சுவற்றை பிடித்துக் கொள்ளலாம்.
3. காக்கசனம்: இந்த நிலை உங்களது நம்பிக்கை மற்றும் எதிர்மறை சிந்தனையயை உடைக்கஉதவும். ஒரு தவளை அமர்வது போல் அமர்ந்து பின்னர் தரையில் உங்கள் உள்ளங்கைகளைவைத்து, முன்னோக்கி குனிய வேன்டும். உங்களது முழங்கைகளின் மீது உங்களதுமுழங்கால்களை வைத்து, முழங்கைகளின் மீது அழுத்தம் தந்து உடலை உயர்த்த வேண்டும்.
4. ஹஸ்தபாதாசனா: இந்த நிலையில் நீங்கள் உங்கள் உடல் தசையை விரிவுப் படுத்தி, ஓய்வுபெறச்செய்யலாம். உங்கள் கால்களை நன்றாக விரித்தப் படி நிற்க வேன்டும். மூச்சை நன்றாகஉள்ளிழுத்து உங்கள் கைகளை தலைக்கு மேல் உயர்த்த வேண்டும். பிறகு மூச்சை வெளிவிட்டவாரு இடுப்பை முன்னோக்கி வளைக்க வேண்டும். தேவை என்றால், உங்கள்முழங்காலை கொஞ்சம் வளைத்து, உங்கள் உள்ளங்கையால் குதிகாலை தொடமுயற்சிக்கவேண்டும்.

Related posts

முதியவர்களுக்கான 4 பயிற்சிகள்

nathan

பெண்கள் தொப்பை குறைப்பது எப்படி?

nathan

கட்டாயம் இதை படியுங்கள்,, வெந்தயம் தரும் நன்மைகள் என்ன?

nathan

முளைகட்டிய தானியங்கள் நல்ல ஆரோக்கிய பலன்களைத் தருகின்றன!

sangika

டலில் உள்ள முக்கிய சத்துக்கள் குறைபாடு ஏற்படக் காரண மாகி விடும். காலை உணவை தவிர்ப்பவரா நீங்கள்!!

nathan

நடைப்பயிற்சி நன்மைகள் (BENEFITS OF WALKING)

nathan

சில யோகா நிலைகள் பெண்கள் தொய்கின்ற மார்பகத்தை சரி செய்ய

nathan

எலும்பு தேய்மானத்தை தடுக்க வழிமுறைகள்

nathan

குரூப் வொர்க் அவுட் செய்யும் போது கவனிக்க வேண்டியவை

nathan