25.3 C
Chennai
Thursday, Jan 29, 2026
static image c
ஆரோக்கிய உணவு

பூவன் பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…

வாழைப்பழத்தில் பல வித நன்மைகள் அடங்கியுள்ளது. 7000ம் ஆண்டுகளுக்கு முன் முதன்முதலாகப் பயிரிடப்பட்டு, உலகில் மிக அதிகமாக பயிரிடப்படும் பழமாகவும் கோதுமை, நெல், சோளம் இவற்றிற்குப் பிறகு நான்காவதாக மிக அதிகமாக பயிரிடப்படும் விளைபொருளாகவும் உள்ளது வாழை.

உலகில் சுமார் 3000 ரக வாழை வகைகள் இருக்கின்றன. ஒவ்வொரு வாழைப்பழமும் ஒவ்வொரு நோயை குணமாக்கும் தன்மை கொண்டவை.

அதிலும், தமிழ்நாட்டில் அதிக அளவில் பயிரிடப்படுவது பூவன் பழம். அளவில் சிறியதாக இருந்தாலும், குணத்தில் மிகவும் சிறந்தது. ஒரு வாழைத்தாரில் 100 முதல் 150 பழங்கள் விளையும்.

மேலும், பூவன் பழத்த்தில் வைட்டமின் A, வைட்டமின் C, வைட்டமின் B6, இரும்புச்சத்து, மெக்னீசியம் மற்றும் சோடியம் என பல சத்துக்கள் உள்ளன. அதிக நார்ச்சத்து உள்ள பூவன் வாழைப்பழத்தை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதால் உங்கள் குடல் இயக்கம் சீராக இருக்கும்.

இதிலுள்ள செரோடோனின் என்ற முக்கியமான ஹார்மோன் நமது மனம் மகிழ்ச்சியாக இருக்கத் தேவையான பண்புகளைக் கொண்டுள்ளது. மூளையில் இயற்கையாக செரோடோனின் உருவாக இது வழிசெய்கிறது. அதிக பொட்டாசியம் சத்துள்ள உணவுப் பொருட்கள் மனச்சோர்வின் அறிகுறி, பதற்றம் போன்றவற்றை தடுக்கும்.

பூவன்பழத்தில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் இதை தினசரி சாப்பிடலாம். பொட்டாசியம் சத்து நிறைந்த உணவுகள் ரத்த அழுத்தத்தை குறைப்பதிலும் இருதய நோய்கள், பக்கவாதம் வராமல் தடுப்பதிலும் சிறப்பாக துணைபுரிபவை என்பதும் கவனத்தில் கொள்ளவேண்டிய ஒன்று. பூவன் பழத்தில் உள்ள மெலடோனின், தூக்கத்தை முறைப்படுத்த உதவுவதோடு, உடலின் இயற்கையான சுழற்சியை ஒழுங்குபடுத்தும்.

வாழைப்பழத்தில் இயற்கையாகவே உள்ள அமினோ ஆசிட் ட்ரிப்டோபான் உடலின் செரோடோனின் அளவை மேம்படுத்த உதவுகிறது. பொதுவாக வாரத்திற்கு நான்கு பூவன்பழம் சாப்பிட்டால் உடலில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படாது. துத்தநாகம், வைட்டமின் A, செலினியம் மற்றும் புரதம் என பல்வேறு சத்துக்களை கொண்டுள்ள பூவன் வாழைப்பழம், ஆரோக்கியமான நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை அதிக அளவில் வழங்குகிறது வாயுத்தொல்லையினால் சங்கடமா? உங்கள் உணவை ஜீரணிக்க சிரமப்படுகிறீர்களா? இது உணவு செரிமானத்திற்கு தேவையான குடல் நுண்ணுயிர் குறைபாட்டினால் இருக்கலாம்.

மனித உடலில் 40 ட்ரில்லியன் நுண்ணுயிர்கள் இருக்கின்றன, பெரும்பாலானவை நம் குடலில்தான் வாழ்கின்றன. மொத்தமாக அவை குடல் நுண்ணுயிர்க்கட்டு என்று அறியப்படுகிறது. இவை நமது ஆரோக்கியத்தை தீர்மானிப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது.

வாழைப்பழங்களின் அனைத்து வகைகளிலும் நுண்ணுயிர் கலந்துள்ளது. இவை குடல் நுண்ணுயிர் செழித்து வளர சரியான சூழ்நிலையை உருவாக்கித் தருகின்றன. செரிமாண சக்தியை மேம்படுத்தி. உடலுக்கு நல்ல ஊட்டத்தை கொடுப்பதோடு தசைகளின் ஆரோக்கியத்திற்கு அடிப்படையாக அமைகிறது வாழைப்பழம்.

மலச்சிக்கலை அகற்றுவதில், மிகவும் அற்புதமாக பயன்படக் கூடிய இப்பழத்தினை தினம் இரவு ஆகாரத்திற்கு பின் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் ஏற்படாது. ஆஸ்துமா பாதிப்பு உள்ளவர்கள், குளிர்ச்சியான தேகம் கொண்டவர்கள், நீரழிவு நோய் இருப்பவர்கள் மட்டும் பூவன்பழத்தை சாப்பிட வேண்டாம்.

அடிக்கடி செரிமாணக் கோளாறால் அவதிப்படுபவர்கள் தினமும் ஒருவேளை உணவை தவிர்த்து விட்டு பூவன்பழத்தை மட்டும் இரண்டு நாளைக்கு சாப்பிட்டு வந்தால் செரிமாணப் பிரச்சனைகள் அடியோடு அகலும்.

Related posts

6ம் எண்ணில் பிறத்தவர்களின் பொதுவான குணங்கள் -தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

அடேங்கப்பா! இந்த மூன்று ராசிகளில் ஒன்று உங்க ராசியா? அப்போ நீங்க ரொம்ப கொடுத்துவச்சவங்க தான்!

nathan

பச்சை மாங்காய் ஒரு துண்டு மதிய வேளையில் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?தெரிஞ்சிக்கங்க…

nathan

ஆண்கள் அப்பாவாக உண்ண வேண்டிய உணவுகள் என்னென்ன?தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

கேரட்டை பச்சையாக சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

nathan

உங்களுக்கு தெரியுமா பலாப்பழச் சுளையை சாப்பிடுவதால் நம் உடலில் நடக்கும் அற்புதங்கள்!!

nathan

உடலை குளிர்ச்சியாக்கும் முலாம் பழம்

nathan

வெறும் வயிற்றில் பழங்களை சாப்பிடுவது நல்லதா…? எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா?

nathan

மிக்ஸ்டு வெஜிடபிள் ஜூஸ் !

nathan