29 C
Chennai
Wednesday, Jun 26, 2024
hairfall 1
தலைமுடி சிகிச்சை

பெண்களே கொரோனா தொற்றுக்குப் பிறகு அதிகமாக முடி உதிர்கிறதா? உங்களுக்குதான் இந்த விஷயம்

கொரோனா தொற்றால் பாதிப்படைந்த நிறைய நபர்கள், கணிசமான அளவில் முடி உதிர்வு பிரச்சனையை எதிர்கொண்டு வருகின்றனர் என்று கூறப்படுகின்றது.

தீவிரமான தொற்று பாதிப்பு ஏற்பட்டால், முடி உதிர்வு ஏற்படுவது இயல்பானது தான். உடல் நுண்கிருமியின் தாக்குதலை எதிர்கொண்டு, மீண்டு வந்திருக்கும். நோய்க் கிருமிகளை எதிர்த்து போராடும் போது, உடலில் பல்வேறு ரசாயன மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும்.

இதனால் கோவிட் தொற்றிலிருந்து மீண்ட சில வாரங்களுக்கு மிதமானது முதல் கணிசமான அளவில் முடி உதிர்வு ஏற்படுகின்றது.

 இது குறித்து மருத்துவர்கள் கூறுவது என்ன?

கொரோனா வைரஸ் தொற்று உடலில் ஏற்பட்ட பாதிப்பையும், உடல் மற்றும் மன அழுத்தம் காரணமாகவும், முடி உதிர்தலை அதிகப்படுத்தலாம். ஆனால், 1 முதல் 3 மாதங்களுக்கு பிறகு, நோய்வாய்ப்பட்டிருந்த நேரத்தில் டெலோஜென் என்ற நிலையை அடைந்திருந்த முடி, தானாகவே உதிர்ந்து, புதிதாக வளர்வதற்கு வழிவகுக்கும்.

இந்த நிலையில், ஒரு நாளில் கிட்டத்தட்ட 100 முதல் 200 வரை முடிக்கற்றைகள் உதிரக்கூடும். இந்த விதமான கணிசமான முடி உதிர்வு குறுகிய காலம் மட்டுமே காணப்படும்.

சில வாரங்களிலேயே, 3 முதல் 6 மாதங்களுக்குள் இந்த நிலை தானாகவே மாறி விடும். அது மட்டுமின்றி, உங்களுக்கு தொற்றுக்கு முந்தைய காலத்தில் இருந்தது போலவே முடி வளர்ச்சி மற்றும் பேட்டர்ன் மீண்டும் கிடைக்கும் என்றும் கூறினார்.

ஆனால், முதல் முறை கோவிட் பாதிப்பு ஏற்பட்டு மீளும் போது, அதன் காரணிகளை சரியாகக் கண்டறிய வேண்டும்.

மிதமான அளவில் உள்ள முடி உதிர்வை உணவு, யோகா, தியானம், சரியான தூக்கம் மற்றும் உடற்பயிற்சி மூலம் சரி செய்யலாம். முடி உதிர்ந்த இடத்தில் புதிய வளர்ச்சியைக் கண்டால், உங்கள் உடல் மீண்டும் பழைய நிலைக்கு வந்துவிட்டது என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

இதனை தடுக்க என்ன செய்யலாம்? 

  • முடிக்கு அடிக்கடி எண்ணெய் தடவுவதைத் தவிர்க்க வேண்டும்.
  • இரும்புச்சத்து நிறைந்த உணவை உண்ண வேண்டும்.
  • உடலில் இயற்கையாக அழற்சி எதிர்ப்பை உண்டாக்கும். உணவுகளான – கொட்டைகள் மற்றும் விதைகள் (பாதாம், முந்திரி, வால்நட், வேகவைத்த நிலகடலை, சியா விதைகள்), பச்சை காய்கறிகள் மற்றும் கீரைகள் சேர்க்க வேண்டும்.
  • போதிய அளவுக்கு தண்ணீர் அருந்தி உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
  • முடி உதிர்வு மோசமாக இருந்தால், வழுக்கை தெரிவது போல காணப்பட்டால், உடனே உங்கள் சரும மருத்துவரை ஆலோசிக்க வேண்டும்.
  • ஸல்ஃபேட் இல்லாத ஷாம்ப்பூக்களை பயன்படுத்த வேண்டும்.
  • அதிகப்படியான வெப்பம் மற்றும் கெமிக்கல் சிகிச்சைகளைப் பயன்படுத்த வேண்டாம்.

Related posts

உங்களுக்கு தலைமுடி அதிகமா கொட்டுதா??? இத பண்ணுங்க முதல்ல

nathan

உங்கள் நரையை போக்கும் ஒரே ஒரு அதிசய பொருள் எதுவென்று தெரியுமா?

nathan

தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க வெந்தயம் மற்றும் கறிவேப்பிலையை எப்படி பயன்படுத்துவது?

nathan

பொடுகு! தவிர்க்கலாம். தடுக்கலாம்!

nathan

பொடுகு பிரச்சனை ஏன் ஏற்படுகிறது

nathan

முடியைக் காப்பாற்ற முக்கிய யோசனைகள்!

nathan

பொடுகு தொல்லையா?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…முடியின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க தலைக்கு எப்படி குளிப்பது?

nathan

பெண்களே பட்டு போல் கூந்தல் வேண்டுமா?இதை முயன்று பாருங்கள்

nathan