தலைமுடி சிகிச்சை

முயன்று பாருங்கள் கருமையான தலைமுடி பெற கருப்பு மிளகு பயன்படுத்துங்கள்…

பெண்களுக்கும் தலைமுடிக்கும் தனி ஒரு பிணைப்பு உண்டு. பெண்களுக்கு அவர்களது தலைமுடி மிகவும் மதிப்புமிக்கது, ஆனால் முடி உதிர்தல், அவர்கது மனமும் உதிர்ந்து போகும்.

முடி உதிர்வுக்கு பொடுகு மற்றும் மெல்லிய முடி ஆகியவை பொதுவான பிரச்சினைகளாக கருதப்படுகின்றன. மேலும் மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை, ஆரோக்கியமற்ற உணவு, சீறற்ற வாழ்க்கை முறை, மாசு போன்றவையும் கூந்தலின் எதிரிகள் ஆவர். சிறந்த கூந்தலைப் பெற, வாழ்க்கை முறை மற்றும் உணவை மேம்படுத்துவது உங்கள் முதல் பணியாக இருக்க வேண்டும்.

உணவில் பயன்படுத்தப்படும் மிளகு உங்கள் முடியின் அனைத்து பிரச்சனைகளையும், உணவின் சுவைகளுடன் நீக்குவதற்கு நன்மை பயக்கும்.

முடி வலுவாகவும் பளபளப்பாகவும் இருக்க கருப்பு மிளகு எப்படி உட்கொள்வது?. கருப்பு மிளகு கூந்தலுக்கு பிரகாசத்தை தருவது மட்டுமல்லாமல், முடி தொடர்பான பல சிக்கல்களையும் நீக்குகிறது. எனவே மிளகினை கவனமாக பயன்படுத்தப்பட வேண்டும், ஏனெனில் நீங்கள் தேவையானதை விட அதிகமாக பயன்படுத்தினால், அது உங்கள் உச்சந்தலையில் எரிச்சல் அல்லது அரிப்பு போன்ற உபாதைகளை ஏற்படுத்தும்.
fghg
கருப்பு மிளகிள் வைட்டமின் C காணப்படுகிறது. இது உச்சந்தலையை சுத்தமாக வைத்திருக்கிறது மற்றும் பொடுகு போன்ற பிரச்சனைகளில் இருந்து நம்பை காக்கிறது. கருப்பு மிளகினை நீங்கள் பயன்படுத்த விரும்பினால், ஆலிவ் எண்ணெயில் ஒரு சிட்டிகை கருப்பு மிளகு தூள் சேர்த்து தலைமுடியில் தடவலாம். நாள் முழுவதும் அதை விட்டுவிட்டு, மறுநாள் அலசவும்.

மற்றொரு வகையில்., ஒரு டீஸ்பூன் கருப்பு மிளகு தூள் மற்றும் மூன்று டீஸ்பூன் தயிர் கலந்து பேஸ்ட் செய்து தலைமுடியில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். கருப்பு மிளகு நிறைய தாமிரத்தைக் கொண்டுள்ளது, இது முடியை வெண்மையாக்காது. தயிர் கூந்தலுக்கு மாய்ஸ்சரைசர் வழங்குகிறது.

ஒரு டீஸ்பூன் மிளகு தூளில் இரண்டு டீஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து பயன்படுத்துவதன் மூலம், இது உச்சந்தலையை சுத்தப்படுத்தி, தலைமுடியை மென்மையாக்க உதவுகிறது. இந்த கரைசலை 15 நிமிடங்கள் தலைமுடியில் வைத்து பின்னர் நன்கு கழுவவும்.

கருப்பு மிளகு முடியின் கால்களை மேம்படுத்துகிறது மற்றும் வழுக்கை போன்ற பிரச்சனைகளில் இருந்து நம்மை காக்கிறது. இந்த செய்முறையினை செய்ய நீங்கள் கருப்பு மிளகுடன் ஆலிவ் எண்ணெயை சேர்த்து, ஒரு கொள்கலனில் இட்டு மூடி இரண்டு வாரங்கள் வைத்திருங்கள், அதன் பிறகு எண்ணெயை அகற்றி தலைமுடியில் தடவவும். இதை 30 நிமிடங்கள் வைத்து குளிர்ந்த நீரில் கழுவவும். இந்த செயல்முறையினை தொடந்து செய்வதன் மூலம் குறிப்பிடத்தக்க மாற்றம் கிட்டும்.

குறிப்பு: எந்த ஒரு செயல்முறை செய்வதற்கு முன்பும் உங்கள் மருத்துவரை அணுகி, உங்கள் சருமத்திற்கு அது பொருந்துமா என கேட்டறிந்துக்கொள்ளுதல் அவசியம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button