சைவம்

கொண்டை கடலை குழம்பு

தேவையான பொருட்கள்

கொண்டை கடலை – 2 கப்(வேக வைத்தது)

உப்பு – தேவையான அளவு

அரைக்க

தேங்காய் துருவல் – 1 கப்

முழு கெத்த மல்லி – 4 தேக்கரண்டி

வத்தல் மிளகாய் – 5

பட்டை – 1 (பெரிய துண்டு)

சோம்பு – 1 மேஜைக்கரண்டி

எண்ணெய் – 1தேக்கரண்டி

தாளிக்க

எண்ணெய் – 2 தேக்கரண்டி

வெங்காயம் – 1(பெரியதாக நறுக்கியது) 10(சிறியதாக நறுக்கியது)

கறி வேப்பிலை – ஒரு கொத்து

பச்சை மிளகாய் – 1

செய்முறை


கொண்டைக் கடலையை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்


கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும்


சோம்பு மற்றும் பட்டை சேர்க்கவும்


கொத்த மல்லி சேர்க்கவும்


காய்ந்த சிவப்பு மிளகாய் சேர்க்கவும்


பொன்னிறமாகும் வரை வறுக்கவும்


பின்பு தேங்காய் துருவல் சேர்க்கவும்


பொன்னிறமாகவும் வரை வறுக்கவும்


பின்பு அதனை அரைத்துக் கொள்ளவும்


மென்மையாக அரைக்கவும்


பின்பு வேக வைத்த கொண்டைக் கடலையை வேக வைத்த நீருடன் அதே கடாயில் விடவும்


அதனுடன் அரைத்த விழுதை சேர்க்கவும்


நன்கு கலக்கவும்


பின்பு அதனை கொதிக்க வைக்கவும்


எண்ணெய் மேலே வரும் வரை கொதிக்க வைக்கவும்


வேறெரு கடாயில் ணெணெய் விட்டு சூடாக்கவும்


வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கறி வேப்பிலை சேர்க்கவும்


பொன்னிறமாகும் வரை வதக்கவும்


பின்பு அதனை கடலைக் கறியுடன் சேர்க்கவும்


நன்கு கலக்கவும்


பின்பு பரிமாறவும்

Related posts

பன்னீர் பட்டாணி மசாலா

nathan

வாழைப்பூ குருமா

nathan

தக்காளி பட்டாணி சாதம்

nathan

ப்ரோக்கோலி பொரியல்

nathan

முளைக்கீரை தயிர்க்கூட்டு செய்வது எப்படி

nathan

கப்பக்கறி

nathan

சுவையான வெங்காயம் தக்காளி குழம்பு

nathan

சம்பா கோதுமை புலாவ்

nathan

கத்தரிக்காய் மசியல்

nathan