28.9 C
Chennai
Wednesday, Jan 28, 2026
14c23
ஆரோக்கிய உணவு

பெண்களே தெரிஞ்சிக்கங்க… வயிறு தட்டையா ஸ்லிம்மா இருக்கணும்னா இந்த இஞ்சி-சீரகத் தண்ணி குடிங்க!

நாம் உடல் எடை அதிகமாக இருக்கிறது என்று அதிகமாக உடற்பயிற்சி செய்து உடலை குறைத்தால் அங்கு வந்து நிற்கிறது இன்னொரு பிரச்சனை!

அதுதான் இந்த சதை போடுதல். கழுத்து, கை, தொடை போன்ற பகுதிகளில் இந்த தேவையற்ற சதை நம்மளுடைய உடல் அழகை பாதிக்கிறது.

பெண்களுக்கு சேலை பேண்ட் போன்றவை அணியும்போது நன்றாக இருப்பதில்லை என்றும் வருந்துகின்றனர். இதனை சரி செய்வதற்கான மருந்து உங்கள் வீட்டுக்குள் இருக்கிறது. இந்த கட்டுரையில் அதனை பற்றி விரிவாக பார்க்கலாம்.

அதாவது, இஞ்சி மற்றும் ஜீரகம் தண்ணீரினை கொண்டே இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்துவிடலாம்.

​இஞ்சியில் இருக்கும் நன்மைகள

நம்முடைய இந்திய சமையல் அறையில் இஞ்சிக்கு பல்லாயிரம் காலம் தொட்டே பங்கு இருக்கிறது. அதை பல்வேறு உடல் உபாதைகளுக்கு தீர்வாக மருந்தாக பயன்படுத்துகிறோம்.

மேலும், நாம் சாப்பிடும் மசாலா, எண்ணெய், பிரியாணி போன்ற ஹெவி உணவுகளுக்கு செரிக்கும் தன்மையை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

மேலும், உடலில் இந்த வெப்ப மண்டலப் பகுதியில் உடல் வெப்பத்தை குறைப்பதற்கு இவை பங்கு வைக்கின்றன. அதுமட்டுமின்றி இஞ்சியின் பல்வேறு பலன்கள் இருக்கிறது

​சீரகத்தின் பலன்கள்

சீரகத்தில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் இடம்பெற்றிருக்கின்றன. பொட்டாசியம், இரும்பு, பைபர் கொண்ட பல்வேறு ஊட்டச்சத்துக்கள் இடம்பெற்றிருக்கிறது.

மற்றும் விட்டமின் சி, கே ஆகியவை மற்றும் உடலில் உள்ள கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் அளவை குறைப்பதில் முக்கிய பங்கு வகிப்பதால் சீரகம் நம்மளுடைய கிச்சனில் பங்கு வகிக்கிறது.

​பானம் செய்வது எப்படி?
ஒரு ஸ்பூன் சீரக விதைகளையும் இஞ்சியையும் எடுத்துக் கொள்ளுங்கள். சீரகத்தினை பவுடராக இருந்தாலும் ஒரு ஸ்பூன் எடுத்துக் கொள்ளலாம் அதை இரண்டினையும் 500 மில்லி லிட்டர் தண்ணீரில் சேர்க்கவும்.

பின் அவற்றை நன்றாக கொதிக்கவைத்து அதாவது 500 மில்லி லிட்டர் தண்ணீரானது பாதியாக 250 மில்லி லிட்டர் தண்ணீர் வரும் அளவிற்கு நன்றாக கொதிக்க விட வேண்டும்.

அவற்றினை ஒரு டம்ளரில் எடுத்துக் கொள்ள வேண்டும் உங்களுக்குத் தேவை என்றால் பட்டை, ஏலக்காய் அல்லது கொஞ்சமாக லெமன் ஜூஸ் ஆகியவை சேர்த்துக் கொள்ளலாம். அதன் சுவையை அதிகரிப்பதற்கு உதவும்.

இவற்றினை காலையில் தொடர்ந்து 10 நாட்களுக்கு பயன்படுத்தி வந்தால் உங்களுடைய உடலில் நல்ல மாற்றம் ஏற்படும். மேலும், சரியான டயட் முறை மற்றும் தினமும் 45 நிமிடங்களுக்கு உடற்பயிற்சி மேற்கொண்டால் இந்த பானம் நல்ல பலனை அளிக்கும்.

நாம் ஏற்கனவே இஞ்சி மற்றும் சீரகத்தின் பயன்கள் பற்றி பார்த்தோம். உங்களுடைய சக்திகளை அதிகரித்து உங்கள் உடல் எடையை குறைப்பதற்கு இவை முக்கிய பங்கு வகிக்கின்றன.

இன்னும் கரையாத கலோரிகளை குறைப்பதில் இவை முக்கிய பங்கு வகிப்பதன் காரணமாக நாம் இதனை குடிக்கலாம்

Related posts

இயற்கையாக வளரும் காளானில் பல மடங்கும் புரதச்சத்தும் மற்றும் மருத்துவ குணங்களும்

nathan

உற்சாகத்தை அளிக்கும் மூளைக்கான உணவு

nathan

பச்சை பயறு அதிக சத்துக்கள் சாப்பிட்டுவர உடல் ஆரோக்கியம் பெறும். ..

nathan

ஜீரண கோளாறை சரிசெய்யும் பெருங்காயம்

nathan

என்ன தெரியுமா சோயா பால் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்…?

nathan

peerkangai benefits in tamil – பீர்க்கங்காயின் நன்மைகள்

nathan

உங்களுக்கு தெரியுமா புற்றுநோய் செல்களை அழிக்கும் உணவுகள்

nathan

இரவில் தூங்குவதற்கு முன் பசித்தால் மீன் சாப்பிடலாமா?தெரிஞ்சிக்கங்க…

nathan

பாலுடன் எந்தெந்த உணவுகளை சேர்த்து சாப்பிடக்கூடாது?

nathan