25.5 C
Chennai
Wednesday, Jan 28, 2026
156e55e
மருத்துவ குறிப்பு

நுரையீரலில் படிந்துள்ள கழிவுகளை விரட்டனுமா? இதோ அற்புதமான எளிய தீர்வு

நுரையீரலில் படிந்துள்ள கழிவுகளை வெளியேற்ற ஒரு சில யோக உடற்பயிற்சிகள் பெரிதும் உதவுகின்றது.

அதில் நாடி சுத்தி என்பது சுவாசத்தை சுத்தம் செய்யும் ஆசனம் ஆகும் தற்போது இதனை எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.

 

முதலில், விரிப்பில் ரிலாக்ஸாக உட்கார்ந்து சாதாரணமாக மூச்சை இழுத்து விடவேண்டும். பின்னர் வலதுபக்க மூக்கை வலக்கையின் பெருவிரலால் அழுத்திக் கொள்ளவும்.

இடது மூக்கின் வழியாக மூச்சை உள்ளிழுக்கவும். இப்போது இடது மூக்கை மோதிரவிரல், சுண்டுவிரல் இரண்டாலும் அழுத்திக் கொள்ளவும். வலது மூக்கை திறந்து, இழுத்த மூச்சை வலது மூக்கால் மெதுவாக வெளியேற்றவும்.

அடுத்து வலது மூக்கை திறந்து, இடது மூக்கை மூடிக் கொள்ள வேண்டும். இப்போது வலது மூக்கால் மூச்சை இழுத்து இடது மூக்கால் மெதுவாக வெளியேற்றவும். இப்போதுதான் ஒரு சுற்று முழுமை அடைகிறது. இதுபோல் 5 முறை முழுமையாகச் செய்ய வேண்டும்.
பலன்கள்

இந்த நாடிஷோதன பிராணாயாமம் இதயத்துடிப்பை சீராக்குகிறது. மனப்பதற்றத்தைக் குறைக்கிறது.

மூளையின் இரு அரைக்கோளங்களையும் ஒத்திசைவாக செயல்பட வைக்கிறது

. இதனால் மூளை அமைதியடைகிறது. ரத்தம் மற்றும் நுரையீரலில் படிந்துள்ள கழிவுகளை வெளியேற்றி சுத்தப்படுத்துகிறது.

நரம்பு மண்டலங்களின் செயல்பாட்டைத் தூண்டுகிறது.

ஆழ்ந்து மூச்சுவிடுவதால் ரத்தத்துக்கு ஆக்சிஜன் நிறைய கிடைக்கிறது. கவனச்சிதறல்கள் விலகி மூளை ஆற்றல் பெறுகிறது.

Related posts

அடிக்கடி மேல் வயிறு வலிக்கிறதா? உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

உயிரையும் பறிக்கும் உருளைகிழங்கு… முளைவிட்ட உருளைக்கிழங்கு ஏற்படுத்தும் ஆபத்து ?

nathan

தெரிஞ்சிக்கங்க…வெந்தயத்துலயும் இவ்வளவு பக்க விளைவுகளா? அதிகமா சாப்பிட்டால் என்ன நடக்கும்?

nathan

மருத்துவர்களின் எச்சரிக்கை! சி.டி ஸ்கேன் வேண்டாம்! இவ்வளவு பாதிப்பை ஏற்படுத்துமா?

nathan

மகளிடம் மனம் விட்டுப்பேசவேண்டும்

nathan

சின்னத்திரை தொடர்களுக்கு அடிமையாகும் பெண்கள்

nathan

உங்களுக்கு தெரியுமா புற்றுநோய், சர்க்கரை நோய் போன்ற பல நோய்களை கட்டுப்படுத்தும் அற்புத பூ ..!

nathan

நீங்கள் 40வயசுக்கு மேல வர்ற பிரச்சனையை தவிர்க்க இப்பயிருந்தே இத சாப்டுங்க!

nathan

வாழை இலையின் பயன்கள்…!

nathan