33.9 C
Chennai
Wednesday, Jun 26, 2024
21 61059e4
சமையல் குறிப்புகள்

சுவையான எண்ணெய் மாங்காய் தொக்கு.. செய்வது எப்படி?

தயிர் சாதம், மற்றும் தோசை, சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த எண்ணெய் மாங்காய் எப்படி செய்வது என்று பார்ப்போம்….

தேவையான பொருட்கள்

புளிப்பான மாங்காய் (மீடியம் சைஸ்) – 6,

மிளகாய்த்தூள் – 50 கிராம்,

மஞ்சள்தூள் – ஒரு டீஸ்பூன்,

வெந்தயம் – அரை டீஸ்பூன்,

பெருங்காயத்தூள் – ஒரு டீஸ்பூன்,

கடுகுப்பொடி – ஒரு டீஸ்பூன்,

நல்லெண்ணெய் – 100 கிராம்,

கடுகு, காய்ந்த மிளகாய் – தாளிக்க

தேவையான அளவு, உப்பு – ஒரு டீஸ்பூன் (அல்லது தேவைக்கேற்ப).

செய்முறை

மாங்காய்களை கழுவி துடைத்து சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும். வெந்தயத்தை சிறிது எண்ணெயில் சிவக்க வறுத்து பொடித்துக் கொள்ளவும்.

கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு, கடுகு தாளிக்கவும். இத்துடன் காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து, மாங்காய் துண்டுகளைப் போடவும். இதில் உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்துக் கிளறி அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்.

அதன் பிறகு, கடுகுப் பொடி போட்டு, மீதமுள்ள எண்ணெயை விட்டு, பொடித்த வெந்தயம், பெருங்காயத்தூள் சேர்த்துக் கிளறி, இறக்கி ஆற விடவும். பின்னர் சுத்தமான பாட்டிலில் சேமித்து வைக்கவும். சூப்பரான எண்ணெய் மாங்காய் ரெடி.

Related posts

கணவனை அசத்த….. சூப்பரான கனவா மீன் தொக்கு!….

sangika

எந்தெந்த பொருள்களை ஃப்ரிட்ஜில் வைக்கக் கூடாது தெரியுமா…?தெரிந்துகொள்வோமா?

nathan

சூடான உருளைக்கிழங்கு அவல் உப்புமா

nathan

சிலோன் சிக்கன் பரோட்டா…

nathan

வீட்டிலேயே செய்யலாம் மலபார் பரோட்டா

nathan

சூப்பரான வெந்தயக்கீரை பருப்பு கடைசல்

nathan

சுவையான வாழைக்காய் ரோஸ்ட்

nathan

சூப்பரான ஜவ்வரிசி போண்டா

nathan

தேங்காய் பால் புளிக்குழம்பு

nathan