35.1 C
Chennai
Monday, Jun 17, 2024
0 25 soda
ஆரோக்கியம் குறிப்புகள்

உங்களுக்கு தெரியுமா சிறுநீரகங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் மிகவும் மோசமான பழக்கங்கள்!!!

நாம் சாதாரணமான வாழ்க்கையை வாழ 20 சதவீத சிறுநீரக செயல்பாடு அவசியம். இதனால் தான் என்னவோ சிறுநீரகங்களில் பிரச்சனை என்றால் அதனை நம்மால் உடனே உணர முடியவில்லை. இப்படி முன்பே உணர முடியாததால், நீண்ட நாட்கள் கழித்து பாதிக்கப்பட்ட சிறுநீரகங்களுக்கு சிகிச்சை அளிக்கும் போது, ஒரு கட்டத்தில் அது செயலிழந்துவிடுகிறது அல்லது போதிய சிகிச்சையை அளிக்க முடியாமல் இறப்பை சந்திக்க நேரிடுகிறது.

சிறுநீரகங்கள் பாதிக்கப்படுவதற்கு முக்கிய காரணம் நாம் மேற்கொள்ளும் பழக்கவழக்கங்களும், உணவுப் பொருட்களும் தான். சிறுநீரகங்கள் உடலில பல்வேறு செயல்களை செய்கிறது. அதில் ஹார்மோன்களை உற்பத்தி செய்வது, இரத்தத்தை சுத்திகரிப்பது, கனிமச்சத்துக்களை உறிஞ்சுவது, சிறுநீரைப் பிரிப்பது, உடலின் அல்கலைன் அமிலத்தை சீராக பராமரிப்பது போன்றவை குறிப்பிடத்தக்கவை. ஆகவே சிறுநீரகங்கள் இல்லாவிட்டால் உயிர் வாழ்வது என்பது சாத்தியமில்லை.

உங்களுக்கு சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டுமானால், கீழே கொடுக்கப்பட்டுள்ள பழக்கங்களை உடனே தவிர்த்திடுங்கள். முக்கியமாக இந்த செயல்களை அன்றாடம் பின்பற்றி வந்தால், சிறுநீரகங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து, இறுதியில் உயிர் போகும் நிலைக்கு தள்ளிவிடும். சரி, இப்போது சிறுநீரகங்களின் ஆரோக்கியத்திற்கு தவிர்க்க வேண்டிய பழக்கங்கள் என்னவென்று பார்ப்போமா!!!

சோடாக்கள்

சோடா அதிகம் குடித்து வந்தால், அது சிறுநீரகங்களுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும். ஆய்வு ஒன்றில் இரண்டிற்கு மேற்பட்ட சோடாக்களை குடிக்கம் போது, சிறுநீரக நோய்கள் வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என்று சொல்கிறது. இதற்கு காரணம், சிறுநீரில் இருந்து புரோட்டீன் சிறுநீரகத்தில் அதிகம் தேங்கப்பட்டு, அது சிறுநீரகத்தில் பெரும் தீங்கை விளைவிக்கும்.

வைட்டமின் பி6 குறைபாடு

சிறுநீரகம் பாதிக்கப்படுவதற்கு வைட்டமின் பி6 குறைபாடும் ஒன்று. எனவே நல்ல ஆரோக்கியமான டயட்டை ஒவ்வொரு நாளும் பின்பற்ற வேண்டியது அவசியம். ஆய்வு ஒன்றின் படி, வைட்டமின் பி6 குறைபாட்டினால் சிறுநீரக கற்கள் வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே தினமும் குறைந்தது 1.3 மி.கி வைட்டமின் பி6 எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த வைட்டமின் பி6 மீன், கொண்டைக்கடலை, உருளைக்கிழங்கு மற்றும் சிட்ரஸ் இல்லாத பழங்கள் போன்றவற்றில் அதிகம் இருக்கும்.

உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது

சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உடற்பயிற்சி பெரிதும் உதவியாக இருக்கும். ஆய்வு ஒன்றில் உடற்பயிற்சி செய்து வந்தவர்களை பரிசோதிக்கும் போது, அவர்களுக்கு 31 சதவீதம் சிறுநீரக கற்கள் வருவதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உடல் எடையை சீராக பராமரித்து வந்தாலும் சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். ஆகவே அன்றாடம் உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

மக்னீசியம் குறைபாடு

மக்னீசியம் குறைபாடு இருந்தாலும் சிறுநீரக பிரச்சனைகள் ஆரம்பமாகும். உடலுக்கு போதிய மக்னீசியம் கிடைக்காவிட்டால், கால்சியம் சரியான உடலால் உறிஞ்சப்படாமல் மற்றும் உட்கிரகித்துக் கொள்ளாமல் போகும். இப்படி இருந்தால், சிறுநீரகத்தில் கால்சியம் அதிகம் தேங்கி, சிறுநீரக கற்கள் ஏற்படும். ஆகவே இவற்றைத் தவிர்க்க காய்கறிகள், பீன்ஸ், நட்ஸ், அவகேடோ போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்து வர வேண்டும்.

போதிய தூக்கம் இல்லாதது

தினமும் சரியாக தூங்கி எழாவிட்டாலும் சிறுநீரக பாதிப்பு ஏற்படும். எனவே அன்றாடம் போதிய அளவில் தூங்கி எழ வேண்டும். சமீபத்திய ஆய்வு ஒன்றில், நாள்பட்ட தூக்கமின்மை சிறுநீரக நோய்க்கு வழிவகுப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் தான் சிறுநீரக திசுக்கள் புதுப்பிக்கப்படும். அப்போது சரியான தூக்கத்தை மேற்கொள்ளதால் இருந்தால், சிறுநீரகமானது நேரடியாக தாக்கப்படும். ஆகவே தான் அன்றாடம் 7-8 மணிநேர தூக்கம் அவசியம் என்று சொல்கிறார்கள்.

போதிய அளவில் தண்ணீர் குடிக்காதது

தினமும் போதிய அளவில் தண்ணீர் குடிக்காமல் இருப்பதால், சிறுநீரக இயக்கம் பாதிக்கப்படும். நீங்கள் தினமும் சரியான அளவில் தண்ணீர் குடித்து வருகிறீர்கள் என்பதை சிறுநீர் கொண்டு கண்டுபிடிக்கலாம். உங்களின் சிறுநீர் வெளிர் மஞ்சள் நிறத்தில் வெளிவந்தால், நீங்கள் தினமும் சரியான அளவில் தண்ணீர் குடிக்கிறீர்கள் என்று அர்த்தம்.

சிறுநீரை அடக்குவது

சிறுநீரை அடக்கி வந்தால், சிறுநீர்ப்பையின் அழுத்தம் அதிகரித்து, அதனால் சிறுநீரகம் பாதிக்கப்படுவதோடு, சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டுவிடும். ஆகவே சிறுநீர் வந்தால் அதனை அடக்காமல் உடனே வெளியேற்றிவிடுங்கள்.

உணவில் அதிகமாக உப்பு சேர்ப்பது

உடலுக்கு உப்பு மிகவும் இன்றியமையாதது தான். ஆனால் அந்த உப்பு அளவுக்கு அதிகமானால், அது இரத்த அழுத்தத்தை அதிகரித்து, சிறுநீரகத்தில் அழுத்தத்தை அதிகமாக்கும். எனவே தினமும் 5.8 கிராம் உப்பை மட்டும் சேர்த்துக் கொண்டு வந்தால், சிறுநீரகங்களை ஆரோக்கியமாக பராமரிக்கலாம்.

காப்ஃபைன் அதிகம் உட்கொள்வது

காபி, டீ போன்றவற்றை அளவுக்கு அதிகமாக குடித்து வருபவர்களுக்கு, சிறுநீரகம் சீக்கிரம் பாதிக்கப்படும். ஆகவே அவற்றை அதிகம் குடிக்கும் பழக்கத்தை உடனே கைவிட வேண்டும்.

வலி நிவாரணிகள்

சிலர் எந்த ஒரு வலி வந்தாலும், உடனே மாத்திரை போடுவார்கள். இப்படி மருத்துவர் பரிந்துரைக்காத மாத்திரையை உட்கொண்டால், அது முதலில் சிறுநீரகத்திற்கு தான் பெரும் பாதிப்பை உண்டாக்கும். ஆகவே வலி நிவாரணிகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.

மருந்துகளை தவிர்த்தல்

உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு போன்றறை தற்போது நிறைய பேருக்கு உள்ளது. இத்தகையவர்கள் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை சரியாக பின்பற்றாவிட்டால், அது மெதுவாக சிறுநீரகங்களை பாதிக்கும். ஆகவே மருத்துவர்கள் பரிந்துரைத்த மருந்துகளை அன்றாடம் எடுத்து வர வேண்டும்.

அளவுக்கு அதிகமான புரோட்டீன்

ஆய்வு ஒன்றில் அளவுக்கு அதிகமாக புரோட்டீன் எடுத்து வந்தால், சிறுநீரகங்களுக்கு பெரும் ஆபத்து ஏற்படுவது நிச்சய்ம என்று கண்டுபிடிக்கப்பட்டள்ளது. எனவே புரோட்டீனை அளவுக்கு அதிகமாக எடுப்பதை தவிர்க்க வேண்டும்.

நோய்த்தொற்றுக்களுக்கு சரியாக சிகிச்சை எடுக்காதது

சில நேரங்களில் இருமல், சளி போன்றவற்றிற்கு சிகிக்கை அளிக்காமலேயே சரிசெய்ய முயற்சிப்போம். அப்படி செய்தால், சிறுநீரகங்கள் தான் முதலில் பாதிக்கப்படும்.

ஆல்கஹால் அதிகம் குடிப்பது

ஆல்கஹாலில் உள்ள டாக்ஸின் கல்லீரலை மட்டுமின்றி, சிறுநீரகங்களையும் தான் பாதிக்கும். எப்படியெனில், ஆல்கஹால் பருகுவதால், கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் அதிக அளவில் அழுத்தத்திறகு உள்ளாகி, பாதிப்படையும். ஆகவே ஆல்கஹால் பருகுவதை தவிர்ப்பது நல்லது.

புகைப்பிடித்தல்

புகைப்பிடிப்பதால், இரத்த நாளங்கள் கடினமாகி, அதனை அளவு குறைந்து சிறுநீரகங்களுக்கு செல்லும் இரத்த ஓட்டம் குறைந்து, சிறுநீரகங்களின் செயல்பாட்டிற்கு இடையூறு ஏற்பட்டு, அது மெதுவாக பாதிக்கப்படும். மேலும் ஆய்வு ஒன்றில் ஒரு நாளைக்கு 2 சிகரெட்டிற்கு மேல் புகைத்தால், அது சிறுநீரகத்தை மட்டுமின்றி, நுரையீரலையும் பாதித்து, இறப்பிற்கு வழிவகுக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.

Related posts

பெண்கள் தங்க நகைகள் அணிவதால் இவ்வளவு நன்மையா….

nathan

உங்க குழந்தைகிட்ட செல்போன் கொடுக்கும் போது இத மட்டும் செய்ங்க!

nathan

தெரியுமா உங்களுக்கு மாதுளம் பழம் சாப்பிடறதுல இவ்வளவு ரிஸ்க் இருப்பது?

nathan

இந்த 8 காரணங்களுக்காக இளஞ்சூடான தண்ணீரை குடிங்க..!

nathan

தினந்தோறும் காபி குடிக்கும் பழக்கத்தை மேற்கொள்பவர்கள் கட்டாயம் இத படிங்க!…

sangika

மன அழுத்தத்தை போக்கும் பூக்கள்..தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

சிம்பிளா செய்யலாம் சப்பாத்தி வெஜ் ஸ்டஃபிங்

nathan

உடல் எடையை ஒரே வாரத்தில் குறைக்க வேண்டுமா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

பெர்ஃப்யூம் பிரியரா நீங்கள்?

nathan