26.5 C
Chennai
Thursday, Nov 21, 2024
black coffee 21 600
ஆரோக்கியம் குறிப்புகள்

தெரிஞ்சிக்கங்க…காபி குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!!!

காலையில் எழுந்தவுடன் எது இருக்கிறதோ இல்லையோ, நம்மில் பலருக்கும் காபி இருந்தாக வேண்டும். அதுவும் பெட் காபி இல்லாமல் பலரும் படுக்கையை விட்டு எழுந்திருப்பதே இல்லை. காபிக்கு அடிமையாகி இருப்பவர்கள் கொஞ்சம் நஞ்சமல்ல. காபி என்ற சொல்லை உச்சரித்தாலே சிலரின் முகம் மலர்ந்து விடும். காபி குடித்தால் மட்டுமே அவர்களால் அவர்களின் வேலையை ஒழுங்காக செய்ய முடியும்.

இதையெல்லாம் மீறி காபியில் உள்ள உடல்நல பயன்களைப் பற்றி நீங்கள் அறிவீர்களா? ஏற்கனவே சொன்னதை போல் நம்மில் பலரும் காபி பிரியர்களாக தான் இருப்போம். ஒரு காபி இல்லாமல் அந்த நாளை நினைத்து பார்ப்பதே கடினமான ஒன்றாக இருக்கும். காபி என்பது நம் உடலுக்கு ஆரோக்கியமற்றது என நம் முன்னோர்கள் நம்மிடம் கூறியிருப்பார்கள். ஆனால் அதனைப் பற்றி சற்று ஆழமாக பார்க்கையில், அது பொய் என்பது உங்களுக்கு தெரிய வரும். உண்மையை சொல்லப்போனால் காபியில் சில உடல்நல பயன்கள் அடங்கியுள்ளது. ஆனால் அதை அளவாக தான் குடிக்க வேண்டும் என்பதை மட்டும் மறந்து விடாதீர்கள்.

காபியில் கூட ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் போன்ற சில ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது. சில குறிப்பிட்ட வியாதிகள் ஏற்படும் இடர்பாட்டை இது பெருமளவில் குறைக்கும். இப்போது காபி நமக்கு அளித்திடும் உடல்நல பயன்களைப் பற்றி தான் நாம் பார்க்க போகிறோம். காபியை பற்றி நடத்தப்பட்ட பல ஆய்வுகளும் சுவாரசியமான கண்டுபிடிப்புகளை மேற்கொண்டுள்ளது. இந்த தகவல்களை தெரிந்து கொள்வது நல்லது தான் என்றாலும் கூட, அதன் மீது ஒட்டுமொத்தமாக சார்ந்திருப்பது தவறு. அதனால் உடல் ஆரோக்கியத்தை பெனிட வேண்டும் என்றால் தினமும் ஒரு கப் அல்லது அதற்கும் குறைவான அளவில் காபி குடியுங்கள்.

எச்சரிக்கையுடன் இருக்க வைக்கும்

மனநிலை, நினைவாற்றல், எச்சரிக்கை தன்மை மற்றும் எதிர்வினை நேரம் போன்ற சில மூளையின் செயல்பாடுகளை காபி மேம்படுத்தும். அதனால் தான் உஷார் நிலையில் இருக்க வேண்டிய சில வேலைகளை பார்க்கும் போது காபி குடிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

ஆற்றல் திறன்

காபி உங்கள் ஆற்றல் திறனை அதிகரிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? அது உங்கள் அமைப்பை ஊக்குவிப்பதால் உங்களால் தற்காலிகமாக புத்திசாலித்தனமாக சிந்திக்க முடியும்.

சோர்வான உணர்ச்சியை குறைக்கும்

சோர்வான உங்கள் உணர்ச்சியை சில நேரத்திற்கு மறக்கடிக்க செய்யும் காபி. காப்ஃபைன் என்ற ஊக்குவிக்கி அதில் உள்ளதால், கொஞ்ச நேரத்திற்கு உங்களால் ஆற்றலுடன் செயல்பட முடியும். உங்கள் குருதியோட்டத்தில் காப்ஃபைன் வந்து விட்டால், அது மூளையை வேகமாக சென்றடையும்.

நரம்பணுக்களை சூடேற்றும்

காபியில் உள்ள காப்ஃபைன் அடினோசினை (நரம்பியகடத்துகை) தடுக்க உதவும். இதனால் நரம்பணுக்களை சூடேறும்.

ஈரலை பாதுகாக்கும்

உங்கள் கல்லீரலைப் பாதுகாக்கவும் காபி பயன்படுகிறது என சில ஆய்வுகள் கூறுகிறது.

மன அழுத்தத்தை எதிர்த்து போராடும்

காபி உங்களை ஊக்குவிப்பதால், மன அழுத்தத்தை எதிர்த்து அது சிறப்பாக போராடும். காபியால் கிடைக்கும் உடல்நல பயன்களில் இதுவும் ஒன்றாகும்.

உடல் எடையை குறைக்க உதவும்

உங்கள் உடல் எடையை குறைக்க காபி உதவும் என்ற விஷயம் உங்களுக்கு தெரியுமா? சொல்லப்போனால், கொழுப்பை எரிக்கும் பொருட்களை தயாரிப்பவர்கள் அதில் காப்ஃபைன் பயன்படுத்துவதற்கான காரணமே இது தான். காப்ஃபைன் உங்கள் மெட்டபாலிசத்தை துரிதப்படுத்த உதவும். இதனால் கொழுப்பு வேகமாக எரியும். அதற்காக அளவுக்கு அதிகமாக காபி குடித்தால் மெலிந்து விடலாம் என்றில்லை. காப்ஃபைன் உட்கொள்ளும் அளவை எப்போதுமே குறைவாக வைத்துக் கொள்ளுங்கள்.

ஆயுளை அதிகரிக்கும்

சில வாழ்வு முறை நிலைகளை பொறுத்து, காபி உங்கள் ஆயுளை நீடிக்க உதவும் என நம்பகத்தன்மையுள்ள சில ஆய்வுகள் கூறியுள்ளது.

புற்றுநோயைத் தடுக்கும்

புற்றுநோய்க்கான இடர்பாட்டையும் காபி குறைக்கும். காபியால் கிடைக்கும் உடல்நல பயன்களில் இதுவும் ஒன்றாகும்.

ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளது

காபியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களும் உள்ளது. இதனை குறைவான அளவில் குடித்தால், அது ஆரோக்கியமான பானமாக இருக்கும். ஆனால் அதனை அதிகமாக குடிக்கும் போது வேறு சில உடல்நல சீர்கேடுகள் உண்டாகும். காபியால் கிடைக்கும் ஊட்டச்சத்து பயன்களில் இதுவும் ஒன்றாகும்.

வாதத்தை தடுக்கும்

இதய வாதம் போன்ற சில இதய பிரச்சனைகளை தடுக்க காபி உதவுகிறது. காபியால் கிடைக்கும் உடல்நல பயன்களில் இதுவும் கூட ஒன்றாகும்.

அட்ரினலின் ரஷ்ஷை ஏற்படுத்தும்

காபியினால் கிடைக்கும் மற்றொரு பயன் தான் அட்ரினலின் ரஷ். இதனால் உங்களின் உடல் ரீதியான செயலாற்றுகையை மேம்படுத்த உதவும். மூளைக்கு காபியால் கிடைக்கும் பயன்களில் இதுவும் ஒன்றாகும்.

ஊக்குவிக்கும்

உங்கள் நரம்புகள் மற்றும் ஒட்டு மொத்த நரம்பியல் அமைப்பையும் கஃப்பைனால் ஊக்குவிக்க முடியும். உங்களின் ஒட்டுமொத்த உடல் ரீதியான செயலாற்றுகையை மேம்படுத்தவும் இது முக்கிய பங்கை வகிக்கிறது. மிக தீவிரமான உடற்பயிற்சியை மேற்கொள்ள நீங்கள் விரும்பினால், காபி குடிப்பது சற்று உதவும்.

மூளைத் தேய்வை தடுக்கும்

மூளைத் தேய்வு நோய் ஏற்படும் இடர்பாட்டை குறைக்கவும் கூட காபி உதவுகிறது என சில ஆய்வுகள் கூறுகிறது.

ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது

காபியில் பல ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது என்ற தகவல் நம்மில் பலருக்கும் தெரியாது. அதில் பொட்டாசியம், மாங்கனீஸ், பாண்டோதெனிக் அமிலம், நையாசின், மக்னீசியம் மற்றும் ரைபோஃப்ளேவின் அடங்கியுள்ளது. காபியால் கிடைக்கும் ஊட்டச்சத்து பயன்களில் இதுவும் ஒன்றாகும்.

நடுக்குவாத நோயை தடுக்கும்

பார்கின்சன் நோய் எனப்படும் நடுக்குவாத நோயை தடுக்கவும் கூட காப்ஃபைன் முக்கிய பங்கை வகிக்கிறது.

சர்க்கரை நோயைத் தடுக்கும்

சர்க்கரை நோயைத் (டைப் 2) தடுக்கவும் காபி உதவுகிறது என சில ஆய்வுகள் பரிந்துரைக்கிறது. காபியால் கிடைக்கும் உடல்நல பயன்களில் இதுவும் ஒன்றாகும்.

Related posts

ஆண்மை குறைவு, மாரடைப்பை உண்டாக்கும் நாண் ஸ்டிக் பாத்திரங்கள்

nathan

பெண்களே தெரிந்துகௌ்ளுங்கள் ! குழந்தைக்கு தாய்ப்பால் போதவில்லை என்பதை எப்படிக் கண்டறிவது?

nathan

கோடை வெயிலில் உங்க கண்களில் என்ன பிரச்சனை ஏற்படும்?

nathan

பற்களுக்கு பின் உள்ள மஞ்சள் கறைகளை நீக்குவதற்கான சில எளிய இயற்கை வழிகள்!

nathan

மூட்டை பூச்சிகளை விரட்டுவதில் இது மிகவும் பயனுள்ளது!…

sangika

உங்க மென்மையான சருமத்திற்கு ஏற்ற மூலிகைகள் தெரியுமா!!!

nathan

சூப்பர் டிப்ஸ்! முதுமையில் ஆரோக்கியமாய் வாழ இளமையில் செய்ய வேண்டியவை

nathan

இந்த அற்புதமான ஆயுர்வேத தூள் பற்றி தெரியுமா ? தெரிஞ்சிக்கங்க…

nathan

புத்துணர்ச்சி…உடல் ஆரோக்கியம்… ஒரே கல்லில் இரண்டு மாங்காய்….

sangika