32.3 C
Chennai
Wednesday, Jul 9, 2025
01 kambu curd rice
ஆரோக்கிய உணவு

சுவையான கம்பு தயிர் சாதம்

காலை வேளையில் தானியங்களில் ஒன்றான கம்புவை உணவில் சேர்த்து வந்தால், ஒரு நாளைக்கு தேவையான ஆற்றல் கிடைப்பதுடன், உடலும் வலிமையாக இருக்கும். அத்தகைய கம்பை எப்படி செய்வது என்று தெரியவில்லையா? அப்படியானால் தொடர்ந்து படியுங்கள்.

ஏனெனில் இங்கு மிகவும் ஈஸியான கம்பு தயிர் சாதம் ரெசிபியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து முயற்சித்துப் பாருங்கள்.

தேவையான பொருட்கள்:

உடைத்த கம்பு – 1/2 கப்
தண்ணீர் – 4 கப்
தயிர் – 1 கப்
கேரட் – 2 1/2 டேபிள் ஸ்பூன் (துருவியது)
மாங்காய் – 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி – 2 டீஸ்பூன் (நறுக்கியது)
உப்பு – தேவையான அளவு

தாளிப்பதற்கு…

எண்ணெய் – 1 டீஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
பச்சை மிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி – 1/4 இன்ச்

குறிப்பு: ஒருவேளை முழு கம்பு இருந்தால், அதனை நீரில் 15 நிமிடம் ஊற வைத்து, பின் மிக்ஸியில் போட்டு கொரகொரவென்று அரைத்து எடுத்துக் கொள்ளலாம்.

செய்முறை:

முதலில் உடைத்த கம்பை நீரில் நன்கு கழுவி, பின் அதனை குக்கரில் போட்டு, தண்ணீர் ஊற்றி, மிதமான தீயில் 4 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.

விசிலானது போனதும், அதனை திறந்து, தண்ணீர் அதிகம் இருந்தால், மீண்டும் அடுப்பில் வைத்து, சற்று கெட்டியாகும் வரை கிளறி விட்டு இறக்கி, ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.

பின்பு அத்துடன் தயிர் சேர்த்து நன்கு கிளறி, பின் கேரட், கொத்தமல்லி, மாங்காய் சேர்த்து தேவையான அளவு உப்பு தூவி நன்கு கிளறி விட வேண்டும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளித்து, கம்புடன் சேர்த்து கிளறினால், சுவையான கம்பு தயிர் சாதம் ரெடி!!!

Related posts

சோர்வை போக்க காலை உணவு அவசியம்

nathan

ஆப்பிளை எப்போது சாப்பிட வேண்டும்?

nathan

`அவிச்ச முட்டை, ஆம்லெட் இதுல எது நல்லது?’… முட்டை குறித்த சந்தேகங்கள்

nathan

உங்களுக்கு தெரியுமா வயிற்றுப் புண்ணை நொடியில் குணமாக்கும் அதிசய மூலிகை பானம்….

nathan

உங்களுக்கு கெட்ட கொலஸ்ட்ரால் சட்டென்று குறையணுமா? அப்ப தினமும் செய்யுங்க…

nathan

தெரிஞ்சிக்கங்க…வெறும் வயிற்றில். வெந்தயம் ஊற வைத்த நீரை குடியுங்க. எந்த நோயுமே அண்டாது.!!!

nathan

கறிவேப்பிலை இலைகளுடன் ஒரு பேரீச்ச‍ம் பழத்தை தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் .

nathan

காலையில் வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம், எவற்றைச் சாப்பிடக் கூடாது?

nathan

கொள்ளு ரசம்

nathan