தலையில் ஏற்படும் ஒருவகை பூஞ்சைத் தொற்றால் பொடுகு உருவாகிறது. வெள்ளை நிறத்தில் திட்டு திட்டாக காணப்படும் பொடுகு, முடியின் அழகை கெடுப்பதுடன் தலையில் அரிப்பை ஏற்படுத்துகிறது.
தலைமுடியை சரியாக சுத்தம் செய்யாதது, தலைக்கு பயன்படுத்தும் அழகு சாதன பொருட்கள் என பல காரணங்களால் பொடுகு ஏற்படுகிறது. மன இறுக்கம், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு ஆகியவை காரணமாகவும் பொடுகு தொல்லை ஏற்படுகிறது.
பொடுகு தொல்லை அதிகமாகும் போது ரசாயன ஷாம்புகளை பயன்படுத்துவதை தவிர்த்துவிட்டு, இயற்கை வைத்தியங்களை (Natural Remedies) மேற்கொள்வது மிக நல்லது. பொடுகை போக்க பல வழிமுறைகளை வீட்டு வைத்தியமாக இயற்கை முறையில் செய்வார்கள். அவற்றில் சில:
வேப்பிலை, துளசி இரண்டையும் சேர்த்து அரைத்து தலையில் தேய்த்து சிறிதுநேரம் ஊற வைத்து சற்று கழித்து குளிக்க வேண்டும்.
தேங்காய் எண்ணெயில் (Coconut Oil) வெந்தயத்தை சேர்த்து காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால் பொடுகுப் பிரச்சனை போயே போச்சு!
தேங்காய் எண்ணெயில் வசம்பு சேர்த்து ஊறவைத்து அந்த எண்ணெயை தலையில் தேய்த்து வந்தால் பொடுகுத் தொல்லைகள் மாயமாகும்.
தயிர் மற்றும் எலுமிச்சைசாறு (Lemon Juice) கலந்து ஐந்து நாட்களுக்கு ஒருமுறை தலையில் தேய்த்து குளித்தால் பொடுகுத் தொல்லைகள் தீரும்.
வெந்தயத்தை பொடி செய்து தலையில் தேய்த்து சிறிதுநேரம் கழித்து குளிக்கலாம்.
தயிருடன் கடலைமாவுடன் சேர்த்து தலைக்கு சேர்த்துக் குளிக்கலாம். இது பொடுகுப் பிரச்சனையைத் தீர்க்கும்.
வாரத்திற்கு ஒருமுறை முட்டையின் (Egg) வெள்ளைக்கருவை தலைக்கு தேய்த்து குளிக்காலம்.
இவற்றில் ஏதாவது ஒன்றை தொடர்ந்து செய்துவந்தால், பொடுகு தொல்லை இன்றி, தலைமுடி ஆரோக்கியமாகவும் அழகாகவும் பளபளக்கும்.