25 C
Chennai
Thursday, Jun 13, 2024
20 1421734919 1 home rem
தலைமுடி சிகிச்சை

பெண்களே தெரிஞ்சிக்கங்க…தலைமுடி வளர்ச்சிக்கு மாயங்களை செய்யும் சக்தி வாய்ந்த சில வீட்டு சிகிச்சைகள்!!!

சிறியவர்களோ, இளைஞர்களோ, பெரியவர்களோ, தலை முடி என்றால் அனைவருக்குமே பிரியம் தான். முடியின் ஆரோக்கியம் தான் ஸ்டைல் மற்றும் அழகு போன்ற காரணிகளை தீர்மானிக்கும் முக்கிய பங்கை வகிக்கிறது. முடி கொட்டுதல், பொடுகு போன்றவைகள் சில தான் நாம் அன்றாடம் சந்திக்கும் பொதுவான முடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளாகும். சீக்கிரமே முடி கொட்டுவது வயதாவதற்கான அறிகுறியாகும். அதேப்போல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மாசு, கடினமான வாழ்க்கை முறை மற்றும் முடிவில்லாத வேலைப்பளு ஆகியவைகளே முடி கொட்டுதலுக்கு முக்கிய காரணமாக உள்ளது.

நாம் பெரும்பாலும் புறக்கணிக்கும் மற்றொரு காரணியும் உள்ளது. முன்பெல்லாம் பெண்கள் தங்கள் கூந்தலை மிக நன்றாக பராமரித்து வந்தனர். ஆனால் இன்றோ நமக்கு அதற்கெல்லாம் எங்கே நேரமுள்ளது? உடனடி தீர்வுகளை பெற வேண்டும் என்ற காரணத்தினால் இயற்கையான சிகிச்சைகளில் இருந்து ரசாயன சிகிச்சை முறைக்கு நாம் மாறி விட்டோம். ஆரோக்கியமான கூந்தலுக்கு உடனடி பலன்கள் சரியான தீர்வு அல்ல. அதனை காலப்போக்கில் நாம் கண்கூட பார்த்து உணர்ந்திருப்போம். மீண்டும் பழங்காலத்து தீர்வுகளை பின்பற்ற வேண்டிய நேரம் வந்து விட்டது. அதற்கு முன்பு முடி வளர்ச்சியின் சுழற்சி பற்றி சற்று பார்க்கலாம்.

இயற்கையாகவே தலை முடியை வளர்ப்பது எப்படி?

தலை முடிக்கு இயற்கையான முறையில் பராமரிப்பை அளிக்கும் போது அதனால் பல பயன்கள் உள்ளது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் குறைந்த செலவில் இது வேலை செய்கிறது. இது எப்படி தெரியுமா உள்ளது? கேக்கையும் செர்ரியையும் ஒரே நேரத்தில் உட்கொள்வதை போல் உள்ளது!

மிகச்சிறந்த பலன்களை அளித்திடும் இயற்கையான சிகிச்சைகள் பல உள்ளது. அவைகளை நான்கு வகைகளாக பிரித்துள்ளோம்: சமையலறை சிகிச்சைகள், அதிமுக்கிய எண்ணெய்கள், உணவுகள் மற்றும் இயற்கையான பானங்கள்.

வெங்காய ஜூஸ்

முடி வளர்ச்சிக்கு மிகவும் பழமையான, ஆனால் மிகச்சிறந்த வீட்டு சிகிச்சை இதுவாகும். வெங்காய ஜூஸில் சல்ஃபர் வளமையாக உள்ளது. இது திசுக்களில் கொலாஜென் உற்பத்தியை ஊக்குவிக்கும். இதனால் கூந்தல் மீண்டும் வளர்ந்திட உதவிடும்.

பயன்படுத்தும் முறை:

சிகப்பு வெங்காயத்தை சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள். அதன் சாற்றைப் பிழிந்து எடுங்கள். இதனை உங்கள் தலைச்சருமத்தின் மீது கவனமாக தடவுங்கள். பின் 15 நிமிடங்களுக்கு அதை அப்படியே விட்டு விடுங்கள். பின் மிதமான ஷாம்புவைக் கொண்டு அலசுங்கள்.

ஆப்பிள் சீடர் வினிகர்

இந்த வினிகர் உங்கள் தலைச்சருமத்தை மென்மையாக சுத்தப்படுத்தும். முடி வளர்ச்சியை வேகப்படுத்த, முடியின் PH சமநிலையை பராமரித்திடும்.

பயன்படுத்தும் முறை:

முதலில் கூந்தலை ஷாம்பு போட்டு நீரில் நன்கு அலசவும். இறுதியில் அலசும் போது ஆப்பிள் சிடர் வினீகரை பயன்படுத்தவும். இதனால் ஆரோக்கியமான மற்றும் பிரகாசமான கூந்தலைப் பெறலாம். 1 லிட்டர் சொல்யூஷன் என்றால் 1 லிட்டர் தண்ணீருடன் 75 மி.லி. ஆப்பிள் சிடர் வினீகரை கலந்து கொள்ளுங்கள். இதனை சின்ன சின்ன டப்பாவில் சேமித்து வைத்துக் கொள்ளலாம்.சிறிய அளவில் தயார் செய்ய வேண்டுமானால், 15 மி.லி. ஆப்பிள் சிடர் வினீகரை வெதுவெதுப்பான 1 கப் நீரில் கலந்திடவும். கூந்தலை கழுவிய பின்பு, இந்த கப்பை கடைசி முறை அலச பயன்படுத்துங்கள்.

முட்டை மாஸ்க்

உலகத்தைச் சுற்றியுள்ள பல்வேறு கலாச்சாரங்களால், சிறிய மாற்றங்களுடன், பின்பற்றப்படும் வீட்டு சிகிச்சை இது. இதில் அதிக அளவிலான புரதங்கள் உள்ளதால் புதிய முடி உருவாவதற்கு உதவிடும். மேலும் சல்ஃபர், ஜிங்க், இரும்பு, செலீனியம், பொட்டாசியம் மற்றும் ஐயோடின் ஆகியவைகளும் இதில் வளமையாக உள்ளது.

பயன்படுத்தும் முறை:

ஒரு முட்டையின் வெள்ளை கருவை எடுத்து, அதனுடன் 1 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயைக் கலந்திடவும். வழுவழுப்பான பேஸ்ட் உருவாகும் வகையில் அதனை நன்றாக கலந்திடவும். இதனை தலை முடி முழுவதும் கவனமாக தடவுங்கள். பின் அதை அப்படியே ஒரு 20 நிமிடங்களுக்கு விட்டு விடுங்கள். பின் குளிர்ந்த நீரில் தலை முடியை அலசிய பின்பு ஷாம்பு போட்டு குளித்திடுங்கள்.

வெந்தயம்

முடி கொட்டுதலுக்கு பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் மற்றொரு வீட்டு சிகிச்சை இதுவாகும். முடி வளர்ச்சியை அதிகரித்து, முடியின் இயற்கையான நிறத்தை பாதுகாக்கும் திறனை கொண்டுள்ளது வெந்தயம்.

பயன்படுத்தும் முறை:

1 டீஸ்பூன் வெந்தய பேஸ்ட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் 2 டீஸ்பூன் தேங்காய் பாலை சேர்த்திடவும். இதனை தலைச்சருமும் மற்றும் கூந்தல் முழுவதும் தடவிடுங்கள். 30 நிமிடங்களுக்கு அப்படியே விட்டு விடுங்கள். மிதமான ஷாம்பு கொண்டு கழுவிடுங்கள்.

உருளைக்கிழங்கு ஜூஸ்

இது ஒரு ரகசியமான வீட்டு சிகிச்சையாகும். உருளைக்கிழங்கு ஜூஸின் முடி வளர்ச்சி குணங்கள் பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. உருளைக்கிழங்கில் வைட்டமின் ஏ, பி மற்றும் சி வளமையாக உள்ளது. முடி வளர்ச்சிக்கு இவைகள் முக்கியமானவைகளாகும். முடி மெல்லிசாகும் பிரச்சனையான ஆலோபீசியாவால் நீங்கள் அவதிப்பட்டு வந்தாலும் கூட இதனை பயன்படுத்தலாம்.

பயன்படுத்தும் முறை:

உருளைக்கிழங்கு ஜூஸை தலைச்சருமத்தின் மீது தடவவும். 15 நிமிடங்களுக்கு அதை அப்படியே விட்டு விடுங்கள். பின் மிதமான ஷாம்பு கொண்டு கூந்தலை கழுவிக் கொள்ளுங்கள்.

மருதாணி பேக்

மருதாணி என்பது நன்றாக அறியப்படும் இயற்கை கண்டிஷனராகும். முடி வளர்ச்சிக்கும் இது நல்லதாகும். மந்தமாக மற்றும் வறண்டு காணப்படும் முடியை வழுவழுப்பாகவும், பளபளப்பாகவும் மாற்ற இது உதவும். மேலும் நிறங்களையும் அளிக்கும். முடியின் வேரை திடப்படுத்தி, அதன் மூலம் முடியின் வளர்ச்சியை மேம்படுத்தும்.

பயன்படுத்தும் முறை:

1 கப் காய்ந்த மருதாணி பொடி, சிறிது எலுமிச்சை சாறு மற்றும் ½ கப் தயிரை ஒன்றாக கலந்து, பேக் ஒன்றை தயார் செய்யவும். இதனை முடியின் வேர் முதல் நுனி வரை நன்றாக தடவவும். முழுமையாக காயும் வரை அப்படியே விட்டு விடுங்கள். மிதமான ஷாம்பு கொண்டு கழுவி விடுங்கள்.

சிவப்பு மிளகாய்

சிவப்பு மிளகாய் முடி வளர்ச்சியை மேம்படுத்தி, முடி அடர்த்தி குறைவதை தடுக்கும். இதில் காப்சைசின் என்ற ரசாயனம் உள்ளது. இதனை தலைச்சருமத்தில் தடவும் போது நரம்புகள் முனைப்புடன் செயல்படும். இதனால் தலைச்சருமத்தில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும், ஊட்டச்சத்து அதிகமாக உறிஞ்சப்படும், அதன் விளைவாக முடியின் வளர்ச்சி மேம்படும்.

பயன்படுத்தும் முறை:

1 டீஸ்பூன் மிளகாய் பொடியை 2 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயுடன் கலந்திடவும். முடியின் அடர்த்து குறையும் போது, இதனை தலைச்சருமத்தில் தடவுங்கள். பின் குளிர்ந்த நீரில் கழுவிடுங்கள்.

தேங்காய் பால்

தேங்காய் பாலில் புரதம், இரும்பு, பொட்டாசியம் மற்றும் அதிமுக்கிய கொழுப்புகள் வளமையாக உள்ளது. இது முடி உதிர்வையும், உடைதலையும் குறைக்கும்.

பயன்படுத்தும் முறை:

தேங்காயில் இருந்து பாலை எடுக்கவும். இதனை தலையில் வேண்டிய இடத்தில் தடவுங்கள். இரவு முழுவதும் அப்படியே விட்டு விடுங்கள். மறுநாள் காலை குளிர்ந்த நீரில் கழுவி விடுங்கள். மிகச்சிறந்த முடி வளர்ச்சிக்கான சிகிச்சை இதுவாகும்.

கிரீன் டீ

நீங்கள் அறிந்ததை போல், கிரீன் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் வளமையாக நிறைந்துள்ளது. இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் முடி உதிர்தலை தடுத்து, முடி வளர்ச்சியை மேம்படுத்தும்.

பயன்படுத்தும் முறை:

வெதுவெதுப்பான கிரீன் டீயை தலைச்சருமத்தின் மீது தடவவும். ஒரு மணி நேரத்திற்கு அப்படியே விட்டு விடவும். குளிர்ந்த நீரில் அலசிடவும்.

நெல்லிக்காய்

நெல்லிக்காயில் உள்ள பல்வேறு அதிசய குணங்களைப் பற்றி நீங்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள். ஆன்டி-ஆக்ஸிடன்ட்களும் வைட்டமின் சி-யும் வளமையாக உள்ள கிடைங்கு என்றால் அது மிகையாகாது. ஆரோக்கியமான முடி வளர்ச்சியை மேம்படுத்தும் நெல்லிக்காய், தலை முடியின் நிறமியையும் மேம்படுத்தும்.

பயன்படுத்தும் முறை:

2 டீஸ்பூன் நெல்லிக்காய் பொடி அல்லது ஜூஸை 2 டீஸ்பூன் எலுமிச்சை ஜூஸ் உடன் கலந்திடுங்கள். இதனை தலைச்சருமத்தில் தடவுங்கள். பின் காயும் வரை அப்படியே விட்டு விடுங்கள். இப்போது வெதுவெதுப்பான நீரில் நன்றாக அலசிடுங்கள்.

சீரகம்

சீரகம் என்பது 100% ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்களுடன் வரக்கூடியவை. இது கூந்தலை மீண்டும் நிறைவாக்க உதவும்.

பயன்படுத்தும் முறை:

ஆலிவ் எண்ணெய் அல்லது ஆமணக்கு எண்ணெயில் சீரகத்தை ஊற வைக்கவும். இரவு முழுவதும் அது ஊறட்டும். மறுநாள் காலை, அதனை தலையில் தடவவும். 15 நிமிடங்களுக்கு பிறகு மிதமான ஷாம்பு கொண்டு கழுவுங்கள்.

மிளகு

ஆயுர்வேத மருந்தில் மிளகின் பயன்பாடு பரவலாக இருந்து வந்துள்ளது. உங்கள் கூந்தலை இது மென்மையாக்கி பளபளக்க வைக்கும். மேலும் கூந்தலின் அமைமுறையையும் மேம்படுத்தும். மிளகில் அதிமுக்கிய எண்ணெய்கள் உள்ளதால் உங்கள் தலைச்சருமம் நீர்ச்சத்துடன் இருக்கும்.

பயன்படுத்தும் முறை:

2 டீஸ்பூன் மிளகை 1/2 கப் எலுமிச்சை ஜூசுடன் கலந்திடவும். வழுவழுப்பான பேஸ்ட்டை தயார் செய்திடவும். இந்த பேஸ்ட்டை முடியின் வேர்களில் தடவிடவும். ஆழமாக உள்ளிரங்க உங்கள் தலையை துண்டால் மூடிக் கொள்ளுங்கள். அரை மணிநேரம் கழித்து அலசிடுங்கள்.

செம்பருத்தி பூ

முடி வளர்ச்சிக்கான மற்றொரு வீட்டு சிகிச்சை தான் செம்பருத்தி பூ. “தலை முடி பராமரிப்பிற்கான பூ” என இது அறியப்படுகிறது. பொடுகை குணப்படுத்தவும், முடி வளர்ச்சியை மேம்படுத்தவும் இந்த பூ பயன்படுத்தப்படுகிறது. முடிக்கு அடர்த்தியை அளித்து, சீக்கிரத்தில் வயதாவதைத் தடுக்கவும் இது உதவிடும்.

பயன்படுத்தும் முறை:

செம்பருத்தி பூவை தேங்காய் எண்எணய் அல்லது எள் எண்ணெயில் கலந்து பேஸ்ட் ஒன்றை தயார் செய்து கொள்ளவும். இதனை சமமான முறையில் தலையில் தடவவும். பின் மிதமான ஷாம்பு கொண்டு அலசவும்.

பூண்டு

முடி உதிர்வை குறைப்பதற்கு மிக பரவலாக பயன்படுத்தப்படும் வீட்டு சிகிச்சை தான் பூண்டு. புதிய முடியின் வளர்ச்சியை ஊக்கப்படுத்தி, தலைச்சருமத்தில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்.

பயன்படுத்தும் முறை:

நசுக்கிய பூண்டு சிலவற்றை ஆலிவ் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் போட்டு கொதிக்க வைக்கவும். இதனை முடியின் வேர்களில் நன்றாக தடவவும். தலையை நன்றாக கழுவுங்கள். நல்ல பலனைப் பெற இந்த சிகிச்சையை வாரம் மூன்று முறை பயன்படுத்தவும்.

வைட்டமின் ஈ எண்ணெய்

காலம் காலமாக, முடி வளர்ச்சிக்கு சிறந்த வீட்டு சிகிச்சையாக உள்ளது வைட்டமின் ஈ. வைட்டமின் ஈ எண்ணெயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் வளமையாக உள்ளது. இதனால் இயக்க உறுப்புகளை எதிர்த்து திறம்பட செயல்படும். இதனால் உடலில் ஆக்சிஜன் அளவை அதிகரிக்க உதவும். தலைச்சருமத்தில் இரத்த ஓட்டத்தின் அளவையும் அதிகரிக்கும்.

பயன்படுத்தும் முறை:

வைட்டமின் ஈ எண்ணெய்யை கொண்டு தலைச்சருமத்தில் மசாஜ் செய்யுங்கள். இரவு முழுவதும் அப்படியே விட்டு விடுங்கள். மறுநாள் காலை, மிதமான ஷாம்பு கொண்டு கழுவினால், மென்மையான மற்றும் வழுவழுப்பான முடியை பெறலாம்.

அதிமுக்கிய எண்ணெய் சிகிச்சைகள்

அதிமுக்கிய எண்ணெய்களை கொண்டு சீரான முறையில் மசாஜ் செய்து வந்தால், முடி வளர்ச்சி மேம்பட்டு, முடி உதிரவும் முடியின் நுனி பிளவுபடுவதும் குறையும். இது உங்கள் முடியை மென்மையாகவும், வழுவழுப்பாகவும் மாற்றும். ஏதாவது ஒரு அதிமுக்கிய எண்ணெய்யை கொண்டு மசாஜ் செய்த பிறகு, சூடான துண்டு அல்லது ஷவர் கேப்பை கொண்டு தலையை மூடிடுங்கள். இதனால் தலையில் உள்ள துவாரங்கள் திறந்து கொள்ளும். அந்த எண்ணெயும் தலைச்சருமத்திற்குள் ஆழமாக இறங்கும். இது தலைச்சருமத்தை ஊக்குவித்து, முடி வளர்ச்சிக்கு தேவையான இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். சீரான முறையில் சூடான எண்ணெய் சிகிச்சை செய்து வந்தால், பொடுகு தொல்லை நீங்கி, பிரகாசமான கூந்தலைப் பெறலாம்.

தேங்காய் எண்ணெய்

கூந்தலுக்கான சிறந்த இயற்கையான கண்டிஷனர் இதுவாகும். பல நூற்றாண்டுகளாக இது பயன்படுத்தப்பட்டு வருகிறது.

வளமையான புரதம் மற்றும் பொட்டாசியத்தைக் கொண்டுள்ள தேங்காய் எண்ணெய் தலைச்சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்; புதிய முடிகளின் வளர்ச்சியை மேம்படுத்தும்; பாதிப்படைந்த முடிகளை சீர் செய்யும். மேலும் பொடுகுத் தொல்லை, முடி உடைதல் மற்றும் முடி உதிர்வை குறைக்கும்.

பாதிப்படைந்த முடிக்கான சிகிச்சைக்கு தேங்காய் எண்ணெய் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் ஒரு மாய்ஸ்சுரைசராகவும் அது செயல்படுகிறது. கூடுதலாக முடியை அதன் வேரிலிருந்து வலுப்படுத்தும். இதனால் முடி உடைதல் தடுக்கப்படும். மேலும் தலைச்சருமம் ஈரப்பதத்துடன் மற்றும் புத்துணர்வுடன் இருக்கும். சிறந்த பலனைப் பெறுவதற்கு சூடான தேங்காய் எண்ணெய் சிகிச்சையை பயன்படுத்துங்கள்.

ரோஸ்மேரி எண்ணெய்

அரபு நாடுகளில் இது பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ரோஸ்மேரி செடியில் இருந்து வடித்தல் முறையில் இது தயாரிக்கப்படுகிறது. அணுக்கள் பிரிவதை அதிகரித்து. இரத்த குழாய்களை விரிவடைய செய்யும் ரோஸ்மேரி எண்ணெய். இதனால் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். மேலும் இது முடி வளர்ச்சியை அதிகரித்து முடிக்கான டானிக்காகவும் செயல்படும். உங்கள் ஷாம்பு அல்லது கண்டிஷனருடன் கலந்தும் ரோஸ்மேரி எண்ணெய்யை பயன்படுத்தலாம். இல்லாவிட்டால், அதனை ஆலிவ் எண்ணெய் அல்லது டீ-ட்ரீ எண்ணெய் போன்ற பிற அதிமுக்கிய எண்ணெய்களுடன் கலந்தும் உங்கள் தலைச்சருமத்திற்கு மசாஜ் செய்யலாம்.

சேஜ் எண்ணெய்

பலவித உடல்நல பயன்களுக்காக சேஜ் எண்ணெய் பயன்படுத்தப்பட்டு வருகிறது. முடி உதிர்வு சிகிச்சைக்கு சேஜ் எண்ணெய்யை பயன்படுத்தலாம். முடி உதிர்வு மட்டுமின்றி பருக்கள், சுருக்கங்கள் மற்றும் செரிமான கோளாறுகளுக்கு சிகிச்சை அளிக்கவும் சேஜ் எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. இதனை ஆப்பிள் சீடர் வினிகர் அல்லது ரோஸ்மேரி எண்ணெய் போன்ற சில அதிமுக்கிய எண்ணெயுடன் கலந்தும் பயன்படுத்தலாம்.

லாவெண்டர் எண்ணெய்

லாவெண்டர் எண்ணெய்யை அழகு எண்ணெயாகவும் கூறலாம். முடி பயன்களுக்காக நன்கு அறியப்படும் எண்ணெய் அது. முடி அடர்த்தி குறைதல் மற்றும் கொத்து கொத்தாக முடி உதிர்தல் பிரச்சனையான ஆலோபீசியாவிற்கு சிகிச்சை அளிக்க லாவெண்டர் எண்ணெய் பரவலாக பயன்படுத்தபடுகிறது. முடி வளர்ச்சி போக, தூக்கமின்மை மற்றும் மன அழுத்தத்தையும் குறைக்கும். பல்வேறு ஸ்பா சிகிச்சைகளுக்கு இது பயன்படுத்தப்பட்டு வருகிறது.

பயன்படுத்தும் முறை:

லாவெண்டர் எண்ணெய், ரோஸ்மேரி எண்ணெய், தைம் எண்ணெய் மற்றும் ஜோஜோபா எண்ணெய்யை சரிசமமான அளவில் கலந்து, அதிமுக்கிய எண்ணெய் ஒன்றை தயார் செய்யுங்கள். இதனை உங்கள் தலைச்சருமத்தில் தடவுங்கள். பின் ஷவர் கேப்பை கொண்டு தலையை மூடுங்கள். ஒரு மணிநேரத்திற்கு அதை அப்படியே விட்டு விடுங்கள். பின் தலையை நன்றாக கழுவி அலசுங்கள்.

ஜோஜோபா எண்ணெய்

மாய்ஸ்சுரைசிங் மற்றும் ஈரப்பதத்தை ஏற்றும் குணங்களும் ஜோஜோபா எண்ணெயில் உள்ளது. இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதன் மூலமும், மயிர்ப்புடைப்பிற்கு ஈரப்பதத்தை அளிப்பதன் மூலமும், முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் ஜோஜோபா எண்ணெய். மேலும் வறண்ட மற்றும் பாதிப்படைந்த முடிகளை சீர் செய்யும்.

ஆளிவிதை எண்ணெய்

ஆளிவிதையில் அதிமுக்கிய கொழுப்பமிலங்கள் வளமையாக உள்ளது. இது வறண்ட, பாதிப்படைந்த மற்றும் உடையக்கூடிய முடிகளை ஆரோக்கியமானதாகவும், பளபளப்பானதாகவும் மாற்றும். இந்த எண்ணெயில் உள்ள ஒமேகா 3 கொழுப்பமிலங்கள் ஆரோக்கியமான முடி வளர்ச்சியை மேம்படுத்தும்.

பயன்படுத்தும் முறை:

உங்கள் தினசரி உணவுகளில் ஆளிவிதை எண்ணெயில் செய்யப்பட்ட உணவுகளை சேர்த்துக் கொள்ளுங்கள். இதனை பிற அதிமுக்கிய எண்ணெய்களுடன் சேர்த்தும் பயன்படுத்தலாம்.

ஆலிவ் எண்ணெய்

அழகின் மீது ஆர்வமுள்ள ஒவ்வொருவரும் ஆலிவ் எண்ணெயில் உள்ள ஆரோக்கியம் மற்றும் அழகு பயன்களைப் பற்றி நன்றாக அறிந்திருப்பார்கள். ஃபேஸ் பேக், ஃபேஸ் மாஸ்க், ஸ்க்ரப், உடல் எண்ணெய்கள், ஹேர் டானிக் போன்ற பலவற்றிலும் ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தப்பட்டுள்ளது. முடி உதிர்வை குணப்படுத்தவும், தடுக்கவும் ஆலிவ் எண்ணெய் உதவுகிறது. புதிய முடி வளர்வதற்கும் இது ஊக்குவிக்கும். இந்த எண்ணெய்யை தொடர்ந்து பயன்படுத்தினால் DTH ஹார்மோன் உருவாவது தடுக்கப்படும். இதனால் முடி வளர்ச்சி ஊக்குவிக்கப்படும். ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் வளமையாக உள்ளதால், ஒட்டு மொத்த முடியின் ஆரோக்கியத்திற்கும் இது பயனுள்ளதாக விளங்கும். கூந்தலை மென்மையாகவும், வழுவழுப்பாகவும் மாற்றுவதன் மூலம் இயற்கையான கண்டிஷனராகவும் ஆலிவ் எண்ணெய் செயல்படுகிறது.

பயன்படுத்தும் முறை:

உங்கள் தினசரி உணவில் ஆலிவ் எண்ணெய்யை சேர்த்துக் கொள்ளுங்கள். இதனை ப்ரீ-ஷாம்பு சிகிச்சையாக பயன்படுத்துங்கள்.

சூடான எண்ணெய் சிகிச்சைக்கு, இதனை லாவெண்டர் எண்ணெய், கற்பூரவள்ளி எண்ணெய் மற்றும் ரோஸ்மேரி எண்ணெயுடன் கலந்தும் பயன்படுத்தலாம்.

விளக்கெண்ணெய்

உங்கள் முடிகளை வேகமாக, திடமாக மற்றும் பளபளப்புடன் வளரச் செய்ய மிகவும் பயனுள்ள எண்ணெய்களில் ஒன்றாக விளங்குகிறது விளக்கெண்ணெய். முடி வளர்ச்சிக்கு இது சிறந்த இயற்கை சிகிச்சையாக கருதப்படுகிறது. முடி வளர்ச்சியை ஊக்குவிக்க இது உதவும். அதே போல் வழுக்கை விழுவதும் குறையும்.

பயன்படுத்தும் முறை:

விளக்கெண்ணெய்யை சூடாக்கி, அதனை கொண்டு சூடான எண்ணெய் மசாஜ் சிகிச்சை செய்யுங்கள். சுத்தமான தலைச்சருமத்தில் இதனை தடவுங்கள். 20 நிமிடங்களுக்கு அப்படியே விட்டு விடுங்கள். நன்றாக மசாஜ் செய்யுங்கள். வெப்பமான ஈர துண்டால் தலையைச் சுற்றிக் கொள்ளுங்கள். அதனை அப்படியே 20 நிமிடங்களுக்கு வைத்திடுங்கள். இந்த எண்ணெய் பிசுபிசுப்புடன் இருப்பதால், அதனுடன் சற்று எலுமிச்சை சாற்றை கலந்து கொள்ளலாம். இதனால் அது சற்று வழுவழுப்பாக இருக்கும். மேலும் தலையில் உள்ள பொடுகு தொல்லையையும் போக்கும்.

முடி வளர்ச்சிக்கான உணவுகள்!!!

முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும். முடி உதிர்வை தடுக்கவும் உங்கள் உணவு பழக்கத்தில் சில மாற்றங்களை கொண்டு வர வேண்டும். ஜிங்க் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள், கார்போனேட்டட் பானங்கள், சிகரெட் மற்றும் மதுபானம் ஆகியவைகளை முழுமையாக நிறுத்தினால், உங்கள் உடலுக்கும் தலைச்சருமத்தின் ஆரோக்கியத்திற்கும் மிகுந்த பயனை அளிக்கும். வைட்டமின் மற்றும் கனிமங்கள் நிறைந்துள்ள பழங்கள் மற்றும் காய்கறிகள், முழு தானியங்கள், கார்போஹைட்ரேட்ஸ், ஒமேகா-3 கொழுப்பமிலங்கள் மற்றும் புரதம் அடங்கிய உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். முடி வளர்ச்சிக்கு நன்மையை அளிக்கும் ஃபைட்டோ ஊட்டச்சத்துக்கள் இவைகளில் வளமையாக உள்ளது. சிறந்த முடியைப் பெற கீழ்கூறியவைகளை உங்கள் உணவில் தினமும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

புரதம் நிறைந்த உணவுகள்

கரோட்டீன் என்ற விசேஷ புரதத்தை நம் முடி கொண்டுள்ளது. அதனால் வளமையான புரதத்தை கொண்ட உணவை நாம் உண்ண வேண்டும். முட்டைகள், கோழிக்கறி, டோஃபு, சோயாபீன்ஸ், கிட்னி பீன்ஸ் மற்றும் இதர உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். முடிக்கு தேவையான புரதத்தை வளமையான அளவில் இது கொண்டுள்ளது. புதிய முடி வளர்ச்சியை மேம்படுத்தி பளபளப்பான மற்றும் மென்மையான முடியை அளிக்கும்.

வைட்டமின் ஏ

முடி வளர்ச்சிக்கு வைட்டமின் ஏ மிகுந்த பயனை அளிக்கும். ஆனாலும் அதனை அதிகமாக பயன்படுத்தினால் முடி உதிர்வு ஏற்படும். மாம்பழம், பப்பாளி, ஆரஞ்சு, உலர்த்தியப் பழம், கேரட் போன்ற சில பழங்களின் வைட்டமின் ஏ அதிகமாக உள்ளது.

வைட்டமின் பி

ஆக்சிஜனை உடலின் அனைத்து இடங்களும் அழைத்துச் செல்லும் ஹீமோகுளோபின் உற்பத்தியை வைட்டமின் பி ஊக்குவிக்கும். இது தலைச்சருமத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். உருளைக்கிழங்கு, வாழைப்பழம், கோழிக்கறி, ஓட்ஸ், மீன் மற்றும் பீன்சை உங்கள் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

வைட்டமின் சி

கொலாஜென் உற்பத்திக்கும் சருமத்தில் உள்ள இயக்க உறுப்புகளை எதிர்த்து போராடவும் வைட்டமின் சி உதவுகிறது. நெல்லிக்காய், ஆரஞ்சு, கிவி, கொய்யாப்பழம் போன்ற சிட்ரஸ் பழங்களை உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள மறந்து விடாதீர்கள்.

வைட்டமின் ஈ

உங்கள் உணவில் வைட்டமின் ஈ-யை சேர்த்துக் கொள்வதால், தலைச்சரும இரத்த நாள செயல்பாடு ஊக்குவிக்கப்படும். இதனால் இரத்த ஓட்டம் மேம்பட்டு முடி வளர்ச்சி மேம்படும். வைட்டமின் ஈ அடங்கிய தானியங்கள், சூரியகாந்தி எண்ணெய், சோயாபீன்ஸ் எண்ணெய், டோஃபு போன்ற உணவுகளை உட்கொள்ளவும். இதனை முடிந்த அளவிற்கு உட்கொள்வது மிகுந்த நல்லதாகும்.

பச்சை காய்கறிகள்

கரும்பச்சை காய்கறிகளை அதிகமாக உண்ணுங்கள். இதில் இரும்புச்சத்து உள்ளதால், முடி வளர்ச்சிக்கு இது கண்டிப்பாக தேவைப்படும். அதே போல் மீனிலும், நட்ஸிலும் ஒமேகா-3 கொழுப்பமிலங்கள் வளமையாக உள்ளது.

இயற்கை தீர்வுகள்

போதிய பராமரிப்பும், சிகிச்சையும் எந்த ஒரு தலைச்சரும மற்றும் முடி பிரச்சனையையும் அண்ட விடாமல் செய்யும். கண்மூடித்தனமான முடி உதிர்வை எதிர்த்து போராடும் சக்தி உங்களுக்கு இருந்தால் மட்டுமே அனைத்து விதமான இயற்கை தீர்வுகளும் அதன் தாக்கத்தை வெளிப்படுத்தும்.

சிகை அலங்கார பொருட்களுக்கு தடை போடுங்கள்

“எந்த ஸ்டைலும் சிறந்த ஸ்டைல் கிடையாது” என்ற புகழ்மிக்க பழமொழி ஒன்றே உள்ளது. பல்வேறு சிகையலங்கார பொருட்களில் தீமையான ரசாயனங்களும் மேம்போக்கான ஏஜென்ட்களும் அடங்கியிருக்கும். இது சில நேரம் மிக ஆபத்தாய் போய் முடியும். அவ்வகை சிகையலங்கார பொருட்களைப் பயன்படுத்திய சில நாட்களுக்கு நீங்கள் அழகாக தெரிவீர்கள். ஆனால் நாளடைவில் உங்கள் கூந்தல் மற்றும் தலைச்சருமத்தின் நிலையை அது எவ்வாறு பாதிக்கும் என்பது உங்களுக்கு தெரியாது. அதனால் முடியின் நிறங்கள், சீரம் மற்றும் ஸ்ட்ரெயிட்னர் போன்ற சில தீமையான ஸ்டைல் பொருட்கள் பயன்படுத்துவதை குறைத்துக் கொள்ளுங்கள்.

சீரான முறையில் தலை முடியை சீவி, அளவை குறைத்து கொள்ளுதல்

உங்கள் தலை முடியை ஒரு நாளைக்கு மூன்று முறையாவது சீவுங்கள். மூன்று மாதத்திற்கு ஒரு முறையாவது முடியை ட்ரிம் செய்து கொள்ளுங்கள். சீரான முறையில் தலை முடியை சீவி கொள்வதும், அதனை ட்ரிம் செய்து கொள்வதும் புதிய முடியின் வளர்ச்சிக்கு முக்கியமாகும். தலை முடியை சீவுவதால் நல்ல இரத்த ஓட்டம் கிடைக்கும். மயிர்ப்புடைப்பையும் இது ஊக்குவிக்கும். இதனால் புதிய முடி இயற்கையாகவே வளரும்.

இந்த சிறந்த இந்திய வீட்டு சிகிச்சைகளைப் பின்பற்றி ஆரோக்கியமான முடி வளர்ச்சியைப் பெற்றிடுங்கள். உங்கள் ரகசியமான வீட்டு சிகிச்சைகளை எங்களுடன் பகிர்ந்திடுங்கள்.

Related posts

பெண்கள் வழுக்கை விழுவதைத் தடுக்க இயற்கை வழிகள்

nathan

கொத்து கொத்தா முடி கொட்டுதா? இப்படி ஒரு வைத்தியம் செஞ்சு பாருங்க!!

nathan

நீளமா கூந்தல் வளரனுமா? அப்போ நீங்க கட்டாயம் இதெல்லாம் செஞ்சே ஆகனும்!!

nathan

முடியின் வறண்ட தன்மை, பொடுகுத் தொல்லை மற்றும் முடி உதிர்தல் சிகிச்சைதான் ‘ஹேர் ஸ்பா’

nathan

தெரிஞ்சிக்கங்க…தினமும் தலைக்கு குளித்தால் என்ன நடக்கும் தெரியுமா?

nathan

நீங்கள் Hair style செய்து கொள்வதற்கு முன் இதைப் படியுங்கள்..

nathan

இளநரை ஏற்படுவதற்கான அடிப்படை காரணங்கள்

nathan

இயற்கை முறையில் நரையை மறைக்கலாம்..

nathan

தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க உதவும் 6 எளிய வழிகள்!

nathan