28.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
curd11
ஆரோக்கிய உணவு

உங்க உணவில் தயிர் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!! தெரிஞ்சிக்கங்க…

தயிர் என்பது ஆரோக்கியமான ஒன்றாகும். அனைத்து நாடுகளிலும் அனைத்து வித மக்களாலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது தயிர். இந்தியாவின் சில பகுதிகளில் அன்றாட உணவுகளில் கண்டிப்பாக தயிர் இருக்கும். தயிரில் பல வித உடல்நல பயன்கள் அடங்கியுள்ளது. நம்முடைய தினசரி வாழ்க்கையில் தயிரை ஏதாவது ஒரு வகையில் பயன்படுத்துவது மிகவும் நல்லதாகும்.

லாக்டோஸ் சகிப்புத் தன்மையின்மையால் அவதிப்படுபவர்களும் எந்த ஒரு கவலையும் இன்றி தயிரை உட்கொள்ளலாம். இதனால் எந்த ஒரு பக்க விளைவுகளும் ஏற்படாது. தயிரில் உடல்நல பயன்கள் பல அடங்கியுள்ளதால், இதனை பல விதமான வீட்டு சிகிச்சைகளுக்கு பயன்படுத்தலாம். பசுவின் பால் அல்லது எருமையின் பாலை பயன்படுத்தலாம். ஆனால் ஆரோக்கியமான உடலை பராமரித்திட சீரான முறையில் தயிரை உட்கொள்ளுங்கள். சொல்லப்போனால், கொதிக்க வைத்தாலும் கூட அதன் ஊட்டச்சத்துக்களை தயிர் இழக்காது. தாங்கள் சமைக்கும் பல விதமான உணவுகளுக்கும் தயிரை பயன்படுத்தி வருகின்றனர் பெண்கள். சரி, தயிரினால் கிடைக்கும் உடல்நல பயன்களைப் பற்றி இப்போது தெரிந்து கொள்வோமா?

செரிமான அமைப்பிற்கு நல்லது

முதலில், தயிர் வேகமாக செரிமானமாகிவிடும். இரண்டாவதாக, உணவை வேகமாக உறிஞ்ச உங்கள் உடலுக்கு உதவும். சொல்லப்போனால், காரசாரமான உணவை சாப்பிட்டால், அதனுடன் சேர்த்து தயிரையும் உண்ணுவது நல்லது. காரமான பிரியாணியை உண்ணும் போது தயிரை தவறவிடாதீர்கள்.

இதயத்திற்கு நல்லது

ஆரோக்கியமான இதயத்தை பேணிட தயிர் உதவிடும். கொலஸ்ட்ரால் அளவுகளை கட்டுப்பாட்டில் வைக்க இது உதவிடும். தயிரை சீரான முறையில் உட்கொண்டு வந்தால், ஆரோக்கியமான இதயத்தை பராமரித்திடலாம். தயிரின் ஊட்டச்சத்து பயன்களில் இதுவும் ஒன்றாகும்.

நோய் எதிர்ப்பு அமைப்பிற்கு நல்லது

நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதில் தயிர் முக்கிய பங்கு வகிக்கிறது. ஈஸ்ட் தொற்றுக்களால் பாதிக்கப்பட்டுள்ள பெண்கள் இதனை உட்கொண்டால் அதிலிருந்து விடுபடலாம்.

வளமையான கால்சியத்தைக் கொண்டிருக்கும்

தயிரில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் இருப்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. அதனால் அது உங்கள் பற்களுக்கும், எலும்புகளுக்கும் நல்லதாகும். எலும்புத்துளை நோய் போன்ற சில பிரச்சனைகளை தவிர்க்க வேண்டுமானால், சீரான முறையில் தயிரை உட்கொள்வது நல்லது.

வெளிப்புற பயன்பாட்டிற்கு நல்லது

தயிரை சருமத்தின் மீது பயன்படுத்தினால், உங்கள் சருமம் மின்னிடும். எலுமிச்சையுடன் தயிரை கலந்து உங்கள் முகத்தின் மீது பூசினால், பளிச்சிடும் பலனை பெறலாம். ஒரு மாத காலத்திற்கு இதனை வாரம் இருமுறை பயன்படுத்தி, பலனை பாருங்கள்.

பொடுகை நீக்கும்

பொடுகை நீக்க தயிர் சிறந்த தீர்வாக விளங்கும் என்பது நம்மில் பலருக்கும் தெரியாது. உங்கள் தலைச்சருமத்தின் மீது கொஞ்சம் தயிரை தடவினால் போதும், பொடுகு தொல்லை நீங்கும். பூஞ்சை எதிர்ப்பியாக தயிர் செயல்படுவதால், பொடுகை நீக்க இது உதவிடும். இந்த சிகிச்சையை முயற்சி செய்து பாருங்கள்.

உடல் எடை குறைப்பு

ஹார்மோன் சமநிலையின்மையின் விளைவால் உடல் பருமன் ஏற்படும். கார்டிசோ அளவுகளை கட்டுப்படுத்தி, உடல் எடையை குறைக்க தயிர் உதவிடும். ஆனால் மற்றவர்களோ தினசரி கலோரி உட்கொள்ளும் அளவை பொறுத்து தான் தயிரை உட்கொள்ள வேண்டும்.

மன அழுத்தத்தை போக்கும்

மன அழுத்தம் உடல் நலத்தை பாதிக்கும். மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை குறைக்க தயிர் உதவும். தயிரினால் கிடைக்கும் பயன்களில் இதுவும் ஒன்று. தயிர் உங்களை சாந்தப்படுத்தும். உங்களுக்குள் குளிர்ச்சியான உணர்வை உண்டாக்கும்.

மூல நோயால் அவதிப்படுபவர்களுக்கு…

மூல நோயால் அவதிப்படுபவர்கள் தயிரை பயன்படுத்தலாம் என ஆராய்ச்சிகள் பரிந்துரைக்கிறது. தயிர் சாதத்துடன் இஞ்சியை சேர்த்து சாப்பிட்டால் உங்களுக்கு நல்ல பயனை அளிக்கும்.

வாய் பிரச்சனைகளுக்கு…

பாக்டீரியாவால் ஏற்படும் சில வாய் பிரச்சனைகளை தடுக்க தயிர் உதவிடும். தயிரினால் கிடைக்கும் உடல்நல பயன்களில் இதுவும் ஒன்றாகும்.

பசியை அதிகரிக்க…

உப்பு/சர்க்கரையுடன் தயிரை சாப்பிட்டால், பசியை அதிகரிக்க அது மிகவும் நல்லதாகும். தயிரினால் கிடைக்கும் உடல்நல பயன்களில் இதுவும் ஒன்றாகும்.

Related posts

கால்சியம் சத்து குறைபாடா? நீங்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்!

nathan

ஹெல்த் ஸ்பெஷல்! உடல் எடையை குறைக்க உதவும் கொண்டைக்கடலை சாலட்

nathan

அன்னாசி பழத்தில் இவ்வளவு மருத்துவ பயன்கள் இருக்கா?அப்படி என்ன ஸ்பெஷல்?

nathan

சூப்பர் டிப்ஸ்! தினமும் 3 பேரீச்சம் பழத்தை உட்கொண்டு வந்தால் கிடைக்கும் பலன்கள்….!!

nathan

தெரிஞ்சிக்கங்க…சிறுநீரக பிரச்சனைகளை தீர்க்கும் வாழைத்தண்டு சாலட்

nathan

கீரை, பருப்பு கிச்சடி எப்படி செய்வது?….

sangika

ஆப்பிளுக்கு ஈடான சத்து கொய்யாவில்..

nathan

அருமையான முட்டை வறுவல்

nathan

உடல் ஆரோக்கியமாக இருக்க அத்திப்பழத்தை இவ்வாறு செய்து சாப்பிடலாமாம்!…

sangika