31.1 C
Chennai
Wednesday, Jun 26, 2024
u9i0o
ஆரோக்கியம்

உயரத்தை அதிகரிக்க பல உணவுகள், உடற்பயிற்சிகள் இத ஃபாலோ பண்ணுங்க!!!

பெரும்பாலும் உயரக் குறைபாடு ஏற்படுவதற்கு ஜீன்கள் ஒரு காரணமாக இருக்கும். ஒருவேளை ஜீன்களில் வளர்ச்சியை அடையக்கூடிய வாய்ப்பு உள்ளது என்று இருந்தால், நிச்சயம் உயரமாகலாம்.

இல்லாவிட்டால், முடியாது. மேலும் உயரத்தை அதிகரிக்க பல உணவுகள், உடற்பயிற்சிகள் உதவியாக உள்ளன. அதிலும் 21 வயதிற்குட்டவர்கள், இத்தகைய உணவுகள் மற்றும் உடற்பயிற்சிகளை மேற்கொண்டால், நிச்சயம் எளிதில் உயரமாகலாம்.

ஏனெனில் 21 வயதிற்கு மேல், உடலின் வளர்ச்சியானது நின்றுவிடும். ஆனால் ஒருவேளை அதிர்ஷ்டம் இருந்தால், சரியான உணவுகள் மற்றும் உடற்பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் வளர்ச்சியை காணலாம். சரி, இப்போது இயற்கை முறையில் உயரத்தை அதிகரிக்க என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று பார்ப்போம்.

ஸ்கிப்பிங்
ஸ்கிப்பிங் உயரத்தை அதிகரிக்க வேண்மெனில், தினமும் ஸ்கிப்பிங் செய்ய வேண்டும். இதனால் உடலில் இரத்த ஓட்டம் அதிகரித்து, தசைகளில் வளர்ச்சியை அதிகரிக்க உதவும்.

ipokl
பால்
பால் பாலில் உள்ள கால்சியம், வைட்டமின் டி மற்றும புரோட்டீன் ஆகிய மூன்று சத்துக்களும், உடலின் வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாதவை. எனவே பாலை தினமும் தவறாமல் 2-3 டம்ளர் குடித்து வர வேண்டும்.

தொங்குதல்
தொங்குதல் கம்பியை பிடித்துக் கொண்டு தொங்குவதன் மூலம் உயரத்தை அதிகரிக்கலாம். அதிலும் இதனை இளம் வயதில் அதிகம் செய்து வந்தால், தண்டுவடமானது நன்கு வளர்ச்சியடையும். இது உயரமாவதற்கு உதவியாக இருக்கும்.
uiop

முட்டை
முட்டை முட்டையிலும் பாலில் நிறைந்துள்ள சத்துக்களான கால்சியம், புரோட்டீன் மற்றும் வைட்டமின் டி போன்ற சத்துக்களுடன், ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்டும் நிறைந்துள்ளது. எனவே உயரமாக வளர ஆசைப்பட்டால், தினமும் பாலுடன், வேக வைத்த முட்டையையும் சாப்பிட வேண்டும். இதனால் நல்ல பலன் கிடைக்கும்.
uiokpl
புஜங்காசனம்
புஜங்காசனம் தினமும் புஜங்காசனத்தை செய்து வருவதன் மூலமும், உயரமாகலாம். அதற்கு தடையில் குப்புற படுத்து, இரண்டு கைகளையும் தரையில் மார்ப்புக்கு பக்கவாட்டில் பதித்து, முதுகை மேலே தூக்க வேண்டும். இதனால், உடலின் மேல் பகுதியில் உள்ள தசைகளானது மேல் நோக்கி நீண்டு, உயரமாவதற்கு உதவி புரியும்.

இறைச்சி
இறைச்சி இறைச்சிகளான சிக்கன், மாட்டிறைச்சி போன்றவற்றை சாப்பிடுவதன் மூலம், தசைகள் வளர்ச்சியடையும். ஏனெனில் இதில் தசைகளின் வளர்ச்சிக்கு தேவையான புரோட்டீனானது அதிக அளவில் நிறைந்துள்ளது.

நேராக எழுதல்
நேராக எழுதல் படத்தில் காட்டியவாறு, நேராக நின்று கொண்டு, இரண்டு குதிகால்களை மேலே தூக்கி (பாதவிரல்களால் நின்று), இரண்டு கைகளையும் தலைக்கு மேலே தூக்கி, முடிந்த அளவில் கைகளை நீட்ட வேண்டும். இதன் மூலம் உடலில் உள்ள அனைத்து தசைகளும் நீண்டு, உயரமாக உதவியாக இருக்கும்.
u9i0o

சோயா பொருட்கள்
சோயா பொருட்கள் சைவ உணவாளர்களுக்கு, ஒரு சிறந்த புரோட்டீன் உணவு என்றால் அது சோயா பொருட்கள் தான். எனவே சோயா பால், டோஃபு போன்றவற்றை அதிகம் சாப்பிடுவதன் மூலம், உடலுக்கு வேண்டிய புரோட்டீன் கிடைத்து, தசைகளும் வளர்ச்சியடையும்.

காலை உதைத்தல்
காலை உதைத்தல் கராத்தே பயிற்சியில் செய்யப்படும் ஒரு முறை தான் காலை உதைத்தல். இதற்கு படத்தில் காட்டியவாறு நின்று, ஒரு காலை மட்டும் மேல் நோக்கி உதைக்க வேண்டும். இது போன்று மற்றொரு காலையும் செய்ய வேண்டும். இந்த முறையை தினமும் குறைந்தது 10 முறை செய்து வந்தால், கால்கள் வளர்ச்சியடைய உதவும்.

கோரல் கால்சியம்
கோரல் கால்சியம் கடல் பவளப் பாசிகளில் இருந்து செய்யப்படுவது தான் கோரல் கால்சியம். அந்த கால்சியத்தை சாப்பிடுவதன் மூலம், எலும்புகள் வலுவுடன் இருப்பதோடு, நன்கு வளர்ச்சியடையும்.

Related posts

இது பெண்மைக்கு மட்டுமல்ல ஆண்மைக்கும் ஆபத்து!…

sangika

ஏன் உடல் குண்டாகிறது? உடல் எடை கூடுவதற்கான காரணங்கள் | Reason For Weight Gain

nathan

பெண்கள் உடற்பயிற்சி செய்தால் அவர்கள் மார்பகம் எடுப்பாக அமையும். இடை குறுகலாகவும், உடலில் பொலிவூட்டும் நிறம் அமையும்

nathan

வெள்ளை சாதம் சாப்பிடுவதை தவிர்த்தால் கிடைக்கும் நன்மைகள்!!!

nathan

மாதவிடாய் சுகாதாரம் குறித்து ஒவ்வொரு பெண்களும் பூப்படையும் காலம் முதலே அறிந்து வைத்திருப்பது அவசியம்.

nathan

சின்னம்மை தாக்கினால் ஏற்படுத்தும் வடுவை குணமாக சில எளிய வீட்டு வைத்தியங்கள்!

nathan

இரவில் தூங்காவிட்டால் ஏற்டும் பிரச்சனைகள்

nathan

வெண்டைக்காய் சாப்பிட்டால் நல்லா கணக்கு போடலாம்!

nathan

மஞ்சள் கரை படிந்த அசிங்கமான பற்களா? உடனடி வெண்மைக்கு இந்த ஒரு பொருள் போதும்!

nathan