30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
மருத்துவ குறிப்பு

உடலுக்கு பலம் தரும் சர்க்கரைவள்ளி

தோல் நோய்களுக்கு மருந்தாவதும், கண்களுக்கு நல்ல பார்வையை கொடுக்க கூடியதுமான மரவள்ளி கிழங்கு, உடலுக்கு பலம் தரக்கூடியதும், தொழுநோய் புண்களை ஆற்றக்கூடியதுமான சர்க்கரை வள்ளி கிழங்கின் பயன்களை அறிவோம்.

மரவள்ளி கிழங்கிற்கு ஏழிலை கிழங்கு என்ற பெயர் உள்ளது. ஏழு இதழ்களை பெற்று இருப்பதால் அந்த பெயரை பெற்றுள்ளது. மரவள்ளி கிழங்கு ஏழைகளின் உணவு. சரிவிகித உணவான இதில், வைட்டமின் ஏ சத்து மிகுந்து காணப்படுகிறது. மரவள்ளி கிழங்கு கண்களுக்கு தெளிவான பார்வையை தரும் தன்மை கொண்டது. எலும்புகளுக்கு பலம் கொடுக்க கூடியது. உடலுக்கு ஊட்டசத்தாகிறது.

மரவள்ளி கிழங்கின் இலை விஷக்கடிக்கு மேல்பூச்சு மருந்தாகிறது. இலையை பசையாக அரைத்து எடுத்துக்கொள்ளவும். அதை தேள், பூச்சி கடிவாயில் வைத்து கட்டுவதால் விஷம் முறியும். வலி, வீக்கம் குறையும். மரவள்ளி கிழங்கை பயன்படுத்தி தோலில் ஏற்படும் அரிப்பு, தடிப்புக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். மரவள்ளி கிழங்கை வேக வைத்து மசித்து எடுத்துக் கொள்ளவும்.

அதில் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து கஞ்சி போன்று தயாரிக்க வேண்டும். கஞ்சியை ஆற வைத்து அரிப்பு இருக்கும் இடத்தில் பூச வேண்டும். சிறிது நேரம் கழித்து அதை துடைத்து விடலாம். இவ்வாறு செய்தால் அரிப்பு, தடிப்பு சரியாகும். மரவள்ளி கிழங்கு புரதச்சத்தை மிகுதியாக கொண்டுள்ளது. மாவுச்சத்தை அதிகம் பெற்றுள்ளது. இதில் வைட்டமின் ஏ,பி உள்ளது. கண்களுக்கு மருந்தாகிறது. எலும்புக்கு பலத்தை தருகிறது. உடல் எடையை கூட்டும் தன்மை கொண்டது. ரத்த அழுத்தத்தை குறைக்கும். சிறுநீரை பெருக்கும். பல்வேறு நோய்களுக்கு மருந்தாகிறது.

சர்க்கரை வள்ளி கிழங்கு சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும். சர்க்கரை வள்ளி கிழங்கு இலைகளை பயன்படுத்தி தொழுநோயை குணப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம். 5 இலைகளுடன் அரை ஸ்பூன் சீரகப்பொடி சேர்த்து தண்ணீர் விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிக்கட்டி குடிக்கலாம். இதன் இலையை பற்றாக போட்டால் புண்கள் ஆறும். சர்க்கரை வள்ளி கிழங்கில் இருந்து குளுக்கோஸ் தயாரிக்கப்படுகிறது. இது நல்ல உணவாகிறது. இலைகள், கிழங்குகள் தோல்நோய்க்கு மருந்தாகிறது. தொழுநோய் புண்களை ஆற்றக்கூடியது.

சர்க்கரை வள்ளி கிழங்கை பயன்படுத்தி உடல் எடையை அதிகரிக்கும் உணவு தயாரிக்கலாம். வேகவைத்த கிழங்கு, தேங்காய் துருவல், வெல்லம், ஏலக்காய், நெய் எடுத்துக்கொள்ளவும்.சர்க்கரை வள்ளி கிழங்குடன், சிறிது ஏலக்காய் பொடி, வெல்லம் சேர்த்து கலக்கவும். ஒரு பாத்திரத்தில் நெய் எடுத்து கொண்டு அதை உருக்கவும். அதனுடன் தேங்காய் துருவலை சேர்த்து வதக்கவும். இதனுடன் சர்க்கரை வள்ளி கிழங்கு கலவையை சேர்த்து கலக்கவும். இதை சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும். போலி, கொலுக்கட்டை போன்றவற்றுக்கு பூரணமாகவும் பயன்படுத்தலாம்.. வேக வைத்த சர்க்கரை வள்ளி கிழங்கின் இனிப்பு சுவை குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இந்த கிழங்கு உடலுக்கு பலம் தரக் கூடியது.

Related posts

மருத்துவர் கூறும் தகவல்கள்! ஆவி பிடிக்கும் போது இந்த தவறை செய்யாதீங்க…

nathan

இதயத்தை பாதுகாக்க சிறந்த உணவு முறை எது தெரியுமா? தெரிஞ்சிக்கங்க…

nathan

கருக்கலைப்பிற்கு பிந்தைய மாதவிடாய் காலம் குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்!

nathan

பெண்களே! உங்க அந்தரங்க பகுதியை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க சூப்பர் டிப்ஸ்

nathan

கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள்

nathan

நிம்மதியாக உறங்குவது எப்படி?

nathan

சிறுநீரக பாதிப்புடையோர் சாப்பிடக் கூடியவை

nathan

கட்டியோ கழலையோ காணப்பட்டால் கவனம்!

nathan

பிரிந்த காதலர்கள் மீண்டும் ஒன்றுசேரும் போது ஏற்படும் மாற்றங்கள்

nathan