27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
white discharge 705
மருத்துவ குறிப்பு

பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல்:

இன்று அநேகமான பெண்கள் 12வயதுமுதல் 50வரை இந்த வெள்ளைபடுதலால் பாதிக்கப்படுகிறார்கள்.
அவர்களுக்காக இந்த பதிவு.
பெண்ணுறுப்பில் பொதுவாக இருக்கும் ‘கான்டிடா அல்பிகான்ஸ்’ (Candida Albicans) எனும் காளானின் (Yeast) அதிக வளர்ச்சியால் விளையும் பொதுவான பெண்ணுறுப்பின் தொற்று பாதிப்பு தான்.

இது எதனால் ஏற்படுகிறது?
குறைந்த நோய் எதிர்ப்பு, சக்தி பலவீனமான உடல் ஆரோக்கியம்.
இந்த காளான் வகை தொற்றுக்கிருமிகள் சளி, காய்ச்சல் முதலியவற்றுக்காக சாப்பிடும் மாத்திரைகளாலும் அதிகமாக வளர்ச்சி அரிப்புடன் கூடிய வெள்ளைபடுதல் உண்டாகிறது.
கர்ப்பம் அல்லது கருத்தடை மாத்திரைகளால் ஹார்மோன் அளவுகள் மாறி இந்த காளான்கள் வளர சரியான சூழ்நிலை உண்டாகிறது.

நீரிழிவு வியாதி, உடல் பருமன்.
இந்த காளான்கள் சாதாரணமாக குடலிலும், தோலிலும் இருக்கும். இங்கிருந்து இவை யோனிக்கு பரவும்.

இறுக்கமான, ஈரத்தை உறிஞ்சாத உள் ஆடைகள் காளானின் வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
சுகாதார குறைவு, வயிற்றில் பூச்சிகள்.

இந்த நோயின் அறிகுறிகள்.

பெண்ணுறுப்பில் அரிப்பு, எரிச்சல்.
யோனிலிருந்து அடர்த்தியான, தயிர்போன்ற வெள்ளை திரவ வெளியீடு.
புண்படுவது – தேய்ப்பதினாலும், சொரிவதனாலும் அதிகரிக்கும்.
எரிச்சல்/ சிறுநீர் கழிக்கும் போது எரியும் உணர்வு.
உடலுறவின் போது வலி.

சிகிச்சை முறைகள்.

#1. தனக்குதவி
நீண்ட விரல் நகங்களால் சொரியவோ அல்லது தேய்க்கவோ செய்யாதீர்கள்.
மிகச் சூடான நீரினால் கழுவ வேண்டாம்.
குளிக்கும் டவலால் கடுமையாக துடைத்து கொள்ளாதீர்கள்.
உடலுறவை சிகிச்சை பெறும் போது தவிர்க்கவும்.

#2. ஆயுர்வேத மருந்துகள்… அசோகரிஷ்டம், திராக்ஷதி சூரணம், அசோக்ருதம், அசோகாதிவடி, பிரதராந்தக ரஸ போன்றவை.

#3. இதர குறிப்புகள் உணவு முறைகள்.
வெள்ளைப்படுதல், நோய் மற்றும் கொழுப்பு சத்து உணவுகள் சர்க்கரை இவைகளால் உண்டாகிறது. அதுவும் உங்கள் உடல் பருமனாக இருந்தால் இந்த உணவு வகைகளை தவிர்க்கவும். நிறைய பழங்கள், காய்கறிகள், தானியங்கள், சத்துள்ள பயறு வகைகள் சாப்பிடவும். தினமும் 6 லிருந்து 8 கிளாஸ் தண்ணீர் குடிக்கவும். அரிப்புடன் கூடிய வெள்ளைபடுதல் நோய்க்கு வாசனை அதிகமுள்ள சோப்புக்கள், குளிப்பதற்காக உபயோகிக்காதீர்கள்.

மன உளைச்சலை குறைக்கவும்.
உடற்பயிற்சி உதவும்.
இந்த வியாதி உடலுறவினால் பரவும் நோயல்ல. இருந்தாலும் உடலுறவை தவிர்க்க முடியாவிட்டால் கணவரிடம் தெரிவிக்கவும் உடலுறவினால் அதிகரிக்கவும், கணவருக்கும் தொற்று பாதிப்பு வரலாம். உடலுறவை தவிர்ப்பது நல்லது.

வீட்டு மருத்துவம்.
சிறிது கடுக்காய் நெல்லிக்காய் தாண்றிக்காயை சம அளவு எடுத்துப் பொடி செய்து ( திரிபலா சூரணம்) அதனை 2 லிட்டர் தண்ணீரில் காய்ச்சி வைத்துக் கொண்டு மிதமான சூட்டில் பெண் உறுப்பை கழுவி வந்தால் வெள்ளைபடுதல் மறையும்.
மிகவும் குளிர்ந்த நீரில் 2 முறை தினசரி கழுவி வர வெள்ளைபடுதல் குறையும்.
சிறிது வெந்தயத்தை எடுத்து தூளாக்கி டீ போடுவது போல கஷாயமாகப் போட்டு காலை வெறும் வயிற்றில் தினசரி பருகி வர வெள்ளைபடுதல் மறையும்.
லோத்ரா பட்டையை நீரிலிட்டுக் காய்ச்சி வடித்து வைத்துக் கொண்டு அந்த நீரால் காலை மாலை என இரு வேளை உறுப்பைக் கழுவி வர வெள்ளைபடுதல் கட்டுப்படும்.

ஆயுர்வேத மருத்துவம்.
வெள்ளைபடுதலுக்கு ஆயுர்வேத மருத்துவ முறையில் அசோகப் பட்டை லோத்ரா பட்டை போன்றவை சிறந்த பயன் தரக் கூடியவை. இவை சேர்ந்த பல ஆயுர்வேத தயாரிப்புகள் உள்ளன. அவற்றை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் உபயோகித்து சிறந்த பலனைத் தரும். ஆயுர்வேத முறையில் மட்டுமே வெள்ளைபடுதலை நிரந்தரமாக போக்கிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மணத்தக்காளி சூப்.
சாதாரணமாக நமக்கு கிடைக்கும் மணத்தக்காளிக் கீரையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து அதனுடன் பூண்டுப்பல் நான்கு, சின்ன வெங்காயம் 4, மிளகு 5, சீரகம் 1 ஸ்பூன் மற்றும் சிறிது கறிவேப்பிலை, கொத்துமல்லி, போட்டு சூப் செய்து தினமும் குடித்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.

அருகம்புல்
கையளவு அருகம்புல்லை எடுத்து சிறு துண்டுகளாக நறுக்கி 4 கப் நீரில் கொதிக்க வைத்து நன்கு வற்றி 1 கப் ஆனவுடன் அதனுடன் மிளகுத்தூள் தேவைக்கேற்ப மற்றும் பனங்கற்கண்டு கலந்து காலை, மாலை இருவேளையும் 15 நாட்கள் சாப்பிட வெள்ளைப்படுதல் குணமாகும்.

உணவு முறை
அதிக காரம், புளிப்பு, உப்பு ஆகியவற்றை குறைக்க வேண்டும்.
உணவில் வெண்ணெய், பால், மோர் போன்றவற்றை சேர்த்து கொள்ளவேண்டும்.
தலைக்கு வாரம் இருமுறை (செவ்வாய், வெள்ளி) நல்லெண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்
உஷ்ணத்தை அதிகரிக்கும் உணவு பதார்த்தங்களை தவிர்க்க வேண்டும்.

வெள்ளைபடுதல் நிற்க
இளவறுப்பாய் வறுத்த வெந்தயப் பொடி (100 கி.) கறி மஞ்சள் பொடி (20 கி.). பனங்கற்கண்டு பொடி (120 கி.) இம்மூன்றையும் ஒன்றாகக் கலந்து அதிகாலை உணவுக்கு முன்னும், இரவு படுக்கும் முன்னும் 10-15 கிராம் அளவு பாலில் உண்டு வர சிறந்த பலன் கிடைக்கும்.
பெரு நெல்லிக்காய்ப் பொடி (100 கி.), பனங்கற்கண்டு (100 கி.). இரண்டையும் ஒன்றாகக் கலந்து வைக்கவும். பின்பு ஒரு டம்ளர் பசும் பாலில் நாட்டுக் கோழிமுட்டை வெண்கருவை விட்டு நன்கு கலக்கிக் கொண்டு அதில் மேற்கண்ட கலவைப் பொடியை 10 கிராம் முதல் 15 கிராம் வரை கலந்து காலை, மாலை தொடர்ந்த உட்கொண்டு வர வெள்ளைப்படுதல் உடன் நிற்கும்.

உணவே மருந்து.
அன்னாச்சி பழத்தை நன்கு தோல் சீவி சுத்தம் செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைபடுதல் குறையும்.
white%20discharge 705

Related posts

மருத்துவர் கூறும் தகவல்கள்! உணவுகளால் அலர்ஜி ஏற்பட்டிருப்பதை வெளிப்படுத்தும் சில அறிகுறிகள்!!!

nathan

ஆறாத புண்ணை குணப்படுத்தும் செவ்வரளி

nathan

ஆண்களுக்கு வரும் வலிகளும் அவை உணர்த்தும் நோயின் அறிகுறிகளும்

nathan

தைராய்டு புற்றுநோயின் அறிகுறிகள் தெரிந்து கொள்ளுங்கள்

nathan

பைல்ஸ் பிரச்சனைக்கு சித்த மருத்துவத்தில் தீர்வு tamil ayurvedic

nathan

அலட்சியம் வேண்டாம் உங்களுக்கு இந்த மாதிரி இருக்கா?

nathan

சர்க்கரை நோயால் வீக்கம் அடையும் கால்களுக்கான அற்புதமான எளிய தீர்வு

nathan

uterus cancer symptoms in tamil -கருப்பையில் புற்றுநோய்

nathan

நீரிழிவு நோயை கட்டுப்பாட்டுக்குள் வைக்கனுமா?

nathan