35.1 C
Chennai
Saturday, May 24, 2025
ggeggn
ஆரோக்கியம் குறிப்புகள்

உங்களுக்கு தெரியுமா சரும பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் மஞ்சள்

மஞ்சளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருப்பதால், சரும சுருக்கத்தைப் போக்கி இளமையான தோற்றத்தைக் கொடுக்கும். இதுப்போன்று சருமத்தில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளைத் தடுக்கும். எனவே இப்போது மஞ்சளை எப்படியெல்லாம் பயன்படுத்தினால், என்ன பிரச்சனை நீக்கும் என்பதை பார்க்கலாம்..

 

• முகத்தில் பருக்கள் அதிகம் இருந்தால், மஞ்சள் தூளுடன், சந்தனப் பொடியை சேர்த்து தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்த, பின் கழுவ வேண்டும்.

 

• மஞ்சள் தூளில் கடுகு எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் ஸ்கரப் செய்து சுத்தமான நீரில் கழுவ வேண்டும். இப்படி வாரம் மூன்று முறை செய்து வந்தால், பருக்கள் படிப்படியாக மறைவதை காணலாம்.

 

• மஞ்சள் தூளில், வெள்ளரிக்காய் சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால் முகத்தில் உள்ள கருமை நீங்கும்.

 

• சருமம் சுருக்கங்களுடன் காணப்பட்டால், மஞ்சள் தூளில் கரும்புச்சாறு சேர்த்து கலந்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி வந்தால் சரிசெய்யலாம். சென்சிடிவ் சருமம் உள்ளவர்கள். மஞ்சள் தூளில் மோர் சேர்த்து கலந்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

 

• குதிகால் வெடிப்பு உள்ளவர்கள் தினமும் காலையில் 3 டீஸ்பூன் மஞ்சள் தூளுடன், சில துளிகள் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, கழுவ வேண்டும். இதை ஒரு வாரம் தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் கிடைப்பதை காணலாம்.

Related posts

இரவில் தூங்காவிட்டால் ஏற்டும் பிரச்சனைகள்

nathan

குதிகால் வலியை போக்கும் பயிற்சி

nathan

உங்களுக்கு தெரியுமா ஸ்லிம்மான பெண்கள் மீது தான் அதிக ஈர்ப்பு?

nathan

மூலிகை பற்பசையின் நன்மைகள்

nathan

கல்லீரல் வீக்கம் குறைய வேப்பம் பட்டை கஷாயம்

nathan

தெரிஞ்சிக்கங்க…எடை குறைப்பு சம்பந்தமாக ஒழிக்கப்பட வேண்டிய 15 கற்பனைகள்!!!

nathan

தலைக்கு போடும் ஹேர் டை உடலுக்கு ஏற்படுத்தும் பாதிப்புகள்

nathan

பவழம் யார் அணியலாம் (coral)

nathan

இப்படி உங்க கன்னமும் புஷ்புஷ்னு ஆகணுமா?… அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan