1391420265
இனிப்பு வகைகள்

தீபாவளி ஸ்பெஷல்: மைசூர் பாகு

தேவையான பொருட்கள் :

கடலை மாவு – 1 கப்,
சர்க்கரை – 2 கப்,
நெய் – 3 கப்,
தண்ணீர் – 1 கப்.

செய்முறை :

* கடலை மாவை லேசாக நெய் ஊற்றி வாசனை போக வறுத்துக் கொள்ளவும்.

* அடிகனமான பாத்திரத்தில் சர்க்கரை, தண்ணீர் சேர்த்துப் பாகு காய்ச்சவும். ஒற்றைக் கம்பிப் பதத்துக்கு வந்ததும் (ஒரு நூல் கம்பி பதம்)

கடலை மாவை கொஞ்சம் கொஞ்சமாகக் கொட்டிக் கிளறவும்.
* அதே நேரத்தில், இன்னொரு அடுப்பில் நெய்யைச் சூடாக்கி, கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றிக் கிளறவும்.

* மாவும் பாகும் நுரைத்துப் பொங்கி வரும்போது நெய் தடவிய தட்டில் கொட்டவும். தட்டை ஆட்டக்கூடாது. அப்படியே செட்டாக விட

வேண்டும். அப்போதுதான் சூடான ட்ரெடிஷனல் மைசூர் பாகாக வரும். சிறிது சூடாக இருக்கும்போதே கத்தியால் துண்டுகள் போடவும்.
1391420265

Related posts

பைனாப்பிள் கேசரி

nathan

மினி ஜாங்கிரி Mini Jangiri Recipe

nathan

கடலை மாவு பர்பி

nathan

மிக்க சுவையான எள்ளு உருண்டை

sangika

ரசகுல்லா

nathan

லட்டு – பூந்திலட்டு

nathan

30 வகை ஈஸி ரெசிபி!.

nathan

எக்லஸ் கேரட் புட்டிங்

nathan

இளநீர் பாயாசம்

nathan