fghjkl 1
ஆரோக்கிய உணவு

வியாதிகளுக்கு நல்ல மருந்தாக விளங்குகிறது அருகம்புல்

பசுமையான, அகலத்தில் சிறிய, மிக நீண்ட கூர்மையான இலைகள் தாவரம் முழுவதும் காணப்படும். தண்டு குட்டையானது, நேரானது. ஈரப்பாங்கான வயல் வரப்புகள்,
தரிசு நிலங்கள் பிறும் சாலை ஓரங்களில் மிகுதியாகக் காணப்படும். வெப்பமான சூழ்நிலைகளிலும் வளரக்கூடிய தன்மையை அருகம்புல் கொண்டுள்ளது.

fghjkl 1

முழுத்தாவரமும் இனிப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டதாகும். உடல் வெப்பத்தை அகற்றும்; சிறுநீர் பெருக்கும்; உடலைப் பலப்படுத்தும்; குடல் புண்களை ஆற்றும்.

அருகம்புல் ஒரு கைப்பிடி அளவு சேகரித்துச் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். இதனை, ஒன்றிரண்டாக நறுக்கி, 4 டம்ளர் தண்ணீரில் இட்டு, சிறிதளவு

மிளகுத்தூள் சேர்த்து, 1 டம்ளராகக் காய்ச்சி, வடிகட்டிக் கொள்ள வேண்டும். இத்துடன், தேவையான அளவு பனங்கற்கண்டு சேர்த்து, இளஞ்சூடாக, தினம் இரண்டு
வேளைகள் குடித்து வரவேண்டும். அதனை தொடர்ந்து செய்து வந்தல் வெள்ளைப்படுதல் பிரச்சனை படிப்படியாக தீரும்.
தேவையான அளவு அருகம்புல் சேகரித்துக் கொண்டு, சிறிதளவு மஞ்சள் சேர்த்து பசையாக அரைத்து, உடலில் தேய்க்க வேண்டும். ஒரு மணி நேரம் ஊறிய பின்னர்
குளிக்க வேண்டும். சொறி, சிரங்கு, புண்கள், படர்தாமரை, உடல் அரிப்பு குணமாகும் வரை இந்தவாறு தொடர்ந்து செய்து வரலாம்.

ஒரு கைப்பிடி அளவு பசுமையான அருகம் புல்லைச் சேகரித்துக் கொண்டு, நீரில் கழுவி, அரைத்து, காலையில் மட்டும் காய்ச்சாத ஆட்டுப்பாலில் கலந்து குடிக்கவேண்டும். தொடர்ந்து இரண்டு மாதங்கள் வரை இந்தவாறு செய்யலாம். நரம்புத் தளர்ச்சி கட்டுப்படும்.
அருகம் சாறு 20 மி.லி. அளவு, தண்ணீர் 20 மி.லி., தேக்கரண்டி அளவு சர்க்கரை சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து 30 நாட்கள் சாப்பிட வேண்டும். இந்தவாறு தொடர்ந்து குடித்து வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.

Related posts

தமிழர்கள் சுப நிகழ்ச்சிகளில் தேங்காய் ஏன் உடைக்கிறார்கள்?

nathan

உணவுப் பொருட்கள் சீக்கிரம் கெடாமல் இருக்க சில டிப்ஸ்!!!

nathan

உங்களுக்கு தெரியுமா வெந்தயத்தால் கிடைக்கும் 15 நன்மைகள்!!!

nathan

கருவாடு சாப்பிடுவது நல்லது தானாம்; தெரிஞ்சிக்கங்க…

nathan

தயிர் நெல்லிக்காய்

nathan

இதை கட்டாயம் படியுங்கள் உடல் மற்றும் இரத்தத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற உதவும் உணவுகள்!

nathan

இளநீருடன் தேன் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

nathan

உங்களுக்கு தெரியுமா இளமையான முகம் முதல் முகப்பரு வரை, அனைத்திற்கும் பயன்படும் ட்ராகன் பழம்..!

nathan

சூப்பர் டிப்ஸ்! எப்பவும் அழகா இருக்கணுமா? காய்ச்சாத பாலை இப்படி பயன்படுத்தினாலே போதும் !

nathan