kheema cutlet
ஆரோக்கிய உணவு

சுவையான மட்டன் கீமா கட்லெட்

பலருக்கு சிக்கனை விட மட்டன் தான் மிகவும் பிடித்ததாக இருக்கும். அப்படி நீங்கள் மட்டன் பிரியர்களாக இருந்தால், உங்களுக்காக ஒரு அருமையான மட்டன் ரெசிபியை இங்கு கொடுத்துள்ளோம். இந்த ரெசிபி செய்வது மிகவும் ஈஸியானது மற்றும் ருசியாகவும் இருக்கும். அது தான் மட்டன் கீமா கட்லெட்.

இந்த ரெசிபியை ஸ்நாக்ஸாகவும் சாப்பிடலாம். மேலும் குழந்தைகள் இதனை விரும்பி சாப்பிடுவார்கள். சரி, இப்போது அந்த மட்டன் கீமா கட்லெட் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

 

தேவையான பொருட்கள்:

மட்டன் கீமா – 1/2 கிலோ

தேங்காய் பவுடர் – 2 டேபிள் ஸ்பூன்

மல்லி தூள் – 1 டீஸ்பூன்

மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

மிளகு தூள் – 1 டீஸ்பூன்

கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்

கொத்தமல்லி – சிறிது (நறுக்கியது)

முட்டை – 2

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – 2 கப்

செய்முறை:

முதலில் மட்டன் கீமாவை கழுவி நீரை முற்றிலும் வடித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதில் தேங்காய் பவுடர், மல்லி தூள், மிளகாய் தூள், மிளகு தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து பிரட்டி, பின் உப்பு சேர்த்து பிரட்டி, 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

30 நிமிடம் ஆன பின்னர் அதில் முட்டையை உடைத்து ஊற்றி மீண்டும், பிரட்டி, கொத்தமல்லியை தூவி கைகளால் நன்கு பிரட்டிக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிரட்டி வைத்துள்ள கீமாவை கட்லெட்டுகளாக தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், மட்டன் கீமா கட்லெட் ரெடி!!!

Related posts

cholesterol symptoms in tamil – கொழுப்புச்சத்து அதிகமாக இருந்தால் ஏற்படும் அறிகுறிகள்

nathan

சளிக்கு இதமாக இருக்கும் சுக்கு மல்லி காபி

nathan

சூப்பர் டிப்ஸ்! தினம் ஒரு செவ்வாழை ..

nathan

உடலுக்குத் தேவை பொஸிட்டிவ் உணவுகளே!

nathan

கோடைகாலத்தில் உடல் நலனை பாதுகாக்க செய்ய வேண்டியவை

nathan

வாழைத்தண்டை ஜூஸாக்கிக் குடித்தால் இத்தனை நன்மைகளாம்!…

sangika

வறட்டு இருமலுக்கு கசாயம் (Home Remedy for Dry Cough in Tamil)

nathan

தினமும் காலையில் ஒரு அத்திப்பழம் சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் நன்மைகள்!!!

nathan

தைராய்டு உள்ளவர்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள்!!!

nathan