27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
625.500.560.350.160.300.053.800. 20
மருத்துவ குறிப்பு

இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள் 1 35 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் உஷாரா இருங்க…

பொதுவாக ஆண்கள் எப்போதுமே தங்களது ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதில்லை. இதனால் பல நோய்கள் உருவெடுத்து நம்மை ஆட்டிப்படைத்து கொண்டு வருகின்றது.

அதிலும் இன்று ஆண்களை அச்சப்பட வைக்கும் ஒரு முக்கிய நோய்களுள் புரோஸ்டேட் புற்றுநோய் ( விதைப்பை புற்றுநோய்) இருக்கின்றது.

இந்த புரோஸ்டேட் சுரப்பியில் வரும் புற்றுநோய் அது பலவகையில் பரவுகிறது இது முக்கியமாக புகைப்பிடித்தல் மூலமாக பரவுகிறது என்று கூறுகின்றனர்.

அந்தவகையில் ஆண்கள் இந்த நோயை எப்படி எதிர்கொள்வது தங்களது உடல்நலத்தை எவ்வாறு பேணிப்பாதுகாப்பது என்பது பற்றி தற்போது பார்ப்போம்.

புரோஸ்டேட் என்றால் என்ன?

ஆண்களின் இனப்பெருக்க மண்டலத்தில் இருக்கும் ஒரு சுரப்பி. இது விந்தணுக்களை பாதுகாக்கும் திரவத்தை சுரக்கும் வேலையைச் செய்யும்.

பெரும்பாலும் 40 மற்றும் 50களில் இந்தச் சுரப்பி தன் வேலையைக் குறைத்துக் கொள்ளும் அல்லது நிறுத்திக்கொள்ளும். இந்தச் சுரப்பியில் வரும் புற்றுநோய்தான் புரோஸ்டேட் புற்றுநோய்.

35 வயதிற்கு மேல் ஆண்கள் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் 35 வயதிற்கு மேல் தான் புரோஸ்டேட் புற்றுநோய் அதிகம் தாக்கும்.

கடைப்பிடிக்க வேண்டியவை
  • ஒரு நாளைக்கு சுமார் 1.5 – 2 லிட்டர் அளவு மட்டுமே திரவ வடிவ உணவுகளை உட்கொள்ளவும். படுக்கைக்குச் சென்ற 2 மணி நேரத்திற்குள் பருகி விடுங்கள்.
  • தினமும் 5 பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • அடர்த்தியான நிறங்களைக் கொண்ட ஆரோக்கியமான இயற்கை உணவுகளை உட்கொள்ளுங்கள். மேலும், வேல்லைரொட்டி, பாஸ்தா, உருளைக் கிழங்கு ஆகியவற்றை தவிர்த்துக் கொண்டு, முழு தானியங்களை உனாவாக எடுத்துக் கொள்ளுங்கள்.
  • வாரத்திற்கு 4 நாட்கள் குறைந்தது 30 நிமிடங்கள் உடற்பயிசி செய்வதை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
  • தினமும் 7-8 மணி நேரம் தூங்க வேண்டும்
தவிர்க்க வேண்டியவை
  • நீண்ட வெளியூர் பயணங்களுக்கு முன் திரவ உணவுகளை தவிர்க்கவும்.
  • காப்பி, டீ, எனர்ஜி ட்ரிங்க்ஸ் உள்ளிட்ட காஃபின் கலந்த பானங்களைத் தவிர்த்து விடுங்கள் முடியாவிட்டால் குறைத்துக் கொள்ளுங்கள்.
  • அதிகளவு காரமான உணவுகளை உட்கொள்ள வேண்டாம். ஏனெனில், அது சிறுநீர் கால அளவை அதிகரிக்கிறது.
  • புகைபிடித்தல் மற்றும் மது அருந்தும் பழக்கத்தை அறவே நிறுத்திவிட வேண்டும்.
பொதுவாக அறிகுறி

இந்த குறைபாடு உள்ளவர்களுக்கு பகல் நேரத்தில் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும். மேலும், இரவிலும் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலை உருவாகும்.

சிறுநீர் கழிப்பதில் சிரமம், சிறுநீர் கழித்தபின்னரும் கூட உடல் முழுவதுமாய் திருப்தியடையாமல் தவிப்பது போன்ற தொந்தரவுகள் இருப்பது அறிகுறிகளாகும்.

தீவிரமான அறிகுறிகள்
  • உடல் சோர்ந்து கீழ் வயிற்றில் வலி ஏற்பட்டு சிறுநீர் கழிக்க முடியாமல் அவதிப்பட நேரிடும்.
  • வலியுடன் சிறுநீர் கழிக்கும்போது அதில் ரத்தம் அல்லது சீழ் கலந்து போகும்.
  • ஆணுறுப்பில் திடீர் திடீரென எரிச்சலுடன் வலி வரும்.
  • கண்களைச் சுற்றி கருவளையம் உருவாகும். கால்களில் வீக்கம் தோன்றும்.
  • ஆணுறுப்பில் விறைப்புத்தன்மை அடைய இயலாமை அல்லது சிரமம் ஏற்படும்.

மேற்கண்ட இந்த அறிகுறிகளில் ஏதேனும் நீங்கள் கவனித்தால், உடனடியாக உங்கள் மருத்துவரை அணுகுங்கள்.

Related posts

சர்க்கரை நோய் தாக்குவதற்கு இதுதான் முக்கிய காரணமா?தெரிஞ்சிக்கங்க…

nathan

ஹார்மோன் குறைவால் ஏற்படும் நோய்கள்

nathan

மருமகள்களுக்கு சில அன்பான ஆலோசனைகள்

nathan

உயர் இரத்த அழுத்தம் இருந்தா இந்த உணவுகளை சாப்பிடாதீங்க..

nathan

உடலில் கொழுப்பின் உண்மையான வேலை என்னவென்று தெரியுமா?

nathan

உங்களுக்கு தெரியுமா வெற்றிலை போடுவதற்கு மிச்சிய மருத்துவம் இல்லை!

nathan

பாதப்பராமரிப்புக்கான மருத்துவமுறைகள்

nathan

BP-யை குணமாக்கும் அக்குபங்க்சர்

nathan

சூப்பர் டிப்ஸ் சிறுநீரகக் கற்கள் விரைவில் கரைய தேனில் ஊற வைத்த இந்த ஒரு பொருளை மட்டும் சாப்பிடுங்க பலன் நிச்சயம்!!

nathan