29.5 C
Chennai
Saturday, Jul 26, 2025
Image 82
ஆரோக்கியம் குறிப்புகள்

சுப்பரான தாமரை விதை பாயாசம்

பாயாசம் என்றாலே அனைவருக்கும் பால் பாயாசம் தான் நினைவிற்கு வரும். ஆனால் பாயாசத்திலேயே பல வெரைட்டிகள் உள்ளன. அதில் ஒன்று தான் தாமரை விதை பாயாசம். இந்த பாயாசம் சற்று வித்தியாசமான சுவையை கொண்டிருப்பதுடன், உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானதும் கூட.

இங்கு அந்த தாமரை விதை பாயாசத்தை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதை பண்டிகை நாட்களில் வீட்டில் செய்தால் பாராட்டைப் பெறலாம்.

தேவையான பொருட்கள்:

பால் – 3 கப்

தாமரை விதை – 1 கப்

சர்க்கரை – 1 1/2 கப்

ஜாதிக்காய் பொடி – 1 சிட்டிகை

பாதாம் – 5-6 (பொடித்தது)

முந்திரி – 5-6 (பொடித்தது)

குங்குமப்பூ – 1 சிட்டிகை

நெய் – 1 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், தாமரை விதையை போட்டு 3-4 நிமிடம் மிதமான தீயில் வைத்து வறுத்து, ஒருதட்டில் போட்டு குளிர வைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.

பின்னர் சிறிது பாலில் குங்குமப்பூவை போட்டு சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும்.

பிறகு மீதமுள்ள பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க விட வேண்டும்.

பாலானது சுண்டி கெட்டியாகும் போது, அதில் பொடி செய்து வைத்துள்ள தாமரை விதையை போட்டு 5 நிமிடம் கிளறி, பின் அதில் சர்க்கரை சேர்த்து கரைந்ததும், குங்குமப்பூ பாலை ஊற்றி கிளறி, இறக்கிவிட்டு, பின் அதில் பாதாம், முந்திரி, ஜாதிக்காய் பொடி ஆகியவற்றை தூவினால், சுவையான தாமரை விதை பாயாசம் ரெடி!!!

Related posts

பெற்றால் மட்டும் போதுமா? நல்ல பிள்ளையாக வளர்க்க என்ன செய்யனும்?

nathan

தெரிஞ்சிக்கங்க…சிறந்த மற்றும் மோசமான தூக்க நிலைகள்

nathan

இந்த டயப்பர் ரேஷஸஸ் சரியாகவே மாட்டேங்குதா?…

nathan

காலை உணவுக்கு நோ… உடல்பருமனுக்கு வெல்கம்!

nathan

பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் புற்றுநோய் வரும்

nathan

உணவில் அதிக எண்ணெய் பயன்படுத்துவதை தடுக்கும் எளிய வழிமுறைகள்

nathan

ஆரோக்கியத்தைப் பாதிக்கும் பெண்களின் ஹேண்ட் பேக்குகள்.!தெரிஞ்சிக்கங்க…

nathan

veginal infection types in tamil – பெண்களுக்கு ஏற்படும் பொதுவான சில யோனித்தோல் தொற்றுகள்

nathan

பச்சை குத்தி கொண்டதால் ஏற்படும் விளைவு:

nathan