eggcurry
ஆரோக்கிய உணவு

சுவையான செட்டிநாடு ஸ்டைல் முட்டை குழம்பு

முட்டை குழம்பானது நீண்ட ஸ்டைலில் சமைக்கப்படும். இங்கு அதில் ஒன்றான செட்டிநாடு ஸ்டைல் முட்டை குழம்பு ரெசிபியை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். இப்படியான ரெசிபி செய்வது மிகவும் ஈஸி. பேச்சுலர்கள் கூட முயன்றுக்கலாம்.

சரி, இப்போது அவ் செட்டிநாடு ஸ்டைல் முட்டை குழம்பு ரெசிபியின் செய்முறையைப் பார்ப்போமா!!!

 

தேவையான பொருட்கள்:

முட்டை – 3

வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)

கொத்தமல்லி – 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

கரம் மசாலா – 1 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

தாளிப்பதற்கு…

பட்டை – 1/2 இன்ச்

கறிவேப்பிலை – சிறிது

கிராம்பு – 1

அரைப்பதற்கு…

துருவிய தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன்

வரமிளகாய் – 2

பூண்டு – 4-5 பற்கள்

இஞ்சி – 1/2 இன்ச்

மல்லி – 1/2 டீஸ்பூன்

மிளகு – 1 டீஸ்பூன்

சீரகம் – 1 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் முட்டைகளைப் போட்டு, வேக வைத்து, முட்டையின் ஓட்டை நீக்கிவிட்டு, பின் அதனை நீளவாக்கில் இரண்டாக வெட்டிக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் அரைக்க கொடுத்த அனைத்து பொருட்களையும் போட்டு லேசாக வறுத்து இறக்கி, குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு பிறொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, கறிவேப்பிலை பிறும் கிராம்பு சேர்த்து தாளித்து, பின் அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

பிறகு உப்பு பிறும் அரைத்து வைத்துள்ள பேஸ்ட் சேர்த்து கிளறி, 3-4 நிமிடம் கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.

பின் அதில் 1/2-1 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு. கரம் மசாலா பிறும் வேக வைத்துள்ள முட்டைகளை சேர்த்து, 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கினால், சுவையான செட்டிநாடு ஸ்டைல் முட்டை குழம்பு ரெடி!!!

Related posts

வாய்ப்புண், வயிற்றுபுண்ணை குணமாகும் கசகசா கஞ்சி

nathan

உங்களுக்கு தெரியுமா 2 வருஷம் ஆனாலும் கெட்டுப் போகாத எலுமிச்சை ஊறுகாய்!.. செய்வது எப்படி?

nathan

சூப்பரான பட்டர் சிக்கன் ரெசிபி

nathan

தெரிஞ்சிக்கங்க…மலச்சிக்கல், வயிற்றுப் புழு, மற்றும் “மரு” போன்றவற்றிக்கு உடனடி தீர்வு இதோ…!!

nathan

பல்வேறு நோய்களை குணமாக்கும் மஞ்சள் பால்

nathan

தினம் 3 உலர்ந்த அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

nathan

காம உணர்வை அதிகரிக்க செய்யும் முருங்கை

nathan

தெரிஞ்சிக்கங்க…இந்த உணவு மற்றும் பானங்களை சாப்பிட்டால் உங்களுக்கு கடுமையான வயிற்று வலி வருமாம்…

nathan

கவா டீ என்றால் என்ன? இந்த டீ ருசியில் மட்டுமல்ல உடலுக்கும் நிறைய நன்மைகளை அள்ளித் தருகின்றன

nathan