27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
sridevi bride
இளமையாக இருக்கதொப்பை குறைய

பெண்களே தெரிஞ்சிக்கங்க… உங்கள் திருமணத்தன்று தொப்பையை மறைக்கணுமா?

‘திருமணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர்’. வாழ்க்கையில் ஒரே ஒரு முறை நடக்கும் அந்தத் திருமணத்தின் போது, எப்போதும் போல இருப்பது நன்றாக இருக்குமா என்ன? திருமணத்திற்கென்று அலங்கரித்துக் கொள்வது ஒன்றும் புதியதல்லவே!

அதிலும், மணப் பெண்கள் தங்களை அழகுப்படுத்திக் கொள்வதில் அதிகமாகவே ஆசைப்படுவார்கள். இது இயல்புதான். அதே நேரத்தில், சில பெண்களுக்கு திருமணத்திற்கு முன்பே வயிறு தொப்பை போட்டிருக்கும். எவ்வளவோ உடற்பயிற்சி செய்தாலும், டயட்டில் இருந்தாலும் தொப்பை மட்டும் குறையவே குறையாது. எந்த உடை போட்டுக் கொண்டாலும் அவர்களுடைய தொப்பை மட்டும் எப்படியாவது வெளியே தெரிந்து விடும்.

திருமணத்தன்றும் இதேப்போல தொப்பையைக் காட்டிக் கொண்டிருந்தால் நன்றாகவா இருக்கும்? அதற்குத் தான் அருமையான ஐந்து யோசனைகளை இங்கே முன் வைக்கிறோம்.

உள்ளாடையில் கவனம்…

மிகவும் டைட்டாக மற்றும் பட்டையாக இருக்கக் கூடிய எலாஸ்ட்டிக் டிசைன் கொண்ட உள்ளாடையை, அதாவது ஸ்பெஷலான ஜட்டியை, அன்று ஒரு நாள் மட்டும் அணிந்து கொள்ளுங்கள். திக்கான அந்த எலாஸ்ட்டிக், உங்கள் தொப்பை மற்றும் இடுப்பை சமமாகக் காட்டும். எலாஸ்ட்டிக்கின் இறுக்கத்தினால், தொப்பையும் ஓரளவு உள்ளே அமுங்கும். தேவைப்பட்டால் பெல்லி-பாண்டுகளையும் போட்டுக் கொண்டு தொப்பையை இறுக்கிக் கொள்ளலாம்.

புடவை மூலம்…

தொப்பையை மறைக்கும் தந்திரத்தை அன்று நீங்கள் அணிந்து கொள்ளவுள்ள முகூர்த்த சேலை மூலமாகவும் செய்து கொள்ளலாம். உங்கள் புடவையின் பல்லு என்று அழைக்கப்படும் பகுதியைக் கொண்டு உங்கள் தொப்பையைக் கச்சிதமாக மறைத்து விடலாம். அடிப்பக்கம் அகண்டு இருக்கும் லெஹெங்கா துப்பட்டா மூலமும் இதைக் கொஞ்சம் சரிசெய்ய முடியும். மேலும், புடவையில் இடுப்பைச் சுற்றிலும் எம்பிராய்டரி அதிகம் இல்லாத அளவுக்குப் பார்த்துக் கொள்ளுங்கள். தொப்பையை முழுவதும் மறைக்கும் அளவுக்குக் கொஞ்சம் உயரமான ஜாக்கெட் அணிந்தாலும் ஓ.கே.தான்!

தகதக அலங்காரங்கள்…

தொப்பையைச் சுற்றிலும், அடுத்தவர்களின் கண்களைக் கவரும் வண்ணம் பலவிதமான வேலைப்பாடுகள் அடங்கிய அலங்காரங்களைச் செய்து கொள்ளலாம். ஆங்காங்கே சிறுசிறு குஞ்சரங்களைத் தொங்க விடலாம்; பாசி மணிகளைக் கோர்த்து விடலாம்; முக்கியமாக, கொஞ்சம் இறுக்கமான ஒட்டியாணம் அணிந்து கொள்ளலாம். திருமணத்திற்கு வந்திருப்பவர்களின் பார்வை முழுவதும் இந்த அலங்காரங்களில் இருக்கும் போது, தொப்பை எங்கே தெரியப் போகிறது?

மற்ற பகுதிகளிலும்…

உங்கள் ஆடைகளின் வெளிப்புறத்தின் அலங்காரங்களையும் அதிகப்படுத்திக் கொள்ளுங்கள். முகத்தில் பளிச்சென்ற மேக்கப், கழுத்தில் ஜொலிக்கும் நகைகள், அசத்தலான ஹேர் ஸ்டைல், மங்களகரமான உடைகள் என்று பளபளக்கும் இந்த விஷயங்களில் உங்கள் தொப்பையை யாரும் கவனிக்கப் போவதில்லை.

இந்தியப் பொண்ணு…

திருமணத்திலும் சரி, மாலை வரவேற்பு நிகழ்ச்சியிலும் சரி… கண்ட கண்ட உடைகளை அணிவதற்குப் பதிலாக, அன்று முழுவதும் ஒரு சராசரி இந்தியப் பெண் போல் புடவை மட்டுமே அணிந்து கொள்ள வேண்டும். ஏற்கனவே கூறியது போல், புடவை மூலம் தொப்பையை மறைக்கும் வேலையை அன்று முழுவதும் கடைப்பிடிக்க வேண்டும்.

Related posts

தொப்பையை குறைக்க சில புத்திசாலித்தனமான ஐடியாக்கள்

nathan

தொப்பையை வேகமா கரைக்கணுமா? அப்ப இந்த பச்சை நிற உணவுகளை சாப்பிடுங்க…

nathan

தொப்பை குறைய பயிற்சி (beauty tips in tamil)

nathan

விரைவில் தொப்பையை குறைக்கும் பரிபூரண நவாசனா….!

nathan

வயதானாலும் அழகும் இளமையும் மாறாமல் இருக்க என்ன செய்யனும்?

nathan

பெண்களின் வயிற்று சதை குறைய…..! – Tips to reduce Tummy

nathan

இளமை… இனிமை… முதுமை…

nathan

30 களில் எப்படி உங்களை 20 போல் காண்பிக்கலாம்?

nathan

தொப்பையை குறைத்து சிக்கென்ற வயிற்றை பெற பெண்களுக்கு ஆலோசனை

nathan