25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
25 baby laug
ஆரோக்கியம் குறிப்புகள்

உங்க குழந்தைக்கு நீங்களே தாலாட்டு பாடுங்க! இதோ முத்தான பாடல்கள்!

பாடல் என்பது நமது வாழ்க்கையோடு ஒன்றிணைந்த ஒன்றாகும்.. வாழ்க்கையின் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு பாடல்கள் பாடப்படுகின்றன.. இந்த தாலாட்டு பாடல்கள் நாட்டுப்புற பாடல் வகைகளில் ஒன்றாகும். குழந்தையை தூங்க வைக்க தாலாட்டு பாடல் என்று இருப்பது போல இந்த நாட்டுபுறப்பாடல்களில் பல வகைகள் உள்ளன..

இதில், தாலாட்டுப்பாட்டு, விடுகதைப்பாட்டு, ஏற்றப்பாட்டு, வள்ளைப்பாட்டு, கண்ணன்பாட்டு, நடவுப்பாட்டு, ஒப்பாரிப்பாட்டு, பரிகாசப்பாட்டு, கும்மிப்பாட்டு, ஏசல்பாட்டு, வேல்பாட்டு, இசைப்பாட்டு போன்றவை அடங்கும்.. இன்றைய மாறிவரும் நவீன உலகில் இந்த நாட்டுப்புற பாடல்கள் எல்லாம் எத்தனை பேருக்கு தெரியும்? ஆனால் இவைகள் தான் நமது அடையாளம்!

 

நாம் குழந்தைகளாக இருந்த போது நமது பாட்டி நம்மை, இசை இல்லாத அந்த தாலாட்டு பாடலை பாடி நம்மை உறங்க வைத்திருப்பார்.. நாமும் அதை கேட்டுக் கொண்டு மெய் மறந்து பாடியிருப்போம்.. அந்த பாடலை நமது பாட்டி மற்றும் அம்மா பாடும் போது நமக்காக மட்டுமே எழுதப்பட்டு பாடப்படுவது போன்ற ஒரு உணர்வு இருக்கும்.. ஆனால் இன்றைய குழந்தைகளுக்கு இந்த அனுபவம் கிடைப்பதில்லை…!

ஏனென்றால் இன்றைய நவீன பெண்கள் பலருக்கும் இந்த தாலாட்டு பாடல்கள் தெரிவது கிடையாது.. குழந்தைகளின் கைகளில் யூ-டியூப் வீடியோ போட்டு கொடுத்து விடுகின்றனர்.. ஆயிரம் தான் தொழில்நுட்ப வளர்ச்சி வந்தாலும், நம் வாயால் நம் குழந்தைகளுக்கு தாலாட்டு பாடுவது போல ஒரு இனிமையும் சுகமும் எதில் வரும்? எனவே இன்றைய தலைமுறை பெண்களும் தாலாட்டு பாடலை கற்றுக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.. இதனை பாட எந்த வித கூச்சமும் பட அவசியமில்லை.. இந்த பகுதியில் உங்களது குழந்தைகளுக்கான முத்தான தாலாட்டு பாடல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.. இவற்றை படித்து பாடி உங்களது குழந்தையை தூங்க வையுங்கள்..!

1. ஆராரோ ஆரிரரோ…!

ஆராரோ ஆரிரரோ

ஆரிரரோ ஆராரோ

ஆரடிச்சு நீயழுதாய்

கண்மணியே கண்ணுறங்கு

கண்ணே யடிச்சாரார்

கற்பகத்தைத் தொட்டாரார்

தொட்டாரைச் சொல்லியழு

தோள் விலங்கு போட்டு வைப்போம்

அடிச்சாரைச் சொல்லியழு

ஆக்கினைகள் செய்து வைப்போம்

மாமன் அடித்தானோ

மல்லி பூ செண்டாலே

அண்ணன் அடித்தானோ

ஆவாரங் கொம்பாலே

பாட்டி அடித்தாளோ

பால் வடியும் கம்பாலே

ஆராரோ ஆரிரரோ

ஆரிரரோ ஆராரோ

ஆரடிச்சு நீயழுதாய்

கண்மணியே கண்ணுறங்கு….

2. பச்சை இலுப்பை வெட்டி…

பச்சை இலுப்பை வெட்டி

பவளக்கால் தொட்டிலிட்டு

பவளக்கால் தொட்டிலிலே

பாலகனே நீயுறங்கு

கட்டிப் பசும் பொன்னே – கண்ணே நீ

சித்திரப் பூந்தொட்டிலிலே

சிரியம்மா சிரிச்சிடு – கண்ணே நீ

சித்திரப் பூந் தொட்டிலிலே.

3. உசந்த தலைப்பாவோ…

உசந்த தலைப்பாவோ

‘உல்லாச வல்லவாட்டு’

நிறைந்த தலை வாசலிலே

வந்து நிற்பான் உன் மாமன்

தொட்டிலிட்ட நல்லம்மாள்

பட்டினியாப் போராண்டா

பட்டினியாய் போற மாமன்-உனக்கு

பரியம் கொண்டு வருவானோ?

4. தாய்மாமன் பாடல்

பால் குடிக்கக் கிண்ணி,

பழந்திங்கச் சேணாடு

நெய் குடிக்கக் கிண்ணி,

முகம் பார்க்கக் கண்ணாடி

கொண்டைக்குக் குப்பி

கொண்டு வந்தான் தாய்மாமன்.

5. தாய்மாமன் பற்றிய தாலாட்டு பாடல்

ஆனை விற்கும் வர்த்தகராம்-உன் மாமன்

சேனைக் கெல்லாம் அதிகாரியாம்

சின்னண்ணன் வந்தானோ கண்ணே-உனக்கு

சின்னச் சட்டை கொடுத்தானோ உனக்கு

பட்டு ஜவுளிகளும் கண்ணே உனக்குப்

பல வர்ணச் சட்டைகளும்

பட்டுப் புடவைகளும் கண்ணே-உனக்கு

கட்டிக் கிடக் கொடுத்தானோ!

பொன்னால் எழுத்தாணியும்-கண்ணே உனக்கு

மின்னோலைப் புஸ்தகமும்

கன்னாரே! பின்னா ரேன்னு-கண்ணே

கவிகளையும் கொடுத்தானோ !

6. கனியமுதே நீ உறங்கு…

ஓடும் மான் கண்ணோ என் கண்ணே நீ கவரிமான் பெற்ற கண்ணோ

புள்ளி மான் கண்ணோ என் கண்ணே நீ புத்திமான் பெற்ற கண்ணோ

முத்தோ ரத்தினமோ என் கண்ணே நீ தூத்துக்குடி முத்தினமோ…

முல்லை மலரோ என் கண்ணே நீ அரும்புவிரியா தேன்மலரோ..

கண்ணே கண்ணுறங்கு

கனியமுதே நீ உறங்கு….

7. நீராடும் வைகையிலே நின்றாடும் மீனே…

படம் : பார் மகளே பார்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பாடலின் சில வரிகள்…

நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே

நெய்யூறும் கானகத்தில் கைகாட்டும் மானே

தாலாட்டும் வானகத்தில் பாலூட்டும் வெண்ணிலவே

தெம்மாங்கு பூந்தமிழே தென்னாளும் குலமகளே…..!

8. காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே!

படம்: சித்தி

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பாடலின் சில வரிகள்…

காலமிது காலமிது

கண்ணுறங்கு மகளே

காலமிதைத் தவற விட்டால்

தூக்கமில்லை மகளே

தூக்கமில்லை மகளே

9. கற்பூர பொம்மை ஒன்று…

படம் : படம் : கேளடி கண்மணி

பாடலாசிரியர் : மு.மேத்தா

பாடலின் சில வரிகள்….

கற்பூர பொம்மை ஒன்று

கை வீசும் தென்றல் ஒன்று

கலந்தாட கை கோர்க்கும் நேரம்

கண்ணோரம் ஆனந்த ஈரம்

முத்தே என் முத்தாரமே சபை ஏறும்

பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா….!

10. கண்கள் நீயே… காற்றும் நீயே…

படம் : முப்பொழுதும் உன் கற்பனைகள்

பாடலாசிரியர் : தாமரை

கண்கள் நீயே..காற்றும் நீயே

தூணும் நீ ..துரும்பில் நீ

வண்ணம் நீயே ..வானும் நீயே

ஊனும் நீ ..உயிரும் நீ

பல நாள் கனவே

ஒரு நாள் நனவே

ஏக்கங்கள் தீர்த்தாயே….

11. ஆராரோ ஆரிராரோ அம்புலிக்கு நேர் இவரோ

படம் : சிறுத்தை

பாடலாசிரியர் : அறிவுமதி

இப்பாடலின் சில வரிகள்:

ஆராரோ ஆரிராரோ அம்புலிக்கு நேர் இவரோ..

தாயான தாய் இவரோ தங்க ரத தேர் இவரோ ..

மூச்சுப்பட்டா நோகுமுன்னு மூச்சடக்கி முத்தமிட்டேன்

நிழலுபட்டா நோகுமுன்னு நிலவடங்க முத்தமிட்டேன்

12. அத்தை மடி மெத்தையடி

படம் : கற்பகம்

பாடலாசிரியர் : வாலி

பாடலின் சில வரிகள்:

அத்தை மடி மெத்தையடி

ஆடி விளையாடம்மா

ஆடும் வரை ஆடி விட்டு

அல்லி விழி மூடம்மா…

13. கற்பூர பொம்மை ஒன்று

படம் : கேளடி கண்மணி

பாடலாசிரியர் : மு.மேத்தா

கற்பூர பொம்மை ஒன்று

கை வீசும் தென்றல் ஒன்று

கலந்தாட கை கோர்க்கும் நேரம்

கண்ணோரம் ஆனந்த ஈரம்

முத்தே என் முத்தாரமே சபை ஏறும்

பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா….!

14. ஆரிரோ ஆராரிரோ

படம் : தெய்வ திருமகள்

பாடலாசிரியர் : நா.முத்துகுமார்

பாடலின் சில வரிகள்:

ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு

பூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு

தாயாக தந்தை மாறும் புது காவியம்

ஓ…இவன் வரைந்த கிறுக்கலில் இவளோ உயிர் ஓவியம்

 

Related posts

இந்த 5 ராசிக்காரங்களுக்கு காதலில் பொறுமை என்பதே கிடையாதாம்…

nathan

முகம் வீக்கமாக இருப்பது என்ன வியாதி?

nathan

நீங்கள், அதிகமாக கோபப்படுபவர்கள் என்றால் இதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்…

nathan

இந்த 5 பெற்றோர்கள் குழந்தைகளை தண்டிக்கவே மாட்டாங்களாம்.. தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

கட்டாயம் இதை படியுங்கள் ஹைப்பர் ஆக்டிவிட்டி, ஆட்டிஸம் குறைபாடுகளையும் சில பயிற்சிகளின் வழியாகச் சரிசெய்யலாம்.

nathan

உங்க ராசிப்படி எப்படிப்பட்டவங்கள நீங்கள் காதலிக்கக்கூடாது தெரியுமா?தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க!

nathan

இப்படி தூங்கினால் அப்படி இருப்பீர்கள்!

nathan

ஜலதோஷம், சளி, காய்ச்சல் என பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பிரச்னைகளிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள

nathan

உங்களுக்கு நீண்ட ஆயுள் இருக்கான்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க! படிங்க இத…

nathan