25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
vendhaya kulambu SECVPF
ஆரோக்கிய உணவு

கிராமத்து ஸ்பெஷல் வெந்தய குழம்பு ரெசிபி!!

தேவையான பொருள்கள் :சுண்டைக்காய் வற்றல் – 3 டீஸ்பூன், சின்ன வெங்காயம் – 15, தனியா – 1 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 7 அல்லது 8, வெந்தயம் – 3 டீஸ்பூன்,புளி – ஒரு எலுமிச்சை அளவு, கடலைப்பருப்பு – 1 டீஸ்பூன், மாபெரும் தக்காளி – 1, நல்லெண்ணெய் – 6 டீஸ்பூன், மிளகு – 1/2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு,பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை, மாபெரும் தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது), வெல்லம் – சிறிது, கறிவேப்பிலை – ஒரு கொத்து.

செய்முறை :கடாயில் 1 டீஸ்பூன் நல்லெண்ணெயை ஊற்றி கடலைப்பருப்பு, தனியா, காய்ந்த மிளகாய், மிளகு, 2 டீஸ்பூன் வெந்தயம் போட்டு நன்கு வறுத்துக் கொள்ளவும். ஆறியதும் மிக்சியில் தண்ணீர் விட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும்.கடாயில் மீதியுள்ள நல்லெண்ணெயை ஊற்றி கடுகு, மீதியுள்ள வெந்தயம், கறிவேப்பிலை தாளித்து மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், சுண்டைக்காய் வற்றலைப் போட்டு பொரித்துக் கொள்ளவும்.இத்துடன் சின்ன வெங்காயத்தையும், தக்காளியையும் நன்றாகக் குழைய வதக்கவும்.அதனுடன் அரைத்த மசாலாவையும் சேர்த்துக் கிளறவும்.உப்பு, புளிக்கரைசலை ஊற்றி நன்றாகக் கொதிக்க விடவும். சிறிது வெல்லம் சேர்த்து இறக்கவும்.

Related posts

பெண்கள் ஆரோக்கியத்திற்கு தினமும் சேர்த்து கொள்ள வேண்டிய உணவுகள்

nathan

அட்டகாசமான சுவை கொண்ட வெந்தயக் குழம்பு!!!

nathan

உடலுக்கு வலுசேர்த்து ஆரோக்கியம் காக்கும் பயறுகள்!

nathan

ஜீரணத்தை எளிதாக்கும் ஸ்பெஷல் சீரக மோர்

nathan

தெரிஞ்சிக்கங்க…சூடா வெந்தய டீ குடிச்சா என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

nathan

வயிற்றில் ஏற்பட்டு இருக்கும் கற்கள், புண்கள், கட்டிகள் பிரச்சனை குணமாகும். மஞ்சள் காமாலை பிரச்சனைக்கு கேரட் சாறை குடிக்கலாம்.

nathan

என்றும் இளமை தரும் சர்க்கரை வள்ளி கிழங்கு

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்பிணிகள் ப்ளம்ஸ் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!

nathan

சூப்பரான சிலோன் ஸ்டைல் தேங்காய்ப்பால் சொதி: செய்முறை விளக்கம்

nathan