27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
11 curd vada 6
ஆரோக்கிய உணவு

சுவையான ஸ்வீட் கார்ன் மசாலா தயிர் வடை

மாலையில் நல்ல சுவையான ஒரு ஸ்நாக்ஸை செய்ய நினைத்தால், ஸ்வீட் கார்ன் மசாலா தயிர் வடையை முயற்சி செய்து பாருங்கள். இது மிகவும் ஈஸியான ரெசிபி மட்டுமல்லாமல், குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

இங்கு அந்த ஸ்வீட் கார்ன் மசாலா தயிர் வடை ரெசிபியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை ட்ரை செய்து பாருங்கள்.

தேவையான பொருட்கள்:

ஸ்வீட் கார்ன் – 1 கப் (வேக வைத்து அரைத்தது)

கடலை மாவு – 2 டீஸ்பூன்

அரிசி மாவு – 1 டீஸ்பூன்

சோள மாவு – 1 டீஸ்பூன்

இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்

வெங்காயம் – 1 (பெரியது மற்றும் பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கியது)

கறிவேப்பிலை – சிறிது (பொடியாக நறுக்கியது)

கொத்தமல்லி – சிறிது (பொடியாக நறுக்கியது)

தயிர் – 1 கப்

மிளகு தூள் – 1/2 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – தேவையான அளவு (பொரிப்பதற்கு)

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் அரைத்த சோளம், கடலை மாவு, அரிசி மாவு, சோள மாவு, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட், கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் உப்பு சேர்த்து, பிசைந்து கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் பிசைந்து வைத்துள்ள மாவை வடைகளாக தட்டிப் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுத்து, தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு சிறு பௌலில் தயிரை ஊற்றி, அதில் மிளகு தூள், சிறிது கொத்தமல்லி மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து, பின் அதில் பொரித்து வைத்துள்ள வடைகளை போட்டு ஊற வைத்து சாப்பிட்டால், அருமையான ஸ்வீட் கார்ன் மசாலா தயிர் வடை ரெடி!!!

Related posts

பக்கவாதத்தை தடுக்கும் உணவுப் பழக்கங்கள்

nathan

சரும ஆரோக்கியத்தை மீட்க செயற்கை க்ரீம்கள் வேண்டாம் இந்த பழங்களே போதுமாம்…! தெரிஞ்சிக்கங்க…

nathan

இந்த கீரையின் தொக்கை சாப்பிட்டால் போதும்… நோய்கள் பறந்துபோகுமாம்…!

nathan

சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த ஓட்ஸ் தயிர் பாத்

nathan

கருவாடு சாப்பிடுவது நல்லது தானாம்; தெரிஞ்சிக்கங்க…

nathan

ஆரோக்கியம் தரும் உணவு வகைகள்

nathan

ப‌ச்சை ‌மிளகாயை பாதுகா‌க்க

nathan

தெரிஞ்சிக்கங்க…கலோரிகளை எரித்து, உடல் எடையைக் குறைக்கும் 10 அருமையான உணவுகள்!!!

nathan

தெரிந்து கொள்ளுங்கள்!அடிக்கடி வேர்க்கடலை சாப்பிடுவதால் உடலில் கெட்ட கொழுப்பை ஏற்படுத்துமா…?

nathan