12038118 1065652403454251 3392899417438879529 n
அறுசுவைஇனிப்பு வகைகள்

தேவையான பொருட்கள்:

பச்சரிசி மாவு – 2 கப் (வறுத்தது)
எள் – 2 கப்
வேர்க்கடலை – 2 கப்
பொட்டுக்கடலை – 2 கப்
தேங்காய் – 1/2 மூடி (துருவியது)
ஏலக்காய் பொடி – 1 டீஸ்பூன்
மண்டை வெல்லம் – 100 கிராம்
உப்பு – சிறிது

செய்முறை:

பூர்ணம் செய்ய…

• ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வேர்க்கடலை, பொட்டுக்கடலை, எள் ஆகியவற்றை வறுத்து, பொடித்து கொள்ளவும்.
• மண்டை வெல்லத்தை நன்கு நைஸாக இடித்து, அதையும் மிக்ஸியில் போட்டு ஒரு முறை அடித்துக் கொள்ளவும்.

• பின்னர் தேங்காயை எண்ணெய் விட்டு, பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும்.

• பின் ஒரு பாத்திரத்தில் அரைத்த பொடி கலவை, வதக்கிய தேங்காய், ஏலக்காய் பொடி மற்றும் மண்டை வெல்லத்தை போட்டு நன்கு கலந்து கொள்ளவும்.

கொழுக்கட்டை செய்ய…

• முதலில் ஒரு பாத்திரத்தில் பச்சரிசி மாவை போட்டு, சிறிது லேசான அளவு உப்பு சேர்த்து சுடு தண்ணீர் விட்டு, சற்று மென்மையாக பிசைந்து வைத்துக் கொள்ளவும். பிறகு பிசைந்து வைத்துள்ள மாவில் சிறு உருண்டையை எடுத்து, உருட்டி, அதன் நடுவில் சிறிது
பூர்ணத்தை வைத்து பூர்ணம் வெயில் வராமல் நன்றாக உருட்டி வேண்டிய வடிவில் பிடித்து வைக்கவும். இதேப்போல் அனைத்து மாவையும் செய்து கொள்ள வேண்டும்.

• பின்னர் இட்லிப் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, இட்லித் தட்டில் கொழுக்கட்டைகளை வைத்து, மூடி, வேக வைத்து எடுக்கவும்.

Related posts

சிக்கன் ரோஷ்ட் சாப்பிட்டதுண்டா இன்றே செய்து சாப்பிடுங்கள்……..

sangika

பேரீச்சை புடிங்

nathan

சுவையான மிளகூட்டல்!…

sangika

சுவையான கோதுமைப் பால் அல்வா

nathan

கத்தரிக்காய் குழம்பு

nathan

கருவாட்டு ப்ரை(Karuvadu Fry)

nathan

மிளகு ஜின்ஜர் சிக்கன்

nathan

மிக்க சுவையான எள்ளு உருண்டை

sangika

தேன்குழல் அல்லது ஜிலேபி (50 துண்டுகள்)

nathan