26.9 C
Chennai
Sunday, Nov 24, 2024
tur besan
மருத்துவ குறிப்பு

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…பொலிவான பட்டுப்போன்ற சருமத்தைப் பெற உதவும் ஆயுர்வேத ஃபேஸ் பேக்குகள்!!!

சிலருக்கு சருமமானது மென்மையிழந்து பொலிவின்றி காணப்படும். அப்படி முகம் பொலிவிழந்து காணப்படுவதற்கு தூக்கமின்மை, வெயிலில் அதிகம் சுற்றுவது, ஆரோக்கியமற்ற ஜங்க் உணவுகளை அதிகம் உட்கொள்வது போன்றவற்றுடன், சருமத்தை சரியாக பராமரிக்காததும் ஒரு முக்கிய காரணமாகும். இப்படி சருமத்தை முறையாக பராமரிக்காமல் வந்தால், சருமத்துளைகளில் அழுக்குகள் படிந்து, முகமே பொலிவிழந்து இருக்கும்.

ஆகவே முகமானது பட்டுப்போன்று மென்மையாகவும், பொலிவுடனும் இருக்க வாரம் 1-2 முறையாவது ஃபேஸ் பேக் போட்டு வர வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள அழுக்குகள் முற்றிலும் வெளியேற்றப்பட்டு, முகம் பொலிவேடு இருக்கும். இங்கு பொலிவான பட்டுப்போன்ற சருமத்தைப் பெற உதவும் ஆயுர்வேத ஃபேஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.

சாமந்தி பூ ஃபேஸ் பேக்

 

சாமந்தி பூவை பால் சேர்த்து பேஸ்ட் செய்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதனால் அதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி செப்டிக் தன்மையினால், சருமத்தில் உள்ள பருக்கள் மறைந்துவிடும். அதிலும் இதனை எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் வாரம் 1-2 முறை போட்டு வந்தால், நல்ல பலன் காணலாம்.

மஞ்சள் மற்றும் கடலை மாவு பேக்

 

4 டேபிள் ஸ்பூன் கடலை மாவில், 1/2 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து, அதனை பச்சை பால் ஊற்றி பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை செய்து வந்தால் நல்ல பொலிவான சருமத்தைப் பெறலாம்.

சந்தன மாஸ்க்

சந்தனப் பொடியை ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை செய்து வந்தால், முகத்தில் உள்ள பிம்பிள் மறைந்து, பொலிவான மற்றும் மென்மையான சருமத்தைப் பெறலாம்.

தேன் மற்றும் எலுமிச்சை மாஸ்க்

 

1 டேபிள் ஸ்பூன் தேனில் 3-5 துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, கண்களில் படாதவாறு முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக்கை தவறாமல் செய்து வந்தால், விரைவில் நல்ல பலனைக் காணலாம்.

ஹெர்பல் பேக்

Homemade Ayurvedic Face Packs For Glowing Skin
சிறிது கடலை மாவுடன், 1 சிட்டிகை மஞ்சள் தூள், சில துளிகள் எலுமிச்சை சாறு, அத்துடன் ரோஸ் வாட்டர் அல்லது காய்ச்சாத பால் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் கருமைகள் நீங்கி, முகம் பொலிவோடு பளிச்சென்று இருக்கும்.

Related posts

பெண்களின் திறமையை தடுக்கும் பயமும்.. கூச்சமும்..

nathan

உங்கள் துணைவி எப்படிப்பட்டவர் என்று தெரிந்து கொள்ள இதை படியுங்கள்!

nathan

ரத்த குழாய் அடைப்பு நீங்க இயற்கையான முறையில் குணம் பெற வழிமுறைகள்

nathan

கருப்பைவாய் புற்றுநோயை விரட்டும் மருந்து!

nathan

உடற்பருமன் சுட்டெண் (body mass index)

nathan

குடும்ப வாழ்க்கையில் வருத்தம் நீங்க: வசந்தம் வீச….

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…வயிற்றில் வளரும் குழந்தை புத்திசாலியாக பிறக்க வேண்டுமா?

nathan

கருப்பை பிரச்சனையை போக்கும் இயற்கை மருத்துவ குறிப்புகள்

nathan

மூட்டு வாதம் போக்கும், வாய்ப்புண் ஆற்றும், அம்மை நோய் தீர்க்கும்… காளான் தரும் கணக்கில்லா பலன்கள்!

nathan