28 C
Chennai
Wednesday, Nov 13, 2024
625.500.560.350.160.300.053 2
மருத்துவ குறிப்பு

தெரிஞ்சிக்கங்க…கை கழுவுவதற்கு சிறந்த சானிடைசரை தேர்வு செய்வது எப்படி?

கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி கொண்டு இருக்கும் வேளையில் இதற்கு எதிரான தடுப்பூசியோ, தடுப்பு மருந்துகளோ இதுவரை கண்டுபிடிக்கப்படாததால் மக்கள் முன்னேச்சரிக்கை நடவடிக்கைகள் மூலமே கொரோனா பரவலை தடுக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்காக முககவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், கைகளை அடிக்கடி கழுவுதல் போன்ற தடுப்பு நடவடிக்கைகளை அரசுகளும், மருத்துவ நிபுணர்களும் பரிந்துரைத்து உள்ளனர்.

இதில் கைகழுவுதற்கு கிருமி நாசிகளை ( சானிடைசர்) பயன்படுத்துமாறு மருத்துவர்கள் கூறியுள்ளார்.

ஆனால் இந்த சானிடைசர்கள் சில நேரம் தோலுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தி விடுவதால் எந்த வகையான சானிடைசர்களை தேர்வு செய்ய வேண்டும் என்பதில் மக்களுக்கு குழப்பம் ஏற்பட்டு உள்ளது.

அதற்கு அமெரிக்க நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

இதற்கமைய தற்போது எப்படி சிறந்த சானிடைசரை தேர்வு செய்யலாம் என இங்கு பார்ப்போம்.

  • சானிடைசர்கள் குறைந்தபட்சம் 60 சதவீத எத்தில் ஆல்கஹால் அல்லது 70 சதவீத ஐசோபுரொப்பைல் ஆல்கஹால் கொண்டதாக இருக்க வேண்டும்.
  • வடிகட்டிய தண்ணீர், ஹைட்ரஜன் பெராக்சைடு மற்றும் கிளிசரின் போன்ற அங்கீரிக்கப்பட்ட பொருட்கள் அடங்கி இருக்க வேண்டும்.
  • மெத்தனால் அல்லது 1-புரொப்பனால் அடங்கிய சானிடைசர்களை மக்கள் நிராகரிக்க வேண்டும். ஏனெனில் இவை நச்சுத்தன்மை வாய்ந்தவை.
  • உணவு அல்லது குடிக்கும் பானம் இருக்கும் கன்டெய்னர்களில் அடைக்கப்பட்டு உள்ள சானிடைசர்களை, குழந்தைகள் தற்செயலாக குடிக்கக்கூடும் என்பதால் அவற்றை தவிர்க்க வேண்டும்.
  • ஆல்கஹாலுக்கு பதிலாக பென்சல்கோனியம் குளோரைடு கலந்த சானிடைசர்களுக்கு பாக்டீரியா மற்றும் வைரஸ்களை கொல்லும் திறன் குறைவு என்பதால் அவற்றை வாங்க வேண்டாம்.
  • சொந்தமாக வீடுகளில் சானிடைசர்கள் தயாரிக்கக்கூடாது. ஏனெனில் ஏனெனில் வேதிப்பொருட்களின் தவறான சேர்க்கையால் தோலுக்கு மிகுந்த பாதிப்பு ஏற்படும்.
  • கை கழுவுவதற்கு சோப் மற்றும் தண்ணீர் இல்லாதபோது மட்டுமே சானிடைசர்களை பயன்படுத்த வேண்டும்.

Related posts

இப்படி இருந்தால் ஆபத்து? பச்சை உருளைக்கிழங்கு நஞ்சா?

nathan

இரவில் தூக்கம் இல்லாமல் புரண்டு தவிப்பவர்களுக்கு டிப்ஸ்

nathan

வீட்டில் பூச்சி தொல்லை இல்லாமல் தடுப்பதற்கான எளிய இயற்கை வழிமுறைகள்!!

nathan

குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல்ரீதியான பாதிப்புகள் தடுக்க பெற்றோருக்கு அறிவுரை

nathan

உங்களுக்கு தெரியுமா கீழாநெல்லியின் முழு மருத்துவப் பயன்களும் இவை தான்….

nathan

உயரமாக வேண்டுமா? இதோ சில டிப்ஸ்….

nathan

சளி, இருமல் விரட்ட உதவும் எளிய வீட்டு வைத்தியம்!

nathan

உங்களுக்கு அல்சல் இருக்கா? கவலையே வேண்டாம்- இதோ எளிய நிவாரணம்!

nathan

முதுகு வலி விலகுமா?

nathan