25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
sweating
ஆரோக்கியம் குறிப்புகள்

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…உடல் துர்நாற்றத்தை விரட்டுவது எப்படி?

சரியாக கவனிக்கவில்லை என்றால் உடல் நாற்றம் ஒருவருடைய ஒட்டுமொத்த தோற்றத்தையே குறைத்து மதிப்பிட வைக்கும். உடல் நாற்றம் உங்களை பாதிக்காமல் பார்த்துக் கொள்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.

சில சமயம் நீங்க என்ன தான் டியோடரண்ட்டிலேயே குளிச்சாலும் உடல் நாற்றம் மட்டும் போவதில்லை. இதுப்போன்ற தருணங்களில் இதற்கு ஏதாவது நிரந்தரத் தீர்வு கிடைக்காதா என்று நீங்கள் ஏங்குவதுண்டு. அதனால் இதிலிருந்து விடுபட எளிதான 4 வழிகள் உங்களுக்காக இதோ…

தவிர்க்க வேண்டிய உணவுகள்

சில விஷயங்களை நீங்கள் கடைப்பிடிப்பதைத் தவிர உங்களுக்கு வேறு வழியில்லை. பூண்டு, வெங்காயம் ஆகியவற்றை அதிகமாக உண்ணுவதைக் குறைத்துக் கொள்ளுங்கள். இவை சருமத் துவாரங்கள் வழியாக தேவையற்ற துர்நாற்றத்தைப் பரப்பும். வெங்காயத்தை நீங்கள் என்ன தான் வாசனைப் பொருட்கள் சேர்த்து சமைத்தாலும், அவற்றை சற்று விலக்கியே வைப்பது நல்லது.

இருமுறை குளியுங்கள்

அவ்வப்போது பாத்ரூம் போங்க… ஆமாங்க தொடர்ந்து குளியுங்க. வெயில் அதிகம் இருக்கும் நேரங்களில் ஒரு நாளைக்கு இருமுறை குளிப்பது சிறந்தது. இது உங்களின் பல பிரச்சனைகளை தீர்த்து வைக்கும்.

டால்கம் பவுடர்

இன்றைக்கு இந்த விஷயம் மிகவும் குறைத்து மதிப்பிடக்கூடிய ஒன்றாக உள்ளது. ஆனால் இது மிகவும் பலன் தரக்கூடிய ஒன்று. பவுடர் உங்களை வெயில் காலங்களில் புத்துணர்ச்சியுடன் வைப்பதுடன், உங்கள் உடல் நாற்றத்தை குறைக்கவும் உதவும்.

டியோடரண்ட்

வியர்வையை கட்டுப்படுத்தும் டியோடரண்ட்டை உபயோகியுங்கள். இது உங்களை புத்துணர்வு மணத்துடன் வைப்பது மட்டுமல்லாமல், உங்களின் வியர்வையையும் கட்டுக்குள் வைக்கும். வெயில் காலங்களில் உங்களுக்கு அதிகமாக வியர்ப்பதால், உங்கள் உடலில் வாடை வீசும்.

Related posts

உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் குளிர்சாதன வசதி

nathan

ஃபிரிட்ஜில் வைக்க கூடாத உணவுகள்!!

nathan

இந்த பொருட்களில் ஒன்று உங்கள் வீட்டில் இருந்தாலும் உங்களுக்கு எப்பவுமே அதிர்ஷ்டம் வராதாம்! தெரிஞ்சிக்கங்க…

nathan

துரத்தும் முதுமை… காப்போம் இளமை!

nathan

இந்த 5 ராசிக்காரங்க குழந்தை மாதிரி மென்மையான இதயம் கொண்டவங்களாம்…

nathan

இளநரையை போக்கும் உணவுமுறை

nathan

பற்களை பாதுகாகும் மவுத் வாஷ்

nathan

ரமலான் நோன்பு இருக்கும் போது உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை

nathan

உங்கள் தொடை பெருத்து அசிங்கமா இருக்கா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan