garlic vegetable noodles SECVPF
ஆரோக்கிய உணவு

சுவையான இந்தியன் ஸ்டைல் பூண்டு நூடுல்ஸ்

குழந்தைகளுக்கு நூடுல்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் மதிய வேளையில் சாதம் கொடுத்து அனுப்பினால், சாப்பிடாமல் அப்படியே கொண்டு வரும் குழந்தைகளுக்கு மதிய வேளையில் சாப்பிடுமாறு, அவர்களுக்கு நூடுல்ஸ் செய்து கொடுத்தால், டிபன் பாக்ஸ் காலியாகத் தான் வரும்.

இத்தகைய நூடுல்ஸை பலவாறு சமைக்கலாம். இங்கு அதில் ஒரு வகையான பூண்டு நூடுல்ஸை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

Indian Style Garlic Noodles

தேவையான பொருட்கள்:

நூடுல்ஸ் – 1 பாக்கெட்

பூண்டு – 10 பற்கள்

பச்சை மிளகாய் – 3 (நறுக்கியது)

வெங்காயம் – 2 (நறுக்கியது)

கேரட் – 1 (நறுக்கியது)

சோயா சாஸ் – 1 டீஸ்பூன்

மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – 2 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் நூடுல்ஸை வேக வைப்பதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதித்ததும், நூடுல்ஸை போட்டு, 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து, சிறிது எண்ணெய் ஊற்றி நூடுல்ஸ் வேக வைத்து இறக்கி, நீரை வடித்துவிட்டு, பின் குளிர்ந்த நீரால் நூடுல்ஸை அலசி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மிளகாய் தூள், வெங்காயம், பூண்டு சேர்த்து 2 நிமிடம் வதக்கி விட வேண்டும்.

பின்பு சேரட், பச்சை மிளகாய் சேர்த்து, சிறிது உப்பு தூவி நன்கு 3-4 நிமிடம் வதக்கி விட வேண்டும்.

பிறகு அதில் சோயா சாஸ் சேர்த்து கிளறி, வேக வைத்துள்ள நூடுல்ஸை சேர்த்து பிரட்டி இறக்கினால், சுவையான பூண்டு நூடுல்ஸ் ரெடி!!!

Related posts

ஆரஞ்சை விட சிவப்பு மிளகாய் நல்லது? தெரிந்துகொள்வோமா?

nathan

உடலுக்கு எமனாகும் பரோட்டா

nathan

பேரிச்சம்பழம் சாப்பிட்டாலும் பக்கவிளைவுகள் இருக்கா…?அளவாக சாப்பிடுங்கள்…

nathan

சுடுதண்ணீரில் தேன் கலந்து குடித்தால் எடை குறையுமா?

nathan

சுக்கு மல்லி காபி செய்முறை.

nathan

உங்கள் உதடுகள் சாம்பல் நிறத்தில் காணப்படுகின்றனவா?அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

உங்களுக்கு தெரியுமா மக்காசோளம் சாப்பிட்டு குடிக்கக்கூடாத பழச்சாறுகள் என்னென்ன?..!!

nathan

ரத்த ஓட்டத்தை சீராக்கும் வாழைப்பூ

nathan

உருளைக்கிழங்கை எந்த முறையில் சாப்பிட வேண்டும்

nathan