25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
hqdefault
சைவம்

சூப்பரான துவரம் பருப்பு கடைசல்!

வாரம் ஒரு முறை பருப்பு வகைகளை உணவில் சேர்த்து வந்தால், அதிலிருந்து உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, உடல் ஆரோக்கியமாக இருக்கும். இங்கு துவரம் பருப்பைக் கொண்டு எப்படி மதிய வேளையில் சாத்திற்கு ஒரு சைடு டிஷ் செய்வது என்று கொடுத்துள்ளோம். இது மிகவும் ஈஸியானது.

குறிப்பாக பேச்சுலர்கள் செய்வதற்கு ஏற்றது. சரி, இப்போது அந்த துவரம் பருப்பு கடைசலை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

Bachelor Recipe: Toor Dal Kadaisal

தேவையான பொருட்கள்:

துவரம் பருப்பு – 1 கப்

வெங்காயம் – 1 (நறுக்கியது)

தக்காளி – 1 (நறுக்கியது)

பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை

மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்

கடுகு – 1/2 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்

கடலைப்பருப்பு – 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிது

வரமிளகாய் – 3

பூண்டு – 5 பல்

எண்ணெய் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

செய்முறை:

முதலில் வாணலியை அடுப்பில் வைத்து, அதில் துவரம் பருப்பை சேர்த்து லேசாக வறுக்க வேண்டும்.

பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் வறுத்து வைத்துள்ள துவரம் பருப்பை சேர்த்து, 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி, சிறிது மஞ்சள் தூள் சேர்த்து மூடி வைத்து, 3-4 விசில் விட்டு இறக்க வேண்டும்.

விசிலானது போனதும், குக்கரை திறந்து துவரம் பருப்பை லேசாக மத்து கொண்டு கடைந்து கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயத் தூள், வரமிளகாய், கறிவேப்பிலை மற்றும் பூண்டு ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து தாளிக்க வேண்டும்.

பிறகு அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் தக்காளியை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

பின் கடைந்து வைத்துள்ள துவரம் பருப்பை சேர்த்து, தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து, ஒரு கொதி விட்டு இறக்கினால், சுவையான துவரம் பருப்பு கடைசல் ரெடி!!!

Related posts

வாழைக்காய் சிப்ஸ்

nathan

பனீர் கச்சோரி

nathan

பாரம்பரியம் பகரும் ஏழு காய் குழம்பு

nathan

வெண்டைக்காய் வத்தக்குழம்பு

nathan

காளான் டிக்கா

nathan

சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த சாமை அரிசி புலாவ்

nathan

சிம்பிளான… பாலக் பன்னீர் ரெசிபி

nathan

மோர்க் குழம்பு

nathan

கூட்டுக்கறி

nathan