26.2 C
Chennai
Saturday, Dec 21, 2024
01 broasted chicke
அசைவ வகைகள்

பெண்களே கேஎஃப்சி சிக்கனை வீட்டிலேயே செய்ய ஆசையா..?

பலருக்கு கேஎஃப்சி சிக்கனை எப்படி செய்கிறார்கள் என்ற கேள்வி மனதில் எழும். அத்தகையவர்களுக்காக அந்த கேஎஃப்சி சிக்கனை எப்படி வீட்டிலேயே செய்வதென்று தமிழ் போல்ட் ஸ்கை கொடுத்துள்ளது. இதன் செய்முறையைப் பார்த்தால், இவ்வளவு தானா என்று பலர் ஆச்சரியப்படுவோம். ஏனெனில் அந்த அளவில் இந்த ரெசிபியின் செய்முறையானது எளிமையாக இருக்கும்.

சரி, அந்த கேஎஃப்சி சிக்கன் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

சிக்கன் – 1 கிலோ (லெக் பீஸ் அல்லது மார்பக பீஸ்)

இஞ்சி பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்

பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்

சோயா சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்

சில்லி சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்

தக்காளி சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்

மிளகு தூள் – 1 டீஸ்பூன்

உப்பு – 1 1/2 டீஸ்பூன்

தண்ணீர் – 1 கப்

மாவிற்கு…

மைதா – 1 1/2 கப்

முட்டை – 1 (நன்கு அடித்துக் கொள்ளவும்)

மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்

தண்ணீர் – 2 கப்

மிளகு தூள் – 1/2 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

கோட்டிங்கிற்கு…

பிரட் தூள் – தேவையான அளவு

எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

முதலில் சிக்கன் துண்டுகளை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் தக்காளி சாஸ், சோயா சாஸ், சில்லி சாஸ், இஞ்சி மற்றும் பூண்டு பேஸ்ட், மிளகு தூள், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் அடுப்பில் வைத்து, சிக்கன் முக்கால்வாசி வெந்ததும், அதனை இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு மற்றொரு பாத்திரத்தில் மைதா, உப்பு, மிளகு தூள், மஞ்சள் தூள், அடித்து வைத்துள்ள முட்டை மற்றும் தண்ணீர் ஊற்றி சற்று நீர்மமாக கலந்து கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு தட்டில் பிரட் தூளை போட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சிக்கன் துண்டை எடுத்து, மாவில் நனைத்து, பிரட் தூளில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

இதுப்போன்று அனைத்து சிக்கன் துண்டுகளையும் செய்தால், சுவையான கேஎஃப்சி சிக்கன் ரெடி!!!

Related posts

மசாலா மீன் வறுவல்

nathan

பட்டர் சிக்கன் செய்யலாம் வாங்க…

nathan

Easy சிக்கன் 65 : செய்முறைகளுடன்…!

nathan

வஞ்சரம் மீன் ப்ரை – சன்டே ஸ்பெஷல்!

nathan

சூப்பரான முட்டை பணியார குருமா

nathan

முட்டை மசாலா டோஸ்ட்

nathan

இஞ்சி பெப்பர் சிக்கன்

nathan

சுவையான இறால் கிரேவி

nathan

சுவையான காந்தாரி சிக்கன் குழம்பு

nathan