காலையில் ஓட்ஸ் சாப்பிடும் பழக்கம் உள்ளவரா நீங்கள்? அப்படியானால் உங்களுக்காக ஒரு அருமையான ஓட்ஸ் ரெசிபியை இங்கு கொடுத்துள்ளோம். இந்த ஓட்ஸ் ரெசிபியை வாழைப்பழம், ப்ளூபெர்ரி மற்றும் பால் சேர்த்து செய்ய வேண்டும். இது மிகவும் ஈஸியான மற்றும் உடலுக்கு ஆரோக்கியத்தை தருமாறான ரெசிபி.
இப்போது அந்த வாழைப்பழம் மற்றும் ப்ளூபெர்ரி ஓட்ஸ் கஞ்சியை எப்படி சமைப்பதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
ஓட்ஸ் – 50 கிராம்
பால் – 300 மி.லி
வாழைப்பழம் – 2 (மசித்தது)
ப்ளூபெர்ரி – 70 கிராம்
சர்க்கரை – தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து வைத்து, அதில் பால் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.
பாலானது கொதித்ததும், அதில் ஓட்ஸ் சேர்த்து, ஓட்ஸை வேக வைக்க வேண்டும்.
ஓட்ஸானது நன்கு மென்மையாக வெந்ததும், அதில் சர்க்கரையை சேர்த்து கிளறி, பின் அதில் மசித்த வாழைப்பழம் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
பின் அதனை இறக்கி, அதில் ப்ளூபெர்ரியை சேர்த்து பரிமாறினால், ஆரோக்கியத்தைத் தரும் வாழைப்பழம் மற்றும் ப்ளூபெர்ரி கஞ்சி ரெடி!!!