கேரட்டின் கவர்ந்த நிறத்திற்கேற்ப அதன் சத்துக்களும் உடலில் கவரக் கூடியது. கேரட்டில் உள்ள நார்ச்சத்து, பொட்டாசியம், பீட்டா கரோட்டின் போன்றவை மாலைக் கண் நோயை தடுக்கும்.
மேலும் தினமும் ஒரு கப் கேரட் சாப்பிட்டால் 3 வாரங்களில் ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவு 11% குறைவதாக அமெரிக்க ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
கேரட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
சரும ஆரோக்கியம்
கேரட்டிலுள்ள பீட்டா கரோடின் நம் உடலை அடைந்தவுடன் வைட்டமின் ஏ-யாக மாற்றமடைகிறது. இது கண்பார்வையை வலுப்படுத்துவதுடன் சரும பளபளப்பும் தருகிறது.
மாலைக் கண்
வாரம் 3 முறையாவது கேரட் எடுத்துக் கொண்டால் மாலைக் கண் நோயை தடுக்கலாம். அதாவது மாலைக் கண் நோய் வைட்டமின் ஏ குறைபாட்டினால் வருகிறது என்ற நிலையிருக்கும்போது மட்டும் கேரட் பயனளிக்கும்.
இதய நோய்கள் வராது
கேரட்டை சமைத்தோ அல்லது மாத்திரை வடிவமாக சாப்பிடுவதை விட பச்சையாக சாப்பிட்டால்தான் அதன் முழு சத்துக்களை பெற முடியும். பச்சையாக சாப்பிடும்போது இதய நோய்களை தடுக்க முடியும்
மார்பகப் புற்றுநோய்
கேரட் மற்றும் சர்க்கரைவள்ளிக்கிழங்கை உண்பதன் மூலம் மார்பகப் புற்றுநோயில் இருந்து ஆரம்ப நிலையிலேயே விடுபடலாம் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
நீரிழிவு நோய்
நீரிழிவு நோய் உள்ளவர்கள் கேரட்டை பச்சையாக சாப்பிட்டு வந்தால், இன்சுலினை சீராக வைத்துக் கொள்ள உதவும். மலச்சிக்கல் குடலியக்கம் சீராக செயல்பட்டு, மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், தினமும் ஒரு சேரட் சாப்பிட்டு வாருங்கள்.
எலும்புகளின் வலிமை
தினமும் ஒரு கேரட்டை தவறால் சாப்பிட்டு வந்தால் அதில் உள்ள வைட்டமின் சி, எலும்புகளை வலுவாக்கும்.
கொலஸ்ட்ராலின் அளவை குறைக்க
உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள தினமும் இரவில் உணவு உண்ட பின்னர் ஒரு டம்ளர் கேரட் ஜூஸ் குடித்து வர, வேண்டும்.
செரிமான பிரச்சனை
செரிமான பிரச்சனையால் அவஸ்தைப்பட்டால், ஒரு நாளைக்கு இரண்டு கேரட்டை சாப்பிட்டு வந்தால் விரைவில் செரிமான பிரச்சனை நீங்கும்.