Other News

தெரிஞ்சிக்கங்க…தங்கத்தை பிங்க் நிற பேப்பரில் கொடுப்பது ஏன் தெரியுமா?

பொதுவாக தங்கம் வாங்க சென்றாலே நமக்குள் ஆயிரம் சந்தேகம் இருக்கும், அதுவும் முதன்முறையாக தங்கம் வாங்க சென்றால் எப்படி பேரம் பேசுவது என்பது கூட தெரியாமல் ஏதோ பேச வேண்டும் என்பதற்காக, காய்கறிகளை பே ரம் பேசுவது போல பேசுவார்கள். செய்கூலி, சேதாரம், தேய்மானம் என தங்கம் வாங்க செல்லும் போது எதையெல்லாம் கவனிக்க வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.24 கேரட் தங்கம் என்பது முதலீட்டிற்காக மட்டுமே. ஆபரணங்கள் செய்ய பயன்படுத்தாமல் இருப்பதற்கான முக்கிய காரணம் சுத்தமான தங்கமாக இருப்பதால், அதற்கு வளைந்து கொடுக்கும் பதம் அதிகமாக இருக்கும். ஆதலால் ஆபரணம் செய்ய பயன்படுத்தப்படுவது இல்லை. நகைகள் செய்தால் உறுதி தன்மை இல்லாமல் விரைவில் உடைந்து விடும். எனவே தான் 22கேரட் தங்கம் ஆபரணம் செய்ய பயன்படுகிறது.

பழங்காலம் முதல் ஐதீகமாக இருக்கும் ஒன்று, இன்றுவரை கடைபிடிக்கப்படுகிறது. அதன் பின் உள்ள சுவாரஸ்யமான உண்மை, தங்கத்தின் விலை ஏறுமுகமாக நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே தான் உள்ளது. 15 வருடங்களுக்கு முன் தங்கம் 3500 ரூபாயாக இருந்தது. தற்போது ரூ.25,000 விலையை தொட்டுவிட்டது. எத்தனை மடங்கிற்கு உயர்ந்துள்ளது என்பதை நீங்களே பாருங்கள். ஒவ்வொரு வருடமும் தங்கம் வாங்க சொன்னதன் பின்னணி தங்கத்தின் மதிப்பு கூடிக்கொண்டே போகும், லாபமும் கூடும் என்பதாலே அட்சய தி ருதி அன்று தங்கம் வாங்க வேண்டும் என்பது ஐதீகமாக கூறப்பட்டது.அந்த வகையில் தங்கத்தின் மீதான முதலீடு எப்போதும் லாபமே.

 

 

 

சே தா ர ம்
மூன்று பவுன் தங்கம் செய்ய கொடுக்கும் போது அது செய்வதற்கு கூடுதலாக ஒன்று அல்லது ஒன்றரை பவுன் தங்கம் தேவைப்படும், ஏனெனில் வாடிக்கையாளர் கேட்ட தங்கத்தை செய்து கொடுக்க கூடுதலாக தங்கம் அவசியம்.உதாரணத்திற்கு , சரியாக மூன்று பவுன் ஆபரணம் செய்ய வேண்டும் என்றால், நான்குபவுன் அல்லது அதற்கு மேல் எடுத்துக்கொண்டால் மட்டுமே வாடிக்கையாளர் கேட்டமூன்று பவுன் ஆபரணத்தை செய்து முடிக்க முடியும். அதிகப்படியான தங்கம் எடுத்துக்கொள்ள காரணம் கேட்கப்பட்ட டிசைன் செய்யும் போது, தங்க இ ழப்பு ஏற்படலாம். அந்த இ ழப் பிற்கான தொகை தான் நம்மிடம் சே தா ரமாக வசூலிக்கப்படுகிறது.

 

சே தா ர ம்
மூன்று பவுன் தங்கம் செய்ய கொடுக்கும் போது அது செய்வதற்கு கூடுதலாக ஒன்று அல்லது ஒன்றரை பவுன் தங்கம் தேவைப்படும், ஏனெனில் வாடிக்கையாளர் கேட்ட தங்கத்தை செய்து கொடுக்க கூடுதலாக தங்கம் அவசியம்.

உதாரணத்திற்கு , சரியாக மூன்று பவுன் ஆபரணம் செய்ய வேண்டும் என்றால், நான்குபவுன் அல்லது அதற்கு மேல் எடுத்துக்கொண்டால் மட்டுமே வாடிக்கையாளர் கேட்டமூன்று பவுன் ஆபரணத்தை செய்து முடிக்க முடியும். அதிகப்படியான தங்கம் எடுத்துக்கொள்ள காரணம் கேட்கப்பட்ட டிசைன் செய்யும் போது, தங்க இழப்பு ஏற்படலாம். அந்த இழப்பிற்கான தொகை தான் நம்மிடம் சே தா ரமாக வசூலிக்கப்படுகிறது.

 

 

பொடி
தங்கத்தை ஒட்ட பயன்படுத்துவதே பொடி என்பதாகும்.அதாவது வெள்ளி மற்றும் செம்பை சேர்த்து தங்கத்தின் % குறைப்பதாகும். நாள்பட தங்கம் கருத்து போக காரணம், அளவுக்கு அதிகமான பொடி சேர்க்கப்படும் காரணத்தாலே. இதில் இதுபோன்று குறைபாடு இருப்பதால், காட்மியம் கொண்டுவரப்பட்டது. காட்மியத்திலும்(KDM) குறைபாடு உள்ளது, என்னவென்றால் இது தங்கம் செய்பவர்களின் நுரையிரலை பாதிக்கும். அடுத்ததாக துத்தநாகம் மற்றும் இண்டியம் பயன்படுத்தப்பட்டது. இதனை சொக்கத்தங்கத்தில் சால்டரிங்(ஒட்டுதல்) செய்தால் மட்டுமே BIS ஹால்மார்க் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. துத்தநாகம் மற்றும் இண்டியம் கொண்டு சால்டர் செய்யப்பட்டது என்பதை உறுதி செய்ய ஒரு சில சோதனைகளும் உள்ளன. அதன் அடிப்படையிலே BIS வழங்கப்படுகிறது.

தங்கத்தை வாங்கும்போது இளஞ்சிவப்பு நிறத்தாளில் (pink sheet) தருவதன் காரணம்.?
புதிதாக செய்த தங்கம் மஞ்சள் நிறப்பொலிவுடன் காணப்படும், அதை இளஞ்சிவப்பு நிறத்தாளில் வைக்கும் போது அடர் மஞ்சள் மற்றும் அடர் இளஞ்சிவப்பு நிறங்களின் combination கண்களுக்கு விருந்தளிக்கும் விதமாக இருக்கும். அந்த வண்ணங்களின் கூடுகையின் காரணமாகவே pink sheet பயன்படுத்தப்படுகிறது.

 

 

தேய்மானம்
ஆபரணம் அதிகமாக ஏதேனும் ஒரு பொருளுடன் உராயும் போது ஏற்படும் இழப்பே தேய்மானம்.

பொதுவான விழிப்புணர்வு:
தங்கத்தை அணிபவர்கள் முடிந்தவரை அதனோடு கவரிங்,வெள்ளி போன்ற இதரவற்றை அணியாமல் இருப்பது தங்கத்தின் நிறத்தை பாதிப்பிலிருந்து பாதுகாக்கும். வாசனை திரவியங்கள் போன்றவை தொடர்ச்சியாக தங்கத்தின் மீது படும்போதும் தங்கத்தின் பண்பை பாதிக்கும். தங்கத்தை விற்கும் பட்சத்தில் எங்கு வாங்கப்பட்டதோ, அங்கேயே விற்றால் கூடுமான வரை லாபம். வெள்ளியை பொறுத்தவரை உருக்கும் சதவீதம், அதாவது Melting % கேட்க வேண்டும். Melting % = 80% இருந்தால் சாலச்சிறந்தது. உதாரணத்திற்கு வெள்ளி பொருள் ஒன்றை உருக்கிகெட்டியாக, % போடும் போது அதன் Melting% = 80% இருக்க வேண்டும். அதுவே தங்கம் என்றால் 91.6 விட்டு கீழே இறங்க கூடாது.(மீதி 8.4% செம்பு கலவை , இதுவே 22கேரட் ).

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button