25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
23 khatt
அசைவ வகைகள்

சுவையான காஷ்மீரி மட்டன் ரெசிபி

கட்டா மீட் என்பது காஷ்மீரி மட்டன் ரெசிபிக்களில் மிகவும் பிரபலமானது. இந்த ரெசிபியில் எண்ணற்ற மசாலா பொருட்கள் சேர்த்து செய்வதால், இந்த மட்டன் ரெசிபியின் சுவையானது அட்டகாசமாக இருக்கும். மேலும் இது விடுமுறை நாட்களில் சமைத்து சாப்பிட ஏற்ற ஒரு மட்டன் ரெசிபியாகும்.

அதுமட்டுமல்லாமல் இந்த ரெசிபியை சாதம், சப்பாத்தி போன்றவற்றுடன் சாப்பிடலாம். சரி, இப்போது அந்த காஷ்மீரி மட்டன் ரெசிபியான கட்டா மீட் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

மட்டன் – 750 கிராம்

வெங்காயம் – 3 (நறுக்கியது)

சீரகம் – 2 டீஸ்பூன்

கிராம்பு – 4

பட்டை – 1 இன்ச்

கருப்பு ஏலக்காய் – 2

உலர்ந்த வெந்தய இலை – 1 டேபிள் ஸ்பூன்

மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்

காஷ்மீரி மசாலா – 1 டீஸ்பூன்

இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டேபிள் ஸ்பூன்

வர மிளகாய் – 2

பச்சை மிளகாய் – 4 (நீளமாக கீறியது)

மாங்காய் தூள் – 3 டேபிள் ஸ்பூன்

சோம்பு பொடி – 1/2 டீஸ்பூன்

கடுகு எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

கொத்தமல்லி – சிறிது (நறுக்கியது)

உப்பு – தேவையான அளவு

செய்முறை:

முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கிராம்பு, சீரகம், பட்டை மற்றும் கருப்பு ஏலக்காய் சேர்த்த தாளிக்க வேண்டும்.

பின்பு அதில் வெங்காயத்தைப் போட்டு 5 நிமிடம் குறைவான தீயில் வதக்க வேண்டும்.

பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 2-3 நிமிடம் வதக்கி விட வேண்டும்.

அடுத்து உலர்ந்த வெந்தய இலை, மஞ்சள் தூள் மற்றும் காஷ்மீரி மசாலா சேர்த்து, வர மிளகாயை துண்டுகளாக்கி போட்டு, 1 கப் தண்ணீர் ஊற்றி, 2-3 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

பிறகு அதில் மட்டன் துண்டுகளைப் போட்டு, 8-10 நிமிடம் மசாலா மட்டனில் சேரும் வரை நன்கு பிரட்டி விட வேண்டும்.

பின் அதில் 2-3 கப் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி, குக்கரை மூடி 3-4 விசில் விட்டு இறக்க வேண்டும்.

விசிலானது போனதும், குக்கரை திறந்து, அதில் மாங்காய் தூள், பச்சை மிளகாய், சோம்பு பொடி சேர்த்து கிளறி, மீண்டும் குக்கரை அடுப்பில் வைத்து, 2-3 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க விட்டு இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், சுவையான காஷ்மீரி ரெசிபியன கட்டா மீட் ரெடி!!!

Related posts

சுவையான கிராமத்து மீன் குழம்பு

nathan

வாழைப்பழ முட்டை தோசை

nathan

சிக்கன் பிரட்டல்

nathan

பட்டர் சிக்கன் மசாலா

nathan

மீன் கட்லட்,

nathan

முந்திரி சிக்கன் கிரேவி

nathan

கடாய் பன்னீர் கிரேவி

nathan

குளிர்காலத்தில் இவற்றை செய்கிறீர்களா?

sangika

சுவையான ஐதராபாத் மட்டன் மசாலா

nathan