உங்களுக்கு இரட்டை குழந்தைகள் என மருத்துவர்கள் உறுதியளித்து விட்டார்கள் என்றால், உங்கள் மனதில் எழும் எண்ணங்களில், இரட்டை குழந்தை கர்ப்பத்தை பற்றிய கட்டுக்கதைகளும் ஒன்றாகும். இரட்டை குழந்தைகளை கருத்தரிப்பதை பற்றிய கட்டுக்கதைகள் கர்ப்பிணி பெண்களை அச்சுறுத்தும். இந்த நேரத்தில் தான் கர்ப்பிணி பெண்கள் போதிய ஓய்வில் இருந்து, மன அழுத்தம் இல்லாமல் இருக்க வேண்டும். ஆனால் மனதில் இந்த கட்டுக்கதைகள் எழும் போது, அப்படி இருப்பது கொஞ்சம் கஷ்டமே.
பெண்ணின் குடும்பத்தில் ஏற்கனவே இரட்டை குழந்தை பிறந்திருந்தால், அந்த தம்பதிகளுக்கு இரட்டை குழந்தை பிறக்கும் வாய்ப்பு உள்ளது. 10,000-ல் ஒரு பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பிறக்கின்றன. ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் எல்லாம் அரிதாக நடப்பவை. உங்கள் கருவில் இருக்கும் இரட்டை குழந்தைகள் ஒரே மாதிரியாக இருக்கிறதா என்பதை குழந்தைகள் பிறந்தவுடன் DNA சோதனை மூலமாக மட்டுமே கண்டறிய முடியும்.
சரி கருவில் இரட்டை குழந்தைகள் இருப்பதாக சொல்லும் சில கட்டுக்கதைகளைப் பற்றி கொஞ்சம் பார்க்கலாமா?
கட்டுக்கதை #1
பொதுவாக கருவில் இரட்டை குழந்தைகள் இருப்பதாக சொல்லும் சில கட்டுக்கதைகளில் இது முதன்மையானது. பல கர்ப்பிணி பெண்களுக்கு புரட்டல் ஏற்படுவது வழக்கம். ஆனால் உங்களுக்கு புரட்டல் மிகவும் அதிகமாக இருந்தால், உங்களுக்கு இரட்டை குழந்தைகளாக இருக்கலாம்.
கட்டுக்கதை #2
ஒரு தலைமுறை இடைவெளியில் தான் இரட்டை குழந்தைகள் பிறக்கும். இரட்டை குழந்தைகள் பற்றிய மற்றொரு கட்டுக்கதை இது. இருப்பினும் இது எப்போதுமே தாயின் குடும்பத்தை பொறுத்து அமையாது. தந்தையின் குடும்ப பின்னணியிலும் இது ஏற்படலாம்.
கட்டுக்கதை #3
இரட்டை குழந்தைகள் அனைத்தும் குறைப்பிரசவத்தில் பிறக்கும். இரட்டை குழந்தைகளை பற்றிய மற்றொரு பொதுவான கட்டுக்கதை இது. மேலும் இரட்டை கருவை சுமப்பதால், கர்ப்பிணி பெண்கள் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
கட்டுக்கதை #4
இரட்டை குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க வாய்ப்பே இல்லை. குழந்தைகள் பிறந்தவுடன், இந்த கட்டுக்கதையை எண்ணி அனைத்து பெற்றோர்களும் வருத்தப்படுவதுண்டு. இருப்பினும் இரண்டு குழந்தைகளுக்கும் தாய்ப்பால் கொடுப்பது சாத்தியமே.
கட்டுக்கதை #5
இரட்டை குழந்தைகள் பற்றிய மற்றொரு கட்டுக்கதை, பிறப்பு குறைபாடுகள். அதிலும் இரண்டு குழந்தைகள் இல்லாவிட்டாலும் ஒன்று மட்டுமாவது குறையுடன் பிறக்கும்.
இரட்டை குழந்தைகள் பெற்றுக் கொள்வது பற்றிய சில கட்டுக்கதைகளே இவைகள். இதனை பெரிதாக எடுத்துக் கொள்ள கூடாது. காரணம் இவைகள் கர்ப்ப காலத்தில் உங்கள் மனநிலையை பாதிக்கும்.