25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
baby eating
மருத்துவ குறிப்பு

தெரிஞ்சிக்கங்க… செல்ல குழந்தைக்கு முத்துப்பல் முளைக்க ஆரம்பிக்குதா?

குழந்தைகள் வளர ஆரம்பிக்கும் போது, ஒரு கட்டத்தில் அவர்களுக்கு பற்கள் முளைக்க ஆரம்பிக்கும். அப்படி குழந்தைகளுக்கு பற்கள் ஆரம்பிக்கும் போது, அவர்களின் ஈறுகளில் அரிப்புக்கள் மற்றும் வலி ஏற்படக்கூடும். மேலும் எதையாவது கடித்துக் கொண்டே இருக்க வேண்டுமென்று தோன்றும். அதுமட்டுமல்லாமல், அவர்களுக்கு உடலில் ஒருசில பிரச்சனைகளும் ஏற்படக்கூடும்.

அதில் மிகவும் பிரபலமான அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான் வயிற்றுப்போக்கு. ஏனெனில் பற்கள் முளைக்க ஆரம்பிக்கும் போது, குழந்தைகள் தங்கள் கைகளுக்கு கிடைத்த பொருட்களையெல்லாம் வாயில் வைத்து கடிக்க ஆரம்பிப்பதால், அதன் மூலம் வயிற்றில் தொற்றுகள் ஏற்படும். இதுப்போன்று பல் முளைக்க ஆரம்பிக்கும் போது, குழந்தைகள் பல பிரச்சனைகளை சந்திப்பார்கள்.

இங்கு குழந்தைகளுக்கு பல் முளைக்க ஆரம்பிக்கும் போது சந்திக்கக்கூடிய பிரச்சனைகளையும், அதற்கான தீர்வுகளையும் கொடுத்துள்ளோம். அதைப் பார்ப்போமா!!!

வயிற்றுப்போக்கு

குழந்தைகளுக்கு பல் முளைக்க ஆரம்பிக்கும் போது, வயிற்றுப்போக்கு ஏற்படக்கூடும். அப்படி உங்கள் குந்தைக்கு வயிற்றுப்போக்கானது திடீரென்று ஏற்பட்டால், அவர்களுக்கு உடனே ORS கொடுங்கள். இல்லாவிட்டால், குழந்தைகளின் உடலில் நீர்ச்சத்து விரைவில் குறைந்துவிடும்.

தொடர்ச்சியான அழுகை

குழந்தைகள் தொடர்ந்தோ அல்லது அவ்வப்போதோ காரணமின்றி அழ ஆம்பித்தால், அவர்களுக்கு பற்கள் முளைக்க ஆரம்பிக்கிறது என்று அர்த்தம். அப்போது அவர்களின் கவனத்தை திசைத்திருப்பும் வகையில் தொட்டிலை ஆட்டிவிட்டோ அல்லது தாலாட்டு பாடவோ செய்யலாம். இல்லாவிட்டால், உங்கள் கைகளை நன்கு சுத்தமாக நீரில் கழுவிவிட்டு, பின் அவர்களின் ஈறுகளை மசாஜ் செய்துவிடலாம்.

காய்ச்சல்

குழந்தைகளுக்கு பல் முளைக்க ஆரம்பிக்கும் போது, அவர்கள் கண்ட கண்ட பொருட்களை வாயில் வைப்பதால், வயிற்றில் தொற்றுகள் ஏற்பட்டு, சில சமயங்களில் காய்ச்சலுக்கு கூட உள்ளாவார்கள். எனவே அப்போது அவர்களுக்கு மருத்துவர் பரிந்துரைத்த காய்ச்சல் மாத்திரையைக் கொடுங்கள். ஒருவேளை காய்ச்சல் அளவுக்கு அதிகமாக இருந்தால், மருத்துவரிடம் உடனே அழைத்துச் செல்லுங்கள்.

கண்டதைக் கடிப்பதால் ஏற்படும் விபத்துக்கள்

குழந்தைகளுக்கு பற்கள் முளைக்க ஆரம்பிக்கும் நேரத்தில், அவர்கள் கைகளுக்கு எது கிடைத்தாலும், அது உடனே அவர்களின் வாய்க்கு தான் செல்லும். அதிலும் அவர்கள் கடினமான பொருட்களைக் கூட கடிக்க நேரிடுவதால், சற்று கவனமாக இருக்க வேண்டும். மேலும் அவர்களுக்கு தேன் நிரப்பப்பட்ட டீத்திங் ரிங்ஸை கைகளில் மாட்டிவிட்டால், அவர்கள் அதை வாயில் போட்டு மென்று கொண்டிப்பார்கள்.

உணவுகளைத் தவிர்ப்பார்கள்

பற்கள் முளைக்க ஆரம்பிக்கும் காலத்தில், குழந்தைகள் உணவுகளை உட்கொள்ளாமல் தவிர்ப்பார்கள். ஆகவே அப்போது, அவர்களுக்கு வெதுவெதுப்பான பால் நிரப்பப்பட்ட பால் பாட்டிலை குழந்தைகளுக்கு கொடுத்தால், வெதுவெதுப்பான பாலானது, குழந்தைகளின் ஈறுகளில் உள்ள வலியை தணித்து, அவர்கள் பால் பாட்டிலின் நிப்புளை மெல்லவும் வசதியாக இருக்கும்.

வாய்வு தொல்லை ஏற்படும்

குழந்தைகளுக்கு வயிற்றில் தொற்றுகள் ஏற்பட்டால், வாய்வுத் தொல்லையும் அதிகரிக்கும். அப்படி உங்கள் குழந்தை வாய்வு தொல்லையால் அதிகம் அவஸ்தைப்பட்டால், அவர்களை குப்புற படுக்க வையுங்கள். இதனால் அவர்களின் உடலில் உள்ள வாயுவானது வெளியேறிவிடும்.

இரவில் படுக்கவேமாட்டார்கள்

பல் முளைக்கும் காலத்தில் குழந்தைகள் இரவில் படுக்கவே மாட்டார்கள். அழுது கொண்டே இருப்பார்கள். இருப்பினும் அவர்களை உங்களின் அருகில் படுக்க வைத்து அணைத்து, அவர்கள் வாயில் போட்டு மெல்வதற்கு ஏற்றவாறு மென்மையான டீத்திங் ரப்பரை கையில் கொடுத்துவிடுங்கள்.

Related posts

மருத்துவர்களின் எச்சரிக்கை! சி.டி ஸ்கேன் வேண்டாம்! இவ்வளவு பாதிப்பை ஏற்படுத்துமா?

nathan

உங்க குழந்தைக்கு சளி, இருமல், காய்ச்சலா? அப்ப உடனே இத படிங்க…

nathan

தெரிஞ்சிக்கங்க…தேமல் நோய் வருவதற்கான காரணமும்.. தீர்க்கும் வழிமுறைகளும் இதோ

nathan

கொரோனாவில் மீண்டவர்கள் பூஞ்சை தொற்று உருவாகும் அபாயம்.. கண்களில் கவனம்!

nathan

பெற்றோர்களே ஆட்டிஸம் பாதித்த குழந்தை மீது அன்பு செலுத்துவது எப்படி

nathan

மனஅழுத்தம் உடையோர் வெளிப்படுத்தும் நடவடிக்கைகள்

nathan

பேச்சை குறையுங்கள்… பிரச்சனைகள் தீரும்…

nathan

துளசி நீரில் மஞ்சளினை கலந்து குடித்தால் நடக்கும் அற்புதம் என்ன தெரியுமா?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…பிரசவத்திற்கு பின் மாதவிடாய் சுழற்சியில் ஏற்படும் மாற்றங்கள்

nathan